Published:Updated:

கடவுள்கள் உருவாகும் அரும்பாவூர் !

சி.ஆனந்தகுமார் படங்கள்: எம்.ராமசாமி

##~##

துண்டுத் துண்டான மரக் கட்டைகளால் வீதி எங்கும்அலங்கோல மாகக் காட்சி அளித்தாலும், அழகான கண்காட்சியாகவே காட்சி அளிக்கிறது பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் கிராமம்.

அரும்பாவூர் ஏரியா பக்கம் சென்றால், எங்கு பார்த்தாலும் மரச் சிற் பங்கள்தான். அதில் அதிகம் காட்சி அளிப்பவை கடவுள் சிலைகள். கோயில், ஹோட்டல், திருமண மண்டபம் போன்ற முக்கியமான இடங்களில் வைக்கப்படும் சிலைகள், இங்குதான் தயாரிக்கப்படுகின்றன. இந்தப் பகுதிகளில் 150-க்கும் அதிகமான குடும்பங்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுவருகின்றன.

விலங்குகள், பறவைகள், புத்தர், குழலூதும் கண்ணன், பிள்ளையார், அம்மன் சிலைகள் எனப் பார்ப்பவர்களுக்கும் கலை ஆர்வம் தொற்றிக்கொள்ளும் அளவுக்கு அரும்பாவூர் சிலைகள் அவ்வளவு அற்புதம்.இங்கு செய்யப்படும் சிலைகள் சென்னை, சிங்கப்பூர், மலேசியா போன்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன.

கடவுள்கள் உருவாகும் அரும்பாவூர் !

தமிழக அரசின் கலாஸ்ரீ விருது பெற்ற சிற்பி முருகேசன், ''தமிழ்நாட்டில் நாலைந்து இடங்கள்லதான் சிற்ப வேலை நடக்குது. அதுல எங்க ஊரும் ஒண்ணு. இங்கே எங்க மூதாதையர் காலத்திலேயேகோயில் களுக்குத் தேர் செய்துகொடுக்கும் வேலைகளைச் செய்துவந்தாங்க. அதனால நாங்களும் அதே மரச் சிற்ப வேலையைச் செய்துவர்றோம். இதுல எங்களுக்குப் பட்டறிவுதான் அதிகம். படிப்பறிவு கம்மிதான். அதனால இங்க அஞ்சாவது படிக்கிற சின்னப் பையன்கூட சிலை செய்யறதைப் பார்க்கலாம்.  

கடவுள்கள் உருவாகும் அரும்பாவூர் !

இந்தப் பகுதியில் சிலர் குழுக்களா வேலை செய்யுறாங்க. சிலர் தனியாக வேலை செய்யுறாங்க. வெளியூரில் தங்கி சிலைகள் செஞ்சு கொடுத்துட்டு வர்றவங்களும் இருக்காங்க. நான் 35 வருஷமா இந்தச் சிற்ப வேலை செய் யறேன். நாங்க ஆரம்பத்துல ரொம்பக் கஷ்டப் பட்டோம். கடன் வாங்கித்தான் தொழில் செய்ய ஆரம்பிச்சேன். அப்போ வட்டி கட்டுற துக்கே ரொம்பச் சிரமம். ஆனா, இப்போ வட் டிக்குப் பணம் வாங்க வேண்டிய தேவையே இல்லை. நாங்களே சிப்காட்ல இடம் பிடிச்சு தொழில் செய்யற அளவுக்கு முன்னேறி இருக்கோம்.

சிப்காட்டில் உள்ள என்னோட யூனிட்டில் 15 பேர் வேலை செய்யுறாங்க. ஆண்கள் சிற் பம் செதுக்குவாங்க. பெண்கள் சிலையை மெருகூட்டுவாங்க. இந்த வருஷம் தமிழ்நாட்டுல உள்ள கோயில்களில் புதுசா 13 தேர்கள்ரெடி யாகுது. அதுல நாங்க ரெண்டு தேர் செஞ்சு இருக்கோம். மிஷின் வந்த பிறகு, எங்களுக்கு வேலை இருக்காதுனு சொன்னாங்க. அப்படி என்னதான் மிஷினால வேலை செஞ்சாலும், கடைசியா எங்ககிட்ட கை வேலைக்கு வந்துதான் ஆகணும்.

கடவுள்கள் உருவாகும் அரும்பாவூர் !

எல்லாத்தையும்விட பெரிய விஷயம் இன்னைக்கு எங்க பொண்டாட்டி பிள்ளைங்க நல்லா இருக்காங்க. முன்னெல்லாம் பிள்ளைகளைப் படிக்கவைக்க முடியாத நிலை இருந்துச்சு. ஆனா இப்போ எங்க பசங்களை நல்லா படிக்கவைக்கிறோம். கூடவே பசங்களுக்கு எங்க குலத் தொழிலையும் சொல்லிக்கொடுக்கிறோம். தொழில் அழிஞ்சிடக் கூடாதுல்ல'' என்றபடி செதுக்க ஆரம்பிக்கிறார் முருகேசன்.

அடுத்த கட்டுரைக்கு