Published:Updated:

”திருச்சி என்றாலே தீவினை தொலையும்!”

”திருச்சி என்றாலே தீவினை தொலையும்!”

”திருச்சி என்றாலே தீவினை தொலையும்!”

”திருச்சி என்றாலே தீவினை தொலையும்!”

Published:Updated:
”திருச்சி என்றாலே தீவினை தொலையும்!”

''இசைக் கலைக்கு அந்தக் காலத்தில் திருச்சிதான் தாயகம். ஒரு பாடகரோ, இசை வாத்தியம் வாசிக்கிறவங்களோ...திருச்சியில் வந்து அரங்கேற்றம் செய்து கைதட்டு வாங்கிட்டா, அவங்க தமிழ்நாடு முழுக்கப் பேரும் புகழும் வாங்கிடலாம்னு சொல்வாங்க... அதுதான் உண்மையும்கூட!'' - திருச்சி பற்றிய தன்னுடைய நினைவுகளை பிரமிப்போடும் பெருமையோடும் நினைவுகூர்கிறார் மிருதங்க வித்வான், கலைமாமணி திருச்சி ஆர்.தாயுமானவன்.

”திருச்சி என்றாலே தீவினை தொலையும்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

''60 வருஷத்துக்கு முன்னால திருச்சி அப்படி ஓர் அமைதியான இடம். இசைக் கச்சேரிகளுக்கு திருச்சிதான் தலைநகரம். தமிழ்நாடு முழுக்க  இருந்து இங்கே வந்து கச்சேரி நடத்துவாங்க. தொடர்ந்து அஞ்சாறு மணி நேரம்வரை கச்சேரி நடக்கும். மக்களும் கடைசி வரைக்கும் இருந்து ரசிப்பாங்க.

இப்ப இருக்கிற மலைக்கோட்டை நூற்றுக்கால் மண்டபம்தான் அப்ப எங்களுக்கான சபா. எந்த ஒரு கச்சேரியா இருந்தாலும் அங்கதான்  நடக் கும். இப்போ பெருசா இருக்கிற ஆர்.ஆர்.சபாவை அப்போது ஒரு சின்ன ரூமுக்குள்ள ஆரம்பிச்சாங்க. தமிழ், கல்வி, மருத்துவம்னு சமூகப் பணி செஞ்ச கி.ஆ.பெ.விஸ்வநாதனைத்தான் உங்களுக்குத் தெரியும். ஆனா, அவரு அப்பவே 60 வருஷங்களுக்கு முன்னாடி 'திருச்சி அமெச்சூர் சபா’ ஆரம்பிச்சு திருச்சியில கச்சேரிகள் நடத்திக்கிட்டு இருந்தார்.

திருச்சி மட்டும் இல்லாம, சுற்றுவட்டார ஊர்களுக்கும் இதுதான் தாய் நகரம். தஞ்சாவூர் ஜில்லாவுல இருந்து வர்ற எல்லா நாகஸ்வரக் காரர்களுக்கும் மேளக்காரர்களுக்கும் திருச்சி தான் புகலிடம். நாகஸ்வரக்காரர்கள் ஆண்டாள் வீதிகள்ல வாசிச்சுக்கிட்டே வரும்போது  தெருவெல்லாம் இசை நதி பாயும்.

அப்போ திருச்சியோட பெரிய திருவிழா பங்குனி உத்திரம்தான். சமயபுரம், மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம்னு எல்லா ஏரியாவும் களைகட்டும். அடுத்த பெரிய திருவிழா திருச்சி ஈ.பி.சாலையில் இருக்கிற நன்றுடையான் கோயிலின் விநாயகர் சதூர்த்தி விழாதான். கிட்டத்தட்ட 15 நாட்கள் நடைபெறும். பிரபலமான எல்லா வித்வான்களும் வந்து பாடுவாங்க. இப்பவும் அந்தக் கோயில் இருக்கு. ஆனா, கவனிக்கத்தான் ஆளே இல்லை.

திருச்சி கலைக்கு இடம் மட்டும் கொடுக்கலை. பல மனிதர்களையும் கொடுத்து இருக்கு. தியாகராஜ பாகவதர், எம்.ஆர்.ராதா, சிவாஜி கணேசன், டி.எம்.சௌந்தர்ராஜன் எல்லாருமே திருச்சிக்காரங்கதான்.

இப்ப இருக்கிற உறையூர்ல இருந்து மலைக்கோட்டை வரைக்கும் அப்ப எல்லாம் ஒரே காடுதான். முழுசா வயல்வெளி. இடையில ஒண்ணுமே இருக்காது. அதனால சாயந்திரம் 6 மணிக்கு மேல யாரும் வெளியில போக மாட் டாங்க. இப்ப இருக்கிற சாலை ரோடுதான் அப்ப பயணம் பண்ண இருந்த ஒரே வழி. பேருந்து வசதியும் அப்ப பெருசா கிடையாது. எங்கே போகணும்னாலும் மாட்டு வண்டியும், குதிரை வண்டியும்தான். உறையூரில் இருந்து மலைக்கோட்டைக்குப் போக, 2 பைசா கட்டணம் வசூலிப்பாங்க. இப்ப இருக்கிற தெப்பகுளம் தெற்குப் பகுதி வண்டி கட்டுற இடமா இருந் துச்சு.

மலைக்கோட்டைக்கு அடுத்து பிரபலமான இடம்... திருச்சி மார்க்கெட். தஞ்சாவூர், திரு வாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர்னு சுற்றி இருக்கிற எல்லா ஊருக்கும் இங்க இருந்துதான் சரக்குப் போகும். இவ்ளோ ஏன்? மதுரையில இருந்துகூட இங்க வந்துதான் லாரியில பொருட்கள் வாங்குவாங்க.

திருச்சிராப்பள்ளினு சொன்னாப் போதும்... எல்லாத் தீவினையும் தொலையும்னு திருநாவுக்கரசரே சொல்லி இருக்காரு. திருச்சியில வாழுறவங்க எல்லாரும் ரொம்பப் புண்ணியம் பண்ணி னவங்க. 'வாங்க... சென்னைக்குப் போயிடலாம்’னு என்னைக்கூட பலர் கூப்பிட்டாங்க. இந்த மலைக்கோட்டை, காவிரி இதை எல்லாம் விட்டுட்டுப் போக எப்படி மனசு வரும் சொல்லுங்க?

”திருச்சி என்றாலே தீவினை தொலையும்!”

- ஆ.அலெக்ஸ் பாண்டியன்
படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism