Published:Updated:

துப்பாக்கித் தூக்காத அர்ஜுன்...

விஜயகாந்துடன் விளையாடும் வடிவேலு!

துப்பாக்கித் தூக்காத அர்ஜுன்...

விஜயகாந்துடன் விளையாடும் வடிவேலு!

Published:Updated:
##~##

''சுவாமிமலை பக்கத்துல உள்ள ஒரு கிராமத்துல ரம்பா, சிம்ரன்ல இருந்து அனுஷ்கா, அமலாபால் வரைக்கும் எல்லா நடிகைகளும் இருக்காங்களாம். போய்ப் பார்த்துட்டு வாங்க!'' - காலையிலேயே அலுவலகத்தில் இருந்து வந்த போன் என்னை உற்சாகப்படுத்த, ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் கிளம்பினேன்.

 சுவாமிமலை கடைத் தெருவில் 'ஏழுமாந்திடலுக்கு எப்படிப் போகணும்?’ என்று விசாரிக்க... ஏற இறங்கப் பார்த்தவாறே வழி சொன்னார்கள். சுவாமிமலை ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் ஒரே ஒருவர் மட்டும் செல்லக் கூடிய அளவுக்கு ஒரு பாதை. அது வழியாகச் சென்று ஏழுமாந்திடலை அடைந்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

துப்பாக்கித் தூக்காத அர்ஜுன்...

ஊருக்கு வெளியே நின்றுகொண்டு இருந்த நரிக்குறவப் பெண்மணி ஒருவரிடம், ''அசின், த்ரிஷா எல்லாம் எங்கே இருக்காங்க?'' என்றேன். பதிலுக்கு அவரோ, ''இதோ, இதான் சாமி திரிசா... அதோ, அதான் சாமி அசினு!' என்று கை காட்ட... அவர் காட்டிய அசின் மூக்கு ஒழுகிய நிலையில் நின்றுகொண்டு இருந்தது. த்ரிஷாவோ ஆடையே இல்லாமல் ஒரு பெண்மணியின் இடுப்பில் உட்கார்ந்து இருந்தது. அப்போதுதான் நான் 'பல்ப்’ வாங்கியது புரிந்தது.

''சாமி... இந்த ஊர்ல நாங்க நரிக்குறவ சனங்க 30 குடும்பங்க இருக்கோம். 25 வருஷமாவே எங்க ஊர்ல பொறக்குற புள்ளைகளுக்கு நடிக, நடிகைங்க பேர்தான் வெப்போம். என் பேரு கூட சுகன்யா. இதோ, இவ பேரு குஷ்பு' என்றார் அந்தப் பெண்மணி. நயன் தாரா, சினேகா, ஜோதிகா, சிம்ரன், ரம்பா, நமீதா, ஸ்ரேயா என நீண்ட வரிசையில் விஜய், அஜீத், ஜீவா, சூர்யா, பரத், விக்ரம், அர்ஜுன், சரத்குமார் என்று கோலிவுட்டே சங்கமித்து இருந்தது. ''இருங்க... ரஜினிகாந்த்தைக் கூட்டிக்கிட்டு வர்றோம்'' என்று ஓடினார்கள் சாந்தனுவும் சிம்புவும். நடிகர் ரஜினியைவிட இந்த ரஜினி ரொம்ப 'பிகு’ பண்ண... ரொம்பக் கஷ்டப்பட்டுதான் சூப்பர் ஸ்டாரை கேமராவில் பிடிக்க முடிந்தது.

துப்பாக்கித் தூக்காத அர்ஜுன்...

விஜய்யைக் கூப்பிட்டு, ''உனக்கு எந்தப் படம் பிடிக்கும்?'' என்றோம். 'சொறா, வேட்டக்காரன், கில்லி’ எனத் தன்னுடைய படங்களாகவேபட்டியலிட் டார். விக்ரமை போட்டோ எடுக்க அழைக்க... 'ஓ போடு’ ஸ்டைலில் போஸ் கொடுத்தார். அர்ஜுனிடம் ஒரு துப்பாக்கியைக் கொடுத்து (பொம்மை துப்பாக்கிதாங்க...) போஸ் தரச் சொன்னோம். துப்பாக்கியைக் கண்டவுட னேயே ஓட்டம் எடுத்தார் ஆக்ஷன் கிங்.

துப்பாக்கித் தூக்காத அர்ஜுன்...

ஒரு குடிசையில் இருந்து வெளியே வந்த அனுஷ்காவுக்கு நான்கு வயதுதான் இருக்கும். அதன் பக்கத்தில் இருந்தது தமன்னாவாம். கோலிவுட்டுக்குப் போட்டியாக வெங்கடேஷ், சிரஞ்சீவி, நாகார்ஜுனா என டோலிவுட்டும் அங்கு விளையாடிக்கொண்டு இருந்தது.  படையப்பா, அருந்ததி, குட்டி என, படப் பெயர்களையும் விட்டுவைக்கவில்லை.

''குழந்தை பிறக்கிற சமயத்துல பக்கத்துல இருக்கிற தியேட்டர்ல யார் நடிச்ச படம் ஓடுதோ, அவங்க பேரைவெச்சுடுவோம். சில சமயங்கள்ல படத்தோட பேரையேவெச்சுடுவோம்'' என்று விவரம் சொல்கிறார்கள்.

''ஏய் வடிவேலு... வா, விளையாடலாம்!'' - கிழிந்த டவுசருடன் விஜயகாந்த் கூப்பிட... உற்சாகமாகக் கையைப் பிடித்துக்கொண்டு ஓடுகிறார் வடிவேலு!

- க.ராஜீவ்காந்தி, படங்கள்: ந.வசந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism