Published:Updated:

வலையோசை : என்.உலகநாதன்

வலையோசை : என்.உலகநாதன்

வலையோசை : என்.உலகநாதன்

எந்த விதத்தில் உயிரை வாங்கினேன்?

சென்ற வாரம் முழுவதும் தாய்லாந்தில் இருந்தேன். குடும்பத்துடன் விடுமுறைக்காகச் சென்றிருந்தேன். தாய்லாந்து போகும் முன் நண்பர் களிடம் என் பயணத்தைப் பற்றிக் கூறியபோது அனைவரும் கேட்ட ஒரே கேள்வி, ''பாங்காக்குக்குக் குடும்பத்துடன் போகிறீர்களா'' என்பதுதான். அவர்கள் கேட்டக் கேள்வியின் அர்த்தம், அங்கே சென்றவுடன்தான் எனக் குத் தெரிந்தது. தாய்லாந்தில்

வலையோசை : என்.உலகநாதன்

எல்லா ஹோட்டலிலும் என்ன இருக்கிறதோ இல்லையோ ரிசப்ஷனில் நிறைய ஆல்பம்வைத்து இருக்கிறார்கள். எல் லாம் விதவிதமானப் பெண்கள் போட்டோக்கள்தான். எல்லா கார் டிரைவர் களும் கேட்கும் முதல் கேள்வி 'அது’வாகத்தான் இருக்கும். நல்லவேளை நாங்கள் காரில் பயணிக்கவில்லை. கம்பெனியே பெரிய டயோட்டா வேனும், கைடும் ஏற்பாடு செய்து இருந்ததால், அந்தத் தொல்லை இல்லை. ஆனால், நம்ம ஊர் ஆட்டோ ரிக்ஷா போல் ஒரு வாகனம் உள்ளது. அதன் பெயர் 'டுக் டுக்’. அவர்களிடம் இருந்து தப்பிப்பதுதான் பெரிய விஷயமாக உள்ளது.

எனக்கும் ஒரு 'டுக் டுக்’ டிரைவருக்கும் நடந்த உரையாடல்:

''சார், ஏதாவது பார்க்கணுமா?''

''இல்லை ஒன்றும் வேண்டாம்.''

''ஒண்ணும் வேணாம்னா, இரவு 10 மணிக்கு ஏன் இந்தப் பக்கம்  போறீங்க?''

''சும்மா வாக்கிங் போறேன்.''

''எதுக்கு?''

''சும்மா ஹெல்த் நல்லா இருக்கத்தான்.''

''ஏற்கெனவே பார்க்க ஹெல்தியாத்தானே இருக்கீங்க?''

''இருந்தாலும் சாப்பிட்டது செரிக்க வேணும்ல. அதுக்காகத்தான்.''

''ஹோட்டல்ல ஜிம் இருக்குல்ல... அங்க போக வேண்டியதுதானே வாக்கிங்.''

''என் இஷ்டம்.''

''ஒண்ணும் பார்க்கப் பிடிக்கல. எங்கேயும் போக விருப்பம் இல்ல. டான்ஸ் பார்க்க வரப் பிடிக்கல. ரூம் உள்ளேயே இருந்து தொலைய வேண்டியதுதானே? ஏன் வெளியே வந்து எங்க உயிரை வாங்கறீங்க.''

நான் எந்த விதத்தில் அவருடைய உயிரை வாங்கினேன் என்பது இன்றுவரை எனக்குப் புரியவில்லை!

  மீசை என்பது ஆண்மையின் வெளிப்பாடா?

சிறு வயதில் என் நண்பரின் அப்பா ஒருவர் மிகப் பெரிய மீசைவைத்து இருப்பார். பார்க்க கம்பீரமாக... அழகாக... ஆனால், சற்று பயமாக இருக்கும். வீரப்பன் மீசை, நடிகர் நெப்போலியன் மீசை, பாரதியார் மீசை என, எனக்குப் பிடித்த மீசைகளின் பட்டியல் ஏராளம். 'எப்போது நாம் பெரியவன் ஆவோம்...

வலையோசை : என்.உலகநாதன்

எப்போது நமக்குப் பெரிய மீசை வளரும்’ என்று ஆவலாகக் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டே இருப்பேன். 10-வது படிக்கும்போது, அந்த வயதில் தெரிந்து கொள்ளக்கூடாத பல விஷயங்கள் தெரியவந்தது. ஆனால், பாழாய்ப்போன இந்த மீசை மட்டும் வளரவே இல்லை. மீசை அழகாக இருக்கும் பையன்களைத்தான் பெண்கள் சைட் அடிப்பார்கள் என்று பள்ளி நண்பர்கள் வேறு சொல்லி பயமுறுத்தி வந்தார்கள். அதனால் எனக்கு அதைப் பற்றிய கவலை இருந்துகொண்டே இருந்தது.

பிறகு ஒருவழியாக ப்ளஸ் டூ படிக்கும்போது லேசாக மீசை அரும்ப ஆரம்பித்தது. நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அரும்பிய மீசையை அடிக்கடி கையால் முறுக்குவது போல் செய்துகொண்டே இருப்பேன்.  பெண்கள் எல்லாம் என் மீசையையே பார்ப்பதாக நினைத்துக்கொள்வேன். இது எல்லாம் அப்போது! ஆனால், சமீப காலமா என்ன பிரச்னைனா... மீசையில் ஒரு சில வெள்ளை முடிகள் தெரிய ஆரம்பித்து எரிச்சலுக்கு உள்ளாக்குகிறது. சரி... இந்த வெள்ளை முடிக்கு என்ன பண்ணலாம்? ஒரே யோசனை. டை அடிக்கலாம்னா யாரு அதை டெய்லி தடவுறது? இப்படிப் பல வகையில் சிந்தித்துக்கொண்டு இருந்த நான், திடீரென ஒரு யோசனை தோன்ற அதைச் செயல்படுத்தலாம்னு நினைச்சேன். வேற ஒண்ணுமில்லை. மீசையை அப்படியே எடுத்தா என்ன?

சிறு வயதில் ஒருமுறை ரஜினியின் மீசை இல்லாத போட்டோவைப் பார்த்து எனக்கு அழுகையே வந்துவிட்டது. நடிகர்கள் என்றால் படத்தில் எப்படி இருப்பார் களோ அப்படியே நேரிலும் இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு இருந்த காலம் அது. இப்படி அடுத்தவர்கள் மீசைக்கே அழும் நான், ஏன் என் மீசையை எடுக்கத் துணிந்தேன் என்று தெரியவில்லை. சரி, ஒரு மாறுதலுக்காக எடுத்துவிடலாம் என நினைத்து வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. முதல் நாள் எடுக்க நினைத் தேன். என்னால் கொஞ்சமாக ட்ரிம் மட்டுமே செய்ய முடிந்தது. பிறகு அடுத்த நாள் இன்னும் கொஞ்சம். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாகத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, ஒருவழியாக நேற்று முன் தினம் நெஞ்சம் படபடக்க மீசையை முழுவது மாக எடுத்துவிட்டேன். எடுத்து முடித்தவுடன் கண்ணாடியில் பார்த்தேன். எனக்கே என்னைப் பிடிக்கவில்லை. இனி ஒன்றும் செய்ய முடியாது, எடுத்தது எடுத்ததுதான்! 

வலையோசை : என்.உலகநாதன்
அடுத்த கட்டுரைக்கு