Published:Updated:

விழாக் காலம்... திருவிழாக் கோலம்!

விழாக் காலம்... திருவிழாக் கோலம்!

##~##

ங்கு தடுக்கி விழுந்தாலும் கோயில் வாசலில்தான் விழ வேண்டும் என்று சொல்லும் அளவுக்குக் கோயில்கள் நிறைந்த நகரம்...கும்பகோணம். சமீபத்தில் மூன்று நாட்கள் நடந்த மாசி மகத் திருவிழாக் கொண்டாட்டத்தில் இருந்து சில சந்தோஷத் தருணங்கள்...

•  கும்பகோணம் நகரத்தின் பிரதானக் கோயில்களில் இருக்கும் தேர்கள் மொத்தமும் கும்பேஸ்வரன் கோயில் வாசலில் வந்து சங்கமித்த பின்னரே தேரோட்டம் தொடங்கும் என்பதால், கோயில் வாசலில் எக்கச்சக்க கூட்டம். தேரோட்டத்தை ரசிக்க வந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் மட்டுமல்ல; தேரடி வீதி தேவதை களை ரசிக்க வந்த 'பக்தர்கள்’ கூட்டமும் சேர்ந்துகொள்ள... எங்கெங்கு காணினும் மனிதத் தலைகள்தான்!  

விழாக் காலம்... திருவிழாக் கோலம்!

•  குடும்பத் தலைவர்கள் பலரும் பொறுப்பாக வேலைக்குச் சென்றுவிட, குடும்பத் தலைவிகள்தான் தங்களுடைய தலைவருக்காக வேண்டியபடி தேர் இழுத்தனர். அம்மாக்களுக்கு உதவ அவர்களுடைய வாண்டுகளும் தேர் இழுத்தது அழகான காட்சி. இதை எல்லாம் பார்த்து, ஒருவேளை பெண்கள் மட்டும்தான் தேர் இழுக்க அனுமதியா என, வெளிநாட்டுக்காரர் கள்  பலர் குழம்பியதும் அது குறித்து விசாரித்த தும் தனிக் கதை.

•  தேரோட்டம் தொடங்கி, நேரம் ஆக ஆக உற்சாகம் மட்டுமல்ல; வெயிலும் கூட உச்சத்தை எட்டியது. அடிக்கடி ஐஸ்க்ரீம், பானகம், ரஸ்னா என, 'சில்’லாக்ஸ் செய்துகொண்ட சுட்டீஸ் யாரும் வெயிலைப்பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. பந்தோபஸ்துக்கு வந்த காவலர் களும் வேடிக்கை பார்க்க வந்த வெளி நாட்டி னரும்தான் வெயிலால் கஷ்டப்பட்டனர்.

•  ஓர் அம்மாவும் அக்காவும் மட்டும் வடம் பிடிக்க, அந்த வீட்டு குட்டீஸ் ஒன்று தானும் வடம் பிடிக்க வேண்டும் என, ஆரம்பம் முதலே அடம்பிடித்துக்கொண்டு இருந்தது. ஒரு வழியா கத் தேர்  நிறுத்தும் நிலைக்கு வந்ததும் அம்மா தந்த கயிறைக் கையில் வாங்கிய பின்னர்தான், அந்தக் குட்டி தேவதையின் அழுகை குறைந்து, முகத்தில் சிரிப்பு வந்தது.

விழாக் காலம்... திருவிழாக் கோலம்!

•  ஒரு பக்கம் தேரோட்டம் களைகட்ட, இன்னொரு பக்கம் மகாமகக் குளமே குதூகலமாக இருந்தது. 'ரொம்ப ஆழமா இருக்காடி’ என, சக தோழியிடம் கேட்டபடி, படியில் நின்று குளத்து நீரைத் தலையில் தெளித்துக்கொண்ட கல்லூரி சிட்டுகளுக்கு, குளத்தில் அந்தர் பல்டி எல்லாம் அடித்துத் தங்களுடைய வீர தீர பராக்கிரமத்தைக் காட்டிக்கொண்டு இருந்தனர் சில காளையர்கள். பசங்களுடைய அலம்பலைப் பார்த்து இரண்டு சுட்டிகள் 'வீல்’ என்று அலறின.

விழாக் காலம்... திருவிழாக் கோலம்!

•  தேரில் உள்ள சுவாமிகளைவிட, வீதியில் வரையப்பட்ட சுவாமிகளையே வெளிநாட்டினர் பலரும் அதிக நேரம் ரசித்துக்கொண்டு இருந்த னர். நம்மூர் ஆட்கள் சாதாரணமாக அதைக் கடந்து, போகிறபோக்கில் சில்லறைகளை விட் டெறிந்துச் சென்றபோது, வெளிநாட்டுப் பெண் மணிகள் இருவர், அந்த ஓவியரிடம் சென்று 'வாவ்... சூப்பர்! எப்டி வரைஞ்சீங்கே’ என தங்கிலீஷில் கேட்க, ஓவியருடைய முகத்தில் அவ்வளவு பெருமிதம்.

கும்பகோணத்தில் விழாக்களுக்குப் பஞ்சமே இல்லை... கூப்பிடு தூரத்தில்தான் அடுத்த திருவிழாவும் கொண்டாட்டமும் என்றாலும், அன்றைய விழா முடிவில், சின்ன சோகத்துடனும் நாள் முழுக்கக் கொண்டாடிக் களைத்த சோர்வு டனும் கலைந்தனர் மக்கள்!

- இரா.மங்கையர்கரசி, படங்கள்: ந.வசந்தகுமார்

அடுத்த கட்டுரைக்கு