Published:Updated:

உள்ளங்கை அரித்தால் உலகம் அழியும் !

திருச்சி ஈ.எஸ்.பி.மனிதர்ஆ.அலெக்ஸ் பாண்டியன் படம்: ஜெ.வேங்கடராஜ்

 ##~##

வானம் பார்த்து, 'இன்று மழை வருமா வெயில் அடிக்குமா?’ என்று சொல்பவர்களை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். திருச்சி பெட்டவாய்த்தலையை அடுத்த மருதூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்முருகன், ரொம்பவே வித்தியாசமானவர். எங்கே, எப்போது பூகம்பம் வரும்? புயல் அடிக்கும்? கடல் கொந்தளிக்கும் என்பதை முன்கூட்டியே சொல்கிறார்.

விவரம் தெரிந்ததும் ஆச்சர்யத்துடன் மருதூருக்குச் சென்று செந்தில்முருகனைச் சந்தித்தேன்.

''எட்டாவது வரைக்கும் படிச்சிருக்கேன். கூலி வேலைதான் செஞ்சுக்கிட்டு இருக்கேன். தண்ணி, தம்னு எந்த கெட்டப் பழக்கமும் இல்லை. சின்ன வயசுல இருந்தே இது மாதிரி முன்கூட்டியே தெரியவரும். ஆனா, அப்ப எல் லாம் அதை நான் பொருட்டா கண்டுக்கலை. ஆனா, இப்ப ஒரு ஆறு, ஏழு வருஷமா முன்கூட்டியே தெரிய வர்ற விஷயத்தைவெச்சு ஆராய்ச்சி பண்ணினப்ப, எல்லாம் உண்மையா நடக்குதுனு கண்டுபிடிச்சேன். பெரிய அளவுல புயல், சுனாமி, நிலநடுக்கம் வந்தா முன்கூட்டியே எனக்குத் தெரிஞ்சுடும்'' என்று நம்பிக்கை யோடு சொன்னவர், சிலசெய்தித் தாள்களை எடுத்து என் முன்னால் போடுகிறார்.

உள்ளங்கை அரித்தால் உலகம் அழியும் !

''தானே புயலைப்பற்றிகூட நான் முன்கூட்டியே கணிச்சு சொல்லி இருக்கேன் சார். டிசம்பர் 22, 26, 30-ல புயல் சின்னம் உருவாக வாய்ப்பு இருக்குனு நான் சொன்னது இந்த நியூஸ் பேப்பர்ல வந்திருக்கு. அப்ப சொன்னப்ப யாரும் என்னை நம்பலை'' என்றபடி அந்தச் செய்தியைக் காட்டி வருத்தப்படுகிறார். ''உங்க ளுக்கு முன்கூட்டியே எப்படித் தெரியவரும்?'' என்று கேட்டால், ''பாதிப்பு ஏற்படுறதுக்கு ரெண்டு, மூணு நாள் முன்னாடி உடம்பு சூடாகி இறுகும்; இல்லைனா தளரும். உள்ளங்கால், உள்ளங்கையில அரிப்பு எடுக்கும். அப்புறம் உள் மனதில் தகவல் தெரியும்'' என்பவர், இதுக்கு அவருடைய ஜீன்தான் கார ணம் என்று சொல்கிறார். ''எங்க தாத்தா வழி முன்னோர்கள்

விஞ்ஞானியா இருந்திருப்பாங்கனு தோணுது. அவங்களோட ஜீன் என் உடம்புல  இருக்கிறதுகூட அதுக்குக் காரணமா இருக்கலாம்'' என்கிறார்.

''ஆரம்பத்துல என்னை யாரும் நம்பாம பைத்தியம்னு சொல்லி டாக்டர்கிட்ட கூட் டிட்டுப் போனாங்க. டாக்டர் என்னை செக் பண்ணிப் பார்த் துட்டு பைத்தியம்லாம் இல் லைனு சொல்லிட்டாரு'' என வருத்தமாகக் கூறியவர், அவரைப் பரிசோதித்த மருத்து வரின் செல்போன் எண்ணைக் கொடுக்கிறார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையின் மனநலப் பிரிவின் செயலரும், கீழ்ப்பாக்கம் மனநல கல்வியகத்தின் துறைத் தலைவருமான குமார்தான் அவரை பரிசோதனை செய்தவர்.

உள்ளங்கை அரித்தால் உலகம் அழியும் !

''செந்தில்முருகனிடம் உளவியல்ரீதியாகக் கிட்டத் தட்ட 300 கேள்விகள் வரை கேட்டோம். எல்லாத் துக்கும் அவரு கரெக்டா பதில் சொல்லிட்டாரு. அவர் சொல்றதுல 75 சதவிகிதத்துக்கும் மேல் சரியாகவே நடக்கிறதை நான் பார்த்து இருக்கேன். சில மனிதர்களுக்கு இந்தச் சக்தி இருக்கும். இதை EXTRASENSORY PERCEPTION(ஈ.எஸ்.பி.) பவர்னு சொல்வாங்க'' என்று என் பல்ஸை அதிகரிக்கச் செய்தார்.

அந்தக் கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை. ''2012-ல் உலகம் அழியும்னு சொல்றாங்களே உண்மையா..?'' என்றால் புன்னகைத்துவிட்டு, ''சினி மாவில காட்ற மாதிரி எல்லாம் நடக்காது. ஆனா, மே மாசத்துல பெரிய அளவுல பூகம்பம் முஸ்லிம் நாடுகள்ல வரும். குறிப்பா... ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், துருக்கி, இரான் போன்ற நாடுகள்ல வரும். அதிக அளவுல உயிர்ச் சேதமும் இருக்க வாய்ப்பு இருக்கு. மே 18-ல இருந்து 28-க்குள்ள வங்கக் கடலில் சிறிய புயல் சின்னம் உருவாகி தமிழ்நாட்டுல மிதமான மழை பெய்யும். சீனா, தாய்லாந்து, மங்கோலியா நாடுகள்ல 6.8 அளவுல பூமி அதிர்வு ஏற்படும். ஆனா, பாதிப்பு ஏற்படுறதுக்கு ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடிதான் புள்ளி விவரத்தோட சொல்ல முடியும்'' என்று திரி கொளுத்துகிறார் செந்தில்முருகன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு