Published:Updated:

”பார்த்தால் விருந்து... ஆடினால் மருந்து!”

”பார்த்தால் விருந்து... ஆடினால் மருந்து!”

”பார்த்தால் விருந்து... ஆடினால் மருந்து!”

”பார்த்தால் விருந்து... ஆடினால் மருந்து!”

Published:Updated:

'டமில்’ பேசும் ஜட்ஜ்கள், கமர்ஷியல் பிரேக்குகள்... எதுவும் இல்லாமல் திருச்சி மக்களை ரசிக்கவைத்துக்கொண்டு இருக் கிறது ஒரு டான்ஸ் குரூப்!

”பார்த்தால் விருந்து... ஆடினால் மருந்து!”

ஒரு முழு பாட்டில் பூஸ்ட்டை அப்படியே சாப்பிட்டது போன்ற உற்சாகத்தோடு, ஹை- ஸ்பீடில் ஆண்களுக்கு ஈடுகொடுத்து ஆடுகிறார்கள் பெண்கள். 14 பேர்கொண்ட நடனக் குழு, ஏழு பேர் வீதம் ஷிஃப்ட் முறையில் முக்கால் மணி நேரம் ஆடி, ஏறுகிற மேடையை அதிரவைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

அவர்கள் திருச்சி 'ரிதமிக் பீட்’ மாணவர்கள். அதில் ஆடும் அத்தனை பேரும் வெவ்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள்!

''நாங்க எல்லோரும் வேற வேற காலேஜ்ல படிச்சுக்கிட்டு இருக்கோம். எங்க எல்லாருக்கும் டான்ஸ்தான் கனவு. ஆரம்பத்துல இங்கே கத்துக் கிறதுக்குத்தான் வந்தோம். கத்து முடிச்சதும் பல மேடைகள்ல டான்ஸ் ஷோ பண்ணிட்டு இருக் கோம்'' என குட்டி இன்ட்ரோ கொடுக்கிறார் குரு.

வெஸ்டன், கிளாசிக்கல் மட்டுமே தெரிந்த திருச்சிவாசிகளுக்கு அவர்கள் கூறும் நடன பெயர்கள் எல்லாமே வித்தியாசமாகத்தான் இருக்கிறது. ''நீங்க இப்ப பார்த்தது 'ஏரோபிக்ஸ்’ என்ற டான்ஸ். இது மாதிரி ஒன்பது வகையான நடனம் கத்துக்கொடுக்கிறோம். ஹிப்-ஹாப், பாப்பிங்க், லாகிங்க், ஜாஸ், கன்டெம்ப்ரரி, கன்டெம்ப்ரரி சால்சா, சால்சா, பாலே... இவை எல்லாம் இவர்கள் ஆடும் மேற்கத்திய நடன வகைகள்.

''இங்கே ஆடுற எல்லாமே டீன்- ஏஜ் பசங்க. எங்க அகாடமியில மூணு வயசு பாப்பா முதல் 60 வயசு தாத்தா வரை எல்லாருமே வந்து டான்ஸ் ஆடுறாங்க...'' என்கிறார் ஏரோபிக்ஸ் கோச் சூர்யா.

பெரிய பெரிய பால்களை வைத்து நடனம் ஆடுவதைப் பார்த்து, ''இதெல்லாம் என்ன?'' என்று விசாரித்தால், ''இது 'ஜிம் பால்ஸ்’. இதை வெச்சு டான்ஸ் ஆடினா கைக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். உடம்போட ஒவ்வொரு செல்லும் ஃப்ரெஷ் ஆகும்'' என்றபடியே 'ஜிம் பால்ஸ்’ நடனம் ஒன்றை நமக்காக அரங்கேற்றுகிறார்கள். நடனம், பார்ப்பவர்களுக்கு விருந்து என்றால், அதை ஆடுபவர்களுக்கு அது மருந்து போல.

''டான்ஸ் ஆடுனா நமக்கு உடம்பு மனசு ரெண்டுமே ஃப்ரெஷ் ஆகிரும். இந்த ஸ்டைல் டான்ஸ் கத்துக்கிட்டவங்க, எப்பவுமே ஃபிட்னஸோட இருப்பாங்க. தவிர, இங்கே இருக்கிற ஒரு மணி நேரமும் டான்ஸ்லதான் மும்முரமா இருப்பாங்க. அதனால ஞாபக சக்தி அதிகரிக்கும். புத்துணர்ச்சி கிடைக்கும். இந்த அகடமி ஆரம் பிச்சு எட்டு வருஷம் ஆகுது. இப்ப இங்க 150 பேர் டான்ஸ் கத்துக்குறாங்க'' என்கிறார் டான்ஸ் மாஸ்டர் யுவராஜ்.

இங்கே பயிற்சி எடுத்துச் செல்பவர்கள் பலர் டி.வி. நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றுள்ளனராம். ''இங்கே இருந்து போன நிறைய டான்ஸர்ஸ் சினிமாவுலயும் சக்சஸ் ஃபுல்லா இருக்காங்க'' என கோரஸ் குரல் கொடுக்கிறார்கள் மாணவர்கள்.

'எங்க மாஸ்டர் யுவராஜ் சிங்கப்பூர் ஷோக்க ளும் பண்ணி இருக்காரு. விஜய் டி.வி-யில வந்த 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா சீஸன் 1’ - ல் டாப் செவன்ல ஒருத்தரா வந்தாரு'' என பெருமை பொங்க சொல்கிறார்கள் மாணவர் கள்.

ராஜ் டி.வி-யின் ஏர்டெல் டாப் ஜோடியின் வின்னர், ரன்னர் என மொத்த பரிசுகளையும் அள்ளியது 'ரிதமிக் பீட்’டின் மாணவர்கள்தானாம்!

- ஆ.அலெக்ஸ் பாண்டியன்
படம்: ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism