Published:Updated:

ஓ...பட்டர்பிஃளை !

அ.சாதிக் பாட்ஷா படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

ஓ...பட்டர்பிஃளை !

அ.சாதிக் பாட்ஷா படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

Published:Updated:
##~##

வண்ண ஓவியங்களைத் தன் உடம்பில் சுமந்தபடி சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சிகளைப் பாடாத கவிஞர்களை... நேசிக்காத காதலர்களை... விரும்பாத மனிதர்களை... காண்பது அரிது!

திருச்சி மாவட்ட வன அலுவலரான அன்வர்தீன், வண்ணத்துப்பூச்சி பிரியர்களில் ரொம்பவே வித்தியாசமானவர். இவரை வண்ணத்துப்பூச்சிகளின் காதலர் என்றே சொல்லலாம். தனக்கு அரசு வழங்கி உள்ள இல்லத்தில் ஒரு சிறிய தோட்டம் அமைத்து வண்ணத்துப்பூச்சி இனத்தைப் பெருக்கிவருகிறார். இவருடைய இல்லத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கான வண்ணத்துப்பூச்சிகள் படபடக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக நவீன சித்திரங்களைப் போல் காட்சி அளிக்கின்றன. 'இதுகிளாசி டைகர், அது கிரிம்ஸன் ரோஸ், அங்கே இருப்பது மில்க் வீட், அது செசபல்’ என மென்மையாக வண்ணத்துப்பூச்சிகளைச் சுட்டிக் காட்டி விவரிக்கிறார் அன்வர்தீன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''வண்ணத்துப்பூச்சிகள் ஓர் அற்புதமான உயிரினம். இவை மாசற்ற சூழ்நிலையில்தான் வாழும். ஒலி மாசு, காற்று மாசு உள்ள சூழலில் இவை வசிப்பது இல்லை. அதனால், வண்ணத்துப் பூச்சிகளின் நடமாட்டத்தைவைத்து அங்கே ஒலி, காற்று மாசு உள்ளதா என்பதை அறிந்துகொள்ளலாம். இன்னும் சொல்லப்போனால், வண்ணத்துப்பூச்சிகள் வாழ்கிற இடம்தான் மனிதன் ஆரோக்கியமாக வாழத் தகுந்த இடம்.

ஓ...பட்டர்பிஃளை !

வண்ணத்துப்பூச்சிகள் மனிதர்களுக்குப் பல விதங்களிலும் உதவுகின்றன. தாவரங்களில் தரமான காய்கறிகள், பழங்கள் கிடைக்க அயல் மகரந்தச் சேர்க்கை அவசியம். இந்த அயல் மகரந்தச் சேர்க்கைக்கு முக்கியக் காரணகர்த்தாக்கள் இவைதான். முட்டை, லார்வா, பியூப்பா பருவங்களில் பல்வேறு உயிரினங் களுக்கு உணவாக மாறி, உணவுச் சங்கிலி அறுந்துவிடாமல் காப் பாற்றுவதும் இவைதான். பசுமையை அழிப்பது, பூச்சிக் கொல் லிகளைப் பயன்படுத்துவது, சூழலை மாசுபடுத்துவது உள்ளிட்ட காரணங்களால் இவை அழிந்துவருகின்றன.

அயல்நாடுகளில் வண்ணத்துப்பூச்சிகளை வளர்ப்பதை அரசாங்கமே ஊக்குவிக்கிறது. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தாவரங்கள், சிறிய விலங்கினங்களுக்கும் இவை உதவிகரமாக இருப்பதால் இவற்றைக் காப்பது நமது கடமை'' என்கிறார் அன்வர்தீன்.

ஓ...பட்டர்பிஃளை !

இவருடைய இல்லத்தில் ஆங்காங்கே சிறிய மணற் குவிய லில் உப்பைக் கலந்து தண்ணீர் ஊற்றிவைத்து இருக்கிறார்கள். வண்ணத்துப்பூச்சிகள் இனப்பெருக்கம் செய்ய சோடியம் மிகவும் அவசியம் என்பதால் இந்த ஏற்பாடாம். மணலில் கலந்து உள்ள உப்பு நீரை உறிஞ்சி, தேவையான 'சக்தி’யை கிரகித்துக்கொண்ட பிறகு, வண்ணத்துப்பூச்சிகள் ஜோடி ஜோடியாக ரொமான்ஸ் செய்கின்றன.

எப்போதும் சுறுசுறுப்பாகப் படபடக்கும் இவற்றின் வயிறு மிகவும் சிறியது. அதனால், ஓடிக் களைத்த விளையாட்டு வீரர்களைப் போல், அவ்வப்போது பூக்களில் அமர்ந்து சிறிது தேனை அருந்திவிட்டு சிறகடிக்க ஆரம்பிக்கின்றன.

ஓ...பட்டர்பிஃளை !

''செப்டம்பர் - அக்டோபர் மாதங்கள் இவற்றுக்கு வசந்த காலம். அந்த நேரத்தில், இப்போது உள்ளதைவிட 10 மடங்கு அதிகமான எண்ணிக்கையில் வண்ணத்துப்பூச்சிகளின் நட மாட்டம் இருக்கும். இவற்றை ரசித்துக்கொண்டே ஒரு மணி நேரம் வாக்கிங் போனாலும் களைப்பு தெரியாது. மிகவும் சென்சிட்டிவ்-ஆன உயிரினம் இது. செயற்கைப் பூக்கள், சிமென்ட் தொட்டி, பாலிதீன் பைகளில் வளர்க்கப்படும் தாவரங்களை இவை சீண்டாது. மண் தொட்டி அல்லது தரை யில் இயற்கையாக வளரும் தாவரங்களைத்தான் இவை நெருங்கும்'' என்றார் அன்வர்தீன்.

வண்ணத்துப்பூச்சிகளிடம் இருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கிறது!