Published:Updated:

21-ம் நூற்றாண்டில் இருந்து 7-ம் நூற்றாண்டுக்கு ஒரு பயணம்!

21-ம் நூற்றாண்டில் இருந்து 7-ம் நூற்றாண்டுக்கு ஒரு பயணம்!

21-ம் நூற்றாண்டில் இருந்து 7-ம் நூற்றாண்டுக்கு ஒரு பயணம்!

21-ம் நூற்றாண்டில் இருந்து 7-ம் நூற்றாண்டுக்கு ஒரு பயணம்!

Published:Updated:

''மேடை நாடகங்கள் அழிந்துகொண்டு இருக்கிறது; நாடகக் கலையைக் காப்பாற்றுங்கள்!'' எனக் கலங்கும் கலை ஆர்வலர்களுக்கு ஆறுதல் சொல்வதுபோல், கரூர் குருதேவர் பள்ளி மாணவர்கள் ஒன்றுசேர்ந்து திருஞானசம்பந்தரின் வாழ்க்கையை உப்பிடமங்கலம் சிவன் கோயிலில் நாடகமாக அரங்கேற்றி, அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்துள்ளனர்.

21-ம் நூற்றாண்டில் இருந்து 7-ம் நூற்றாண்டுக்கு ஒரு பயணம்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தத் தகவலை 'என் விகடன்’ வாசகர் பூபதி கிருஷ்ணன் தொலைபேசி வாயிலாகத் தெரிவிக்க... நாடகத்தை இயக்கிய குருதேவர் பள்ளியின் முன்னாள் மாணவர் லோகேஸை சந்தித்துப் பேசினேன்...

''இந்த நாடகத்தை முதல்ல எங்கள் குருதேவர் பள்ளியில்தான் அரங்கேற்றினோம். அப்போ, எங்க நாடகத்தைப் பார்த்தப் பலரும் அசந்துபோய் பாராட்டினாங்க. எங்க பள்ளி முதல்வர் தேன்மொழி, 'இந்த நாடகத்தை உப்பிடமங்கலம் சிவன் கோயில்ல போடலாம்; இன்னும் நல்லா தயார் பண்ணுங்க’னு தட்டிக்கொடுத்து உற் சாகப்படுத்துனாங்க. உடனே மாணவர்களை ஒன்றுதிரட்டிக் களத்தில் இறங்கினோம். எங்க நாடகத்தில் நடிக்க ரெண்டாம் வகுப்பு சுட்டிகள் மத்தியில் பெரிய போட்டியே நடந்தது. ஏன்னா... அவங்கதானே நாடகத்தின் ஹீரோ.

நாடகத்துக்கு வசனம் எழுதி முடிச்ச பின்னாடி, ஹீரோ முதல் துணை நடிகர்கள் வரை எல்லோரிடமும் கொடுத்து மனப்பாடம் செஞ்சுக்கிட்டு வரச் சொன்னேன். சுட்டிப் பயலுக ஒரே நாள்ல பக்கம் பக்கமா இருக்கிற வசனத்தை மனப்பாடம் செஞ்சுக் கிட்டு வந்து பேசிக்காட்டி பிச்சு உதறிட்டாங்க. எங்க ஹீரோ... ஒரு படிக்கு மேலே போய், துணை நடிகர்கள் வசனத்தையும் சேர்த்து மனப்பாடம் பண்ணிட்டு வந்துட்டாரு. எல்லோரும் அசந்துபோயிட்டோம்.

மூன்று, நான்கு வாரங்கள் ரிகர்சல் நடந்தது. ரிகர்சலின்போது, நடிகர்களின் முகபாவம், வசன உச்சரிப்பு அனைத்தையும் ஆசிரியர் பாலசுப்பிரமணி யம் கற்றுக்கொடுத்தாரு. எல்லாம் ஓ.கே. பின்னணி இசை இருந்தால்தானே நாடகத்தைப் பார்க்கும்போது உயிரோட்டத்துடன் இருக்கும்னு நினைச்சோம். 7-ம் நூற்றாண்டில் நடக்கும் எங்கள் கதைக்குத் தகுந்த வாறு சினிமாவில் வர்ற பழைய பின்னணி இசையை எடிட் பண்ணிக்கொடுத்தாங்க எங்க கம்ப்யூட்டர் ஆசிரியை குமர நித்தியானந்த ஜோதி. நாடகத்துக்குத் தேவையான அந்தக் காலத்துப் பொருட்களைச் செலவு பார்க்காம வாங்கிக்கொடுத் தாரு எங்க தாளாளர் குமரன்.

21-ம் நூற்றாண்டில் இருந்து 7-ம் நூற்றாண்டுக்கு ஒரு பயணம்!

மூணு மணி நேரம் நடந்த நாடகத்தைப் பார்த்தவங்க '21-ம் நூற்றாண்டுல இருக்கிற எங்களை நாடகத்தின் வழியா 7-ம் நூற்றாண்டுக்கு அழைச்சுக்கிட்டு போயிட்டீங்க. சைவத்தையும் தமிழையும் வளர்த்த திருஞானசம்பந்தரின் வாழ்க்கையை அவர் பக்கத்துல இருந்து பார்த்தது போலவே இருந்தது’ என்று பாராட்டினாங்க'' என்று நெகிழ்ந்தார்.

திருஞானசம்பந்தராக நடித்த ஹீரோ, 2-ம் வகுப்பு மாணவர் அஸ்வின். ''நான் திருஞானசம்பந்தராவே மாறிட்டேன். தேவாரப் பாடல்களை மனப்பாடம் செய்யறது ஆரம்பத்துல கஷ்டமா இருந்துச்சு. அப்புறம் ரொம்ப ஈஸியா இருந்துச்சு'' என் றார்.

''சாம்பல் இருந்த குடத்தில் இருந்து பூம்பாவை உயிரோடு எழுந்த நிகழ்வு, பிரமிக் கும் வண்ணம் இருந்தது. அதைப் போல், நாம் இதுவரை அறிந்திராத பல நிகழ்வுகள் உள்ளிட்ட பல தகவல்களை தேடிப் பிடித்து நாடகமாக மாற்றி இருந்தனர். திருஞான சம்பந்தர் போல நடித்த அந்த மாணவனைப் பார்த்தபோது, திருஞானசம்பந்தரே நேரில் தோன்றியது போல இருந்தது'' என்றார் நாடகத்தைப் பார்த்த கோயில் அறங்காவலர் செந்தில்.

''இந்த நாடகம் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் நடத்தப்பட வேண்டும். நாடகத் தைக் கண்டுகளித்த பலரும் தங்களை மறந்து மெய்சிலிர்க்க, கண்களில் நீர் பெருக அமர்ந்து இருந்தோம்'' என்றார்கள் சிவனடி யார் குழந்தைவேலும் சரவணனும்.

மதிப்பெண்களை நோக்கி மட்டுமே மாண வர்களை ஓடச் செய்யாமல், இதுபோன்ற கலைகளையும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தால், இளைய சமுதாயமும் இந்தியா வும் கலையில் மிளிரும் நாள் வெகு தொலை வில் இல்லை!

21-ம் நூற்றாண்டில் இருந்து 7-ம் நூற்றாண்டுக்கு ஒரு பயணம்!

நா.சிபிச்சக்கரவர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism