Published:Updated:

என் ஊர்!

மூணு மாசமும் அரவான்!

##~##

''எங்க பெயரைத் தனியாச் சொன்னா பலருக்கும் எங்களைத் தெரியாது. திருகருகாவூர் சகோதரர்கள்னு சொன்னாபோதும், எங்க பெயரைச் சொல்லிடுவாங்க. அந்த விதத்தில் எங்களுக்கு ரொம்பப் பெருமைங்க'' - பெருமிதம் பொங்கப்  பேசுகிறார்கள் நாகஸ்வர வித்வான்கள் டி.கே.ரமணன்-டி.கே.சரவணன்.

 ''எங்க ஊருல குடிகொண்டு, ஊரு உலகத்து மக்களுக்கு எல்லாம் மழலைச் செல்வத்தை வாரி வழங்கிக்கிட்டு இருக்கிற எங்க அம்மா, கர்ப்பரட்சாம்பிகைத் தாயை விட்டுட்டு எங்க ஊரைப் பற்றிப் பேசவே முடியாதுங்க. இன்னிக்குத் திருக்கருகாவூரைப் பட்டிதொட்டிக்கெல்லாம் கொண்டுபோனது அந்த அம்மனோட அருள்தான். எங்க ஊரோட பெயருக்கான காரணமும் அம்மாதான். திரு கரு கா

என் ஊர்!

ஊர்... அதாவது, கருவைக் காத்து ரட்சித்த ஊர் என்பதால்தான் இப்படி ஒரு பெயர் வந்துச்சு.

எங்கள் ஊர் கோயில், மன்னர்கள் ஆட்சிக் காலத்துலயே புகழ்பெற்று விளங்கியதால, அப்ப இந்தப் பகுதி முழுக்கவே பிராமணர்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்துச்சு. அழகான அக்ரஹாரங்களால சூழப்பட்டு அமைதியான கோயிலா அமைஞ்சு இருந்துச்சு. எங்க தாத்தா காலத்துல எல்லாம் பந்துலு அய்யர் என்பவர் கட்டுப்பாட்டுலதான் ஊரே இருந்தது. அப்பவே எங்க ஊர்ல இருந்த சிவக்கொழுந்து என்ற நாகஸ்வரக்காரரும் சிங்காரம் பிள்ளை என்ற தவில் வித்வானும் ரொம்ப ஃபேமஸ்!

ஊர்த் திருவிழாக்கள்னு எடுத்துக்கிட்டீங்கனா வருஷா வருஷம் தை மாசத்துல மாரியம்மன் கோயில்ல நடக்கிற பால்குட விழா முக்கியமானது. அந்த விழா எப்படா வரும்னு காத்துக்கிட்டு இருப்போம். ஏன்னா... அதுலதான் கூத்துக் கட்டி நாடகம் நடத்துவாங்க. ஆடி மாசத்துல திரௌபதி அம்மனுக்கு நடத்துற விழாவுக்குக் காப்புக் கட்டினா... திருவிழா நடக்க மூணு மாசம் ஆகும். அந்த மூணு மாசமும் தினமும் 'அரவான் களப்பலி’ங்கிற மகாபாரதத்து நாடகத்தை நடிச்சுக் காட்டுவாங்க. கொஞ்சம் கதை சொல்றது, அப்புறம் அதையே நடிச்சுக் காட்டுறதுனு போகும். பாரம்பரியமா இன்னமும் நடக்கிற அந்த விழாவை, இப்ப 22 நாளுல முடிச்சுடறோம். இதை எல்லாம்விட, பெரிய திருவிழானா அது பெரிய கோயிலுக்கு (கர்ப்பரட்சாம்பிகை கோயில்) செய்யற வைகாசி பிரம்மோற்சவம்தான். இந்த விசேஷத்துக்கு வர்ற காஞ்சி சங்கராச்சாரியார் இங்கேயே மூணு மாசம் தங்கி தரிசிச்சுட்டு பக்தர்களுக்கும் ஆசி வழங்குவார்.  

என் ஊர்!

விவசாயம்தான் ஊருக்கு முக்கியத் தொழில். அப்ப எங்களோட மிகப் பெரிய பொழுதுபோக்கு சினிமாதான். பாபநாசத்துல கோல்டன் டாக்கீஸ், கபிஸ்தலத்துல ஸ்ரீதரன் டாக்கீஸ்னு ரெண்டு டூரிங் டாக்கீஸ்கள் இருந்துச்சு. ராத்திரி, திண்ணைல படுத்து இருக்கிற நாங்க ரெண்டு பேரும் வீட்டுக்குத் தெரியாம சினிமாவுக்குப் போயிட்டு வந்துடுவோம். புதுப் படங்கள் ரிலீஸ் ஆகும்போது குடும்பத்தோட குதிரை வண்டி கட்டிட்டுப் போயி, ஒரே நாள்ல ரெண்டு மூணு படங்கள் கூட பார்த்து இருக்கோம்.

என் ஊர்!

அக்ரஹாரத்துல வீடுகளுக்குப் பின்னாடியே வாய்க்கால் ஓடும். அதனால வீட்டுக் கொல்லையிலேயே தோட்டம் போட்டுக்குவோம். அப்ப எங்க ஊரில் போண்டா கடை, கோவண்ணா கடைனு ரெண்டு காபி கிளப் இருந்துச்சு. அது ரொம்ப ஃபேமஸ். இந்த ஊர்ல இருந்து போயி பிர்லா கம்பெனியில் எம்.டி. ஆன வைத்யநாதனும் ரொம்பப் பிரபலம்.

சாப்பாடுனு வந்துட்டா யார் வீட்டுல வேணாலும் போய் சாப்பிடலாம். திடீர்னு விருந்தாளி வந்துட்டா கவலையேப் பட மாட்டோம். கொல்லை வழியா பக்கத்து வீட்டுல சாப்பாடு இரவல் வாங்கி சமாளிப்பாங்க. அந்த விருந்தோம்பல் பண்பு இன்னமும் மாறாம அப்படியே இருக்கு. அதுதானே நம்ம பண்பாடு!'

- க.ராஜீவ்காந்தி, படங்கள்: ந.வசந்தகுமார்

அடுத்த கட்டுரைக்கு