Published:Updated:

என் ஊர் - திருத்துறைப்பூண்டி

Veerapandian

சிசிகலா என் பள்ளித் தோழி !சந்திப்பு: எம்.பரக்கத் அலி படங்கள்: கே.குணசீலன், வீ.நாகமணி

என் ஊர் - திருத்துறைப்பூண்டி

சிசிகலா என் பள்ளித் தோழி !சந்திப்பு: எம்.பரக்கத் அலி படங்கள்: கே.குணசீலன், வீ.நாகமணி

Published:Updated:
Veerapandian
என் ஊர் - திருத்துறைப்பூண்டி
  ##~##

அரசியல் விமர்சகரான வீரபாண்டியன் தன் ஊரான திருத்துறைப்பூண்டிபற்றி இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 'திருத்துறைப்பூண்டி... என்னுடைய நாற்றங்கால்! இந்த இடத்துல நாற்றங்கால்ங்கிற வார்த்தைதான் ரொம்பப் பொருத்தம்னு நெனைக்கிறேன். ஏன்னா, திரும்பின பக்கம் எல்லாம் வயல்கள்தான். வேற தொழிற்சாலை களோ, கல்லூரிகளோ இல்லாத பழமையான ஊர். ஊரையே ரெண்டா வகுந்துகிட்டு ஓடுற முள்ளியாறுதான் இந்த ஊருக்குத் தாய்ப்பால். வெயில் காலத்தில நாங்க பந்து விளையாடுறதும் கபடிப் போட்டி நடத்துறதும் இங்கதான். ஆத்துல தண்ணி வந்தா விவசாயிகளுக்குக் கொண் டாட்டம். ஆடிப் பெருக்குக்கு வெத்தலைல சூடம் கொளுத்தி வெச்சி காவிரி ஆத்தாளைக் கும்பிடுவோம்.

அதெல்லாம் 'பழைய கதை’. இப்ப அந்த முள்ளியாத்தைப் பாத்தா வயித்தெரிச்சலா இருக்கு. அகண்டு ஓடின ஆறு, இப்ப ஊர் கழிவு களைச் சுமக்கிற கால்வாயா குறுகிக்கெடக்கு. ரெண்டு கரையிலயும் வீடுகள்.

என் ஊர் - திருத்துறைப்பூண்டி

'ஆற்றங்கரை நாகரிகம்’னு சொல்வாங்களே அது எனக்கு ரொம்பப் பொருந்தும். நாங்க காலாற நடந்து கவிதை எழுதினது... பாட்டு படிச்சது... நாடகம் போட்டது... எல்லாம் இந்த ஆற்றங்கரையிலதான். இங்கதான் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் சீனிவாச ராவின் சமாதி இருக்கு. சுதந்திரப் போராட்டக் காலத்துல ராஜாஜி தலைமையில நடந்த வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்துக்கு எங்க ஊர் வழியா போகும்போது, 'தியாகிகளுக்குச் சாப்பாடு கொடுக்கக் கூடாது; தங்க இடம் கொடுக்கக் கூடாது’னு வெள்ளக்கார போலீஸ் உத்தரவு போட்டுச்சு. எங்க ஊர் ஜனங்க, போலீஸுக்குத் தெரியாம சோத்துப் பொட்டலங்களை மரத் துக்கு மரம் கட்டித் தொங்கவிட்டாங்க. ராஜாஜி, 'மரத்துல காய் காய்க்கிறதத்தான் பாத் திருக்கோம்; இங்கதான் சோறு காய்க்கிற

அதிசயத்தைப் பார்க்கிறோம்’னு சொல்லி பாராட்டினாராம். இந்த ஏற்பாட்ட முன்ன நின்னு செஞ்சவங்கள்ல எங்க அப்பா, தியாகி திருநாவுக்கரசுவும் ஒருத்தர்.

இன்னிக்கு நான் நூற்றுக்கணக்கான தலைவர்கள், அறிஞர்களை 'நேருக்கு நேர்’ நிகழ்ச்சியில் சந்திச்சிக்கிட்டு வர்றேன். இதுக்கெல்லாம் அடிப்படை எங்க வீடுதான். எங்க வீட்டுத் திண்ணையில, தமிழ்நாட்டின் பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் அப்பாவோட வாதம் பண்ணினதைக் கிட்ட இருந்து கேட்டு இருக்கேன். பெருந்தலைவர் காமராஜர், ஜீவா, கக்கன், பக்தவத்சலம், சி.சுப்பிரமணியம், கே.டி.கே.தங்கமணி, சர்தார் வேதரத்தினம் பிள்ளை, பட்டுக்கோட்டை நாடிமுத்துப் பிள்ளை, மணலி கந்தசாமி, மன்னை நாராயணசாமி, பூண்டி வாண்டையார், ஐயா மூப்பனார் போன்றவங்க எல்லாம் எங்க வீட்டுக்கு அடிக்கடி வருவாங்க.

என் ஊர் - திருத்துறைப்பூண்டி

இன்னிக்குத் தமிழ்நாட்டுல பரபரப்பாப் பேசப்படுற சசிகலா என்னுடைய பள்ளிக்கூடத் தோழி. அவர் எனக்கு ரெண்டு வருஷம் ஜூனியர். திவாகரன் ரொம்ப ரொம்ப ஜூனியர். நாங்க எல்லாரும் ஒண்ணாச் சேர்ந்துதான் ஸ்கூலுக்குப் போவோம்.

ஊருக்கு நடுவில் இருக்கிற திருக்குளத்துக் கரையில், மேட்டுத் தெருவுலதான் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் வீடு. அது பழைய ஓட்டு வீடு. ரொம்ப நாள் அப்படியேதான் கிடந்தது. சென்னைக்கு வந்து பெரிய ஆளா ஆன பிறகு, 'திருத்துறைப்பூண்டி’னு யார் சொன்னாலும், சாப்பிட வைக்காம அனுப்ப மாட்டாராம் வாசன். கலைஞரின் இளமைக் காலம் ரொம்ப நாள் திருத்துறைப்பூண்டியில கழிஞ்சிருக்கு. எங்க ஊர்ல இருந்து திருக்குவளை 10 கிலோ மீட்டர்தான்.

என் ஊர் - திருத்துறைப்பூண்டி

அப்பப்போ நேரம் கிடைக்கிறப்போ ஊருக்குப் போய்க்கிட்டுத்தான் இருக்கேன். எனக்கு அறிவுப் பால் ஊட்டின தாய் மண்ணும் அங்க இருக்கு; சோறுட்டின தாயும் 90 வயசுல இருக்காங்களே... பாக்கணுமில்லியா?''