Published:Updated:

பேர் சொல்லும் பிள்ளை!

பேர் சொல்லும் பிள்ளை!

பேர் சொல்லும் பிள்ளை!

பேர் சொல்லும் பிள்ளை!

Published:Updated:

பேர் சொல்லும் பிள்ளை!

பேர் சொல்லும் பிள்ளை!

கிரிக்கெட்டில், விளையாடி சாதனை படைத்தவர்களைப் பார்த்து இருப்பீர்கள். ஆனால், கரூர் பரணி பார்க் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன் விக்னேஷ்வரன், கிரிக்கெட்டை வைத்து தேசியச் சாதனையே செய்து அசத்திவிட்டான். எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ரொம்ப நாளாவே எதாச்சும் பெருசா செய்யணும்னு முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தேன். இது வரைக்கும் மத்தவங்க செஞ்சு இருக்கிற தேசியச் சாதனைகளைப் பட்டியல் போட்டுப் பார்த்து, நமக்கு எது செட் ஆகும், எதை முறியடிக்கலாம்னு ஆராய்ஞ்சேன். இதுக்கு முன்னாடி உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பையன், 46 நொடிகள்ல 100 கிரிக்கெட் பிளேயர்கள் பெயரைச் சொல்லி சாதனை செய்திருக்கான். அதை முறிய டிக்கணும்னு முடிவு செஞ்சேன். ரெண்டு மாசமா தியானம், யோகானு பயிற்சி எடுத்துக்கிட்டு ரெடி ஆனேன். 36.69 நொடிகள்ல 115 கிரிக்கெட் பிளேயர்ஸ் பெயர்களைச் சொல்லி பழைய சாத னையை முறியடிச்சு, 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ல இடம் பிடிச் சுட்டேன்''- உற்சாகமாகச் சொல்கிறான் விக்னேஷ்.

''அடுத்து என்ன பண்ணப் போற?'' என்று கேட்டால், ''முன்னாடியே சொல்லிட்டா நெனைச்சது நடக்காது சார்''- கண்களைச் சிமிட்டியபடியே குறும்பாகச் சிரிக்கிறான்.

சவால்... சபாஷ்... சந்தோஷ்!

பேர் சொல்லும் பிள்ளை!

திருச்சி கமலா நிகேதன் பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவன் சந்தோஷ் குமார், டேக்வாண்டோ தர்காப்புக் கலையில்  திறமை காட்டுகிறார். கடந்த ஆண்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் நடந்த தேசிய அளவிலான பைக்கா விளையாட்டுப் போட்டிகளில் சார்தான் வின்னர். கடந்த ஆண்டுக்கான திருச்சி மாவட்டத்தின் 'சிறந்த விளையாட்டு வீரர்’ என்ற விருதையும் தட்டி இருக்கிறார்.

''அப்பாவும் டேக்வாண்டோ மாஸ்டர். அவரைப் பார்த்துதான் எனக்கு ஆர்வம் வந்துச்சு. மூணு வயசுலேயே டேக்வாண்டோ கத்துக்க ஆரம்பிச்சுட்டேன். அஞ்சு வயசுலேயே மாநில அளவிலான போட்டியில கலந்துக்கிட்டேன். ஆனா, ஜெயிக்கத்தான் முடியல. 11 வருஷத்துல கிட்டத்தட்ட 100 போட்டிகள்ல கலந்துக்கிட்டு, தேசிய அளவில் ரெண்டு தங்கம், ஒரு வெண்கலம் வாங்கி இருக்கேன். லேட்டஸ்ட்டா ஆந்திராவுல விளையாடினதுதான் ரொம்பக் கஷ்டமான போட்டி. ரொம்ப நேரம் போராடியும் மேட்ச் டிரா ஆகிடுச்சு. அப்புறம் எக்ஸ்ட்ரா ரவுண்ட் வெச்சாங்க. எதிர்த்துப் போட்டியிட்ட பையன், பார்வையாளர்கள், சிறப்பு விருந்தினர், ரெஃப்ரீ எல்லாருமே ஆந்திரா. ஃபுல் சப்போர்ட்டும் அந்தப் பையனுக்குத்தான். ரொம்பப் போராடித்தான் ஜெயிச்சேன்'' என்கிற சந்தோஷ்குமாரின் முகத்தில் அவ்வளவு திருப்தி!

மந்திரப் புன்னகை!

பேர் சொல்லும் பிள்ளை!

து ஒரு மேஜிக் ஷோ. பின்னணியில் ஒலிக்கும் மேற்கத்திய இசைக்கு  ஏற்ப ஆடியவாறே அந்தரத்தில் மிதக்கும் டம்ளர், குடிக்கக் குடிக்கக் குறையாத பால், காற்றில் நடனம் ஆடும் கயிறு எனப் பார்வையாளர்களைப் பரவசப்படுத்துகிறார் மேஜிக் மேன். மேஜிக் ஷோவின் முடிவில், '20 வயதான திருச்சியைச் சேர்ந்த அவர் பெயர் குரு. பொறியியல் கல்லூரி மாணவர்’ என்று அறிவிக்கப் பட, கை தட்டலால் அரங்கம் அதிர்கிறது.

''எட்டாவது படிக்கும்போது புக்ல படிச்ச மேஜிக் ஒண்ணை நண்பர்கள் மத்தியில் செஞ்சு காமிச்சேன். ரொம்பவே சந்தோஷப்பட்டாங்க. அந்த சந்தோஷத்தை எல்லோருக்கும் கொடுத்தா என்னன்னு தோணுச்சு. முழு மூச்சா இதுல இறங்கிட்டேன்'' என்று சொல்லும் குருவின் விருப்பம், விஞ்ஞானி ஆவதுதானாம்.

''நான் ஒன்பதாவது படிக்கும்போதே என்னோட சிறு சிறு கண்டுபிடிப்புகளுக்காக, சென்னை ஐ.ஐ.டி-யில் 'இளம் விஞ்ஞானி’ விருது வாங்கி இருக்கேன். தவிர சிலம்பமும் நல்லாச் சுத்துவேன்'' என்று வியக்கவைக்கிறார்.

''எங்களோடது மிடில் கிளாஸ் ஃபேமிலி. மேஜிக் ஷோக்கள்ல வர்ற வருமானத்தைவெச்சுத்தான் பள்ளிக் காலத்தில இருந்து படிக்கிறேன்'' எனப் பொறுப்புடன் பேசும் குரு, தன்னுடைய தங்கையின் படிப்புச் செலவையும் கவனித்துக்கொள்கிறார்.

''இதுவரைக்கும் பொதிகை, ஜெயா, விஜய்னு பல சேனல்கள்லேயும் புரொகிராம் பண்ணியாச்சு. மலேசி யாவுல இருந்து எல்லாம் புரொகிராம் பண்ணக் கூப்பிடுறாங்க. வாழ்க்கை சந்தோஷமாப் போய்கிட்டு இருக்கு பாஸ்!'' என்கிறார்.

தொகுப்பு: ஆ.அலெக்ஸ் பாண்டியன்
படங்கள்: ஜெ.வேங்கடராஜ், ர.அருண் பாண்டியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism