Published:Updated:

வலையோசை - சந்திரமெளளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்

வலையோசை - சந்திரமெளளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வலையோசை - சந்திரமெளளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்

அலெக்ஸாண்டரின் குதிரை!

##~##

நான் தஞ்சாவூரில் இருந்தபோது என்னுடைய நண்பர் டாக்டர் அலெக்ஸாண்டர், அப்போது பிரபலமாக இருந்த சுஸ¨கி மோட்டார் பைக் வாங்கினார். அந்த பைக்குக்கு மாவீரன் அலெக்ஸாண்டருடைய குதிரையின் பெயரைவைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். எனக்குத் தெரிந்து மோட்டார் பைக்குக்கு நாமகரணம் செய்ய ஆசைப்பட்டவர் அவர் ஒருவராகத்தான் இருக்கும். இதில் சங்கடம் என்னவென்றால் அந்தக் குதிரையின் பெயரைக் கண்டுபிடித்துச் சொல்லும் கஷ்டமான வேலை என்னுடையது. இப்போது மாதிரி அலெக்ஸாண்டர் குதிரை என்று தட்டினால், குதிரை பெயர், அது ருதுவான நாள், நட்சத்திரம் எல்லாம் நொடியில் தரும் இன்டர்நெட் இல்லாத காலம். (1989-ம் வருஷம்)

வலையோசை - சந்திரமெளளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்

'அலெக்ஸாண்டரின் தந்தை மன்னர் பிலிப் ஒரு குதிரை வாங்கினார். அது மகா சண்டித்தனம் செய்து யாரையுமே தன் மீது ஆரோகணிக்கவிடாமல் இருந்தது. அந்தக் குதிரை அதனுடைய நிழலைக் கண்டுதான் மிரள்கிறது என அலெக்ஸாண்டர் உணர்ந்து, அதன் நிழல் கண்ணில் படாத மாதிரி அதை நிறுத்தி அதன் மீது லாகவமாக ஏறி சவாரி செய்தார்’ - இவ்வாறு எல்லாம் அந்தப் பொல்லாத குதிரையைப் பற்றி பள்ளிப் பாடத்தில் படித்திருக்கிறேன். பெயர் எல்லாம் பாடப் புத்தகத்தில் வந்த ஞாபகம் இல்லை. சமையல் குறிப்புகள், பெண்களைக் கொடுமைப்படுத்தும் கணவர்களைத் தோலுரிக்கும் நாவல்கள் என்ற சமூக அக்கறையில்தான் தஞ்சாவூர் நூலகங்கள் இருந்தன. இந்த ஒரு குதிரையின் பெயரை அறிந்துகொள்ளும் வெறியுடன் சென்னைக்கு ரயிலேறினேன். கன்னிமரா நூலகத்தில் நான் தேடிய சங்கதி கிடைத்தது. அந்தக் குதிரையின் பெயர் - பியுஸ்ஃப்லாஸ். அந்தக் குதிரை அலெக்ஸாண்டரின் 12 வயதில் இருந்து அவருடைய கடைசி யுத்தம்  நடந்த கி.மு. 326.ம் ஆண்டு வரையில் அவருடன் இருந்திருக்கிறது. யுத்தத்தில் காயமாகி அலெக்ஸாண்டருக்கு முன்பே பரமபதம் அடைந்தது.

டாக்டர் நண்பருக்கு ஒரே சந்தோஷம். பைக் பெயர் சூட்டு விழாவில் நான்தான் தலைவர்!

         டைரிக் குறிப்பு!

''என்னவெல்லாமோ எதைப் பற்றி எல்லாமோ டைரியில எழுதிவெச்சிருக்கீங்க. இத்தனை வருஷம் என்னை லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க... என்னைப் பற்றி இந்த டைரில எங்கேயாவது எழுதியிருக்கீங்களா?'' என்று என் தர்ம பத்தினி கேட்க...

ஒரு குறிப்பிட்ட நாளைச் சொல்லி, ''அன்னிக்கு நான் பெங்களூருவுக்கு வந்து உன்னைப் பார்த்துவிட்டுக் கிளம்பிச் சென்றேன். நினைவு இருக்கா? மறுநாள் டைரியில் என்ன எழுதியிருக்கேன்னு படிச்சுக் காட்டறேன். டைரியை எடுத்துட்டு வா''

ஆசையாக அவள் எடுத்து வந்த டைரியில் இருந்து:

முழு ராத்திரி பஸ்ஸில் உட்கார்ந்துகொண்டு பயணித்து வருவது, ரொம்பவுமே ஆயாசத்தை உண்டாக்குகின்றது. இன்றைக்கு ஆபீஸுக்குப் போகவில்லை. பகல்பொழுதிலே தூங்கிக் கழித்து, சாயங்காலம் வெளி வராண்டாவிலே நாற்காலியைப் போட்டுக்கொண்டு, ரோட்டைப் பார்த்த படி உட்கார்ந்திருந்தேன்.

இதென்ன... நேற்றைக்கான பக்கம் எதுவுமே எழுதாமல் காலியாக இருக்கிறது? நேற்றைக்கு என்ன செய்தோம்? பெங்களூருவில் இருந்ததால் டைரியில் எதுவும் எழுதவில்லை. ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்று திரும்பி வரும்போது, தலை வலிக்கிறதாகச் சொல்லி மாத்திரை கேட்டாள். வாங்கிக்கொடுத்தேன். தலை வலி சரியாகிவிட்டதா என்றுகூட நான் விசாரிக்கவில்லை. பஸ்ஸுக்கு நேரமானதால் அவசர அவசரமாகக் கிளம்பிவிட்டேன். இன்றைக்கு ஒரு போஸ்ட் கார்டு எழுதிப் போடலாம். தலைவலி விசாரணைக்கு போஸ்ட் கார்டு போதும்!

வலையோசை - சந்திரமெளளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்

கிராமத்துப் பக்கத்தில் இரண்டு வேளை குளிப்பார்கள் என்பதனை தினசரி ஊர்ஜிதம் செய்துகொள்கிறேன். குளித்து முடித்து ஈர உடையுடன் பெண்கள் அந்த ரோட்டின் வழியே நடந்து போகிறார்கள். பக்கத்திலே இருக்கும் பிள்ளையார் கோயில் குளத்து ஸ்நானமாக இருக்க வேணும்.

சரி... புதுசாக 'ஜென்டில்மேன்’ என்று ஒரு படம் வந்துள்ளதாகவும் அது நன்றாக இருப்பதாகவும் பக்கத்து அறைகளில் வாசம் செய்யும் எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். இன்றைக்கு மாலை ஆட்டத்துக்குச் செல்ல நேரம் இருக்கிறதா? தாராளமாக இருக்கிறது. கொஞ்ச நேரத்திலேயே அந்த சினிமா ஆசையினைத் துறந்தேன்.

காரணம் இருக்கிறது. இப்போது புதுசாக நாலு பெண்கள், குளத்துப் பக்கத்தில் இருந்து வருவது தெரிகிறது.

''நீங்க எனக்குப் படிச்சு காட்டினது போதும்'' - வெடுக் எனக் கையில் இருந்த டைரியினைப் பறித்தாள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு