Published:Updated:

வலையோசை : அரசர்குளத்தான்

வலையோசை : அரசர்குளத்தான்

வலையோசை : அரசர்குளத்தான்

கிச்சுகிச்சு!

வலையோசை : அரசர்குளத்தான்

மக்களிடம் ஓட்டு வாங்கி மகன்களுக்குப் பதவி கொடுப்பது குடியரசு. மக்களிடம் ஓட்டு வாங்காமல் மகனுக்குப் பதவி கொடுப்பது முடியரசு.

2 மணி நேரம் 'பவர் கட்...’ சென்னை மக்கள் டென்ஷன்! # நீங்கதான் டென்ஷன் ஆகுறீங்க.. வெளியூர்வாசிகள் எல்லாம் உங்களைக் கொடுத்துவெச்சவங்கனு சொல்றோம்.

மங்குனி பாண்டியர்கள்!

வலையோசை : அரசர்குளத்தான்

தமிழக முன்னாள் அமைச்சர் தமிழரசி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை செய்யும்போது, மிக்ஸி, கிரைண்டர் வாங்க எப்படிப் பணம் வந்தது? அதற்கான பில் எங்கே? என்று கேட்டார்களாம். இன்று, மிக்ஸி, கிரைண்டர் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லுமளவுக்குத் தமிழகம் தன்னிறைவு(??) பெற்ற மாநிலமாக விளங்குகிறது. எல்லோர் வீட்டிலும் இந்தப் பொருட்கள் இருக்கிறபோது, முன்னாள் அமைச்சர் வீட்டில் இல்லாவிட்டால்தான் ஆச்சர்யம்.

இப்படிக் கேள்வி கேட்பதை விடுத்து கார், பங்களா, நகை வாங்கியது எப்படி? எப்போது? அதற்கான பில் எங்கே என்று கேட்டிருந்தால் நியாயம். விட்டால், டீத் தூள் எப்படி வாங்கினீர்கள்? காபித் தூள் வாங்கிய பில் எங்கே என்று கேட்பார்கள் போல...அய்யோ...அய்யோ....

சங்கரன்கோவில் இடைத்தேர்தலால் யாருக்கு நஷ்டம்?

இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி ஜெயித்தாலும், எதிர்க்கட்சி தோற்றாலும் நாட்டிலோ ஆட்சியிலோ எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடப்போவது இல்லை. நடந்து முடிந்த சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் ஆளும் அ..தி.மு.க. மாபெரும் வெற்றிபெற்று தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

வலையோசை : அரசர்குளத்தான்

அப்போதெல்லாம் இடைத்தேர்தல் என்றாலே பரபரப்பில்லாமல், ஒரு ஊராட்சி மன்றத் தலைவருக்கான இடைத்தேர்தலைப் போல்தான் நடைபெற்றுவந்துள்ளது. 1989-1990-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் மருங்காபுரி இடைத்தேர்தலில் அண்ணா.தி.மு.க.வே வெற்றிபெற்றது. அதைப்போல், 1991-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தி.மு.க.வின் எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர், ராஜினாமா செய்தார். அப்போது நடந்த துறைமுகத்துக்கான இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் செல்வராஜே வெற்றிபெற்றார்.

அதன்பின் நடந்த சில பல இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சியே வெற்றிபெறுவது தொடர்கதையாக ஆனாலும், இப்போதுள்ள பரபரப்பெல்லாம் அப்போது கிடையாது.

இடைத்தேர்தல் என்றாலே பரபரப்பாக, கௌரவப் பிரச்னையாகக் கருதப்பட்டது கடந்த தி.மு.க., ஆட்சியில் திருமங்கலம் இடைத்தேர்தல் நடந்தபோதுதான்.

இதுவும் நானே கேள்வி, நானே பதில்!

''கச்சத் தீவை மீட்பதால் ஒரு பலனும் இல்லை என்கிறாரே தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்?''

''முகலாய மன்னர் அக்பரின் அரசவையில் இருந்தவர் விகடகவி பீர்பால். ஒருமுறை அக்பரும் இன்னொருவரும் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது அங்கு பரிமாறப்பட்ட கத்தரிக்காய் கூட்டின்

வலையோசை : அரசர்குளத்தான்

ருசியில் ஈர்க்கப்பட்ட அக்பர், அதை விரும்பிச் சாப்பிட்டபடி பீர்பாலைப் பார்த்து, ''கத்தரிக்காய் உடம்புக்கு நல்லது' என்றாராம். அதற்கு பீர்பாலும் ''ஆமாமாம்... கத்தரிக்காய் உடம்புக்கு நல்லது அரசே' என்றாராம். சில நாட்கள் கழிந்ததும், மீண்டும் அவர்கள் ஒன்றாகச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது, கத்தரிக்காய் கூட்டைச் சாப்பிடாமல் ஒதுக்கிவைத்த அக்பர், பீர்பாலைப் பார்த்து 'கத்தரிக்காய் கூட்டு உடம்புக்குக் கெடுதி' என்றாராம். அப்போது பீர்பால் ''ஆம் மன்னா... கத்தரிக்காய் உடம்புக்குக் கெடுதி' என்றாராம்.

இரண்டு தடவையும் இதைக் கவனித்த இன்னொருவர் பீர்பாலிடம் ''அன்றைக்கு மன்னர் கத்தரிக்காய் கூட்டு உடம்புக்கு நல்லது என்ற போது ஆமாம் என்றீர்கள். இன்றைக்கு உடம்புக்குக் கெடுதி என்றபோதும் ஆமாம் என்கிறீர்களே?' என்று கேட்டாராம்.

அதற்கு பீர்பால் ''நான் மன்னரிடம்தான் வேலை செய்கிறேன். கத்தரிக்காயிடம் இல்லை' என்று பதில் சொன்னாராம் .

அதுபோல்தான் ஞானதேசிகன் பேச்சும். அவர் காங்கிரசின் வேலைக்காரர்... அப்படித்தான் பேசுவார்!

டெடிகேடட் சாங்ஸ்!

இப்போதுள்ள சூழ்நிலையில் இந்தப் பாடல்கள்தான் இவர்களுக்குப் பொருந்தும் என்றே நினைக்கிறேன்.

சசிகலா : குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி...

ராவணன் : ஆடாதடா ஆடாதடா மனிதா, ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவே மனிதா...

நடராஜன் : எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும்...

மன்மோகன் சிங் : உள்ளம் என்பது ஆமை, அதில் உண்மை என்பது ஊமை...

ப.சிதம்பரம் : சொல்லாதே யாரும் கேட்டால்... எல்லோரும் தாங்க மாட்டார்...

வலையோசை : அரசர்குளத்தான்
அடுத்த கட்டுரைக்கு