Published:Updated:

வலையோசை - வல்லத்தான்

வலையோசை - வல்லத்தான்

வலையோசை - வல்லத்தான்

இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா..!

வலையோசை - வல்லத்தான்

 சச்சினுக்கு நியமன எம்.பி. பதவி கொடுத்துட்டாங்க. அவரு நாட்டுக்காகத்தான் விளையாண்டாரு. சரி... அவரு என்ன ஷூ வாங்க காசு இல்லாம இருக்காரா? நல்லாதானே சம்பாரிச்சாரு. அப்புறம் எதுக்கு பதவி? அவரு பேரைச் சொல்லி ஓட்டு வாங்கத்தானே..? அப்படி இல்லைனா ஏதாவது விளையாட்டு அமைப்புக்கு உண்டான பதவியைத்தானே கொடுக்கணும்? இந்த அரசியல் வியாதிங்க நடிகை ராக்கி சாவந்துக்கே கூட பதவி கொடுப்பாய்ங்க.

அது போன மாசம்...

இதனால் சகலமானவர்களுக்கு அறிவிப்பது என்னவென்றால்...

இன்று முதல் ஜூன் 12 வரை,

புதுக்கோட்டை தொகுதி ஆண்களுக்கு அரை பிளேட் கோழி பிரியாணியும், ஒரு குவார்ட்டர் பாட்டிலும் இலவசமாக வழங்கப்படும்.  

பெண்களுக்கு மிக்ஸி, கிரைண்டர் மேலும் வீட்டுச் செல வுக்குத் தேவையான பணமும் தாயுள்ளத்தோடு தரப்படும்.

வலையோசை - வல்லத்தான்

மக்கள் தாங்கள் சத்தியம் தவறாதவர்கள் என்பதைத் தங்கள் குழந்தையைக் கீழே போட்டுத் தாண்டி,  இந்த உலகுக்கு நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

இது இந்த மாசம்...

ஆளுங்கட்சியைத் தவிர மத்த எல்லாக் கட்சியும், 'இந்த ஆட்டத்துக்கு நான் வரல; இது போங்கு ஆட்டம்’னு சொல்லி விலகுறாங்க.  

அடப் பாவிங்களா... அந்த மக்கள் ஆசையில இப்படி மண்ணை அள்ளிப் போடுறீங்களே... இது நியாயமா?

உங்களுக்கு எல்லாம் அந்தக் கடவுள்தான் கூலி கொடுக்கணும்!

சிறுகதைதான் விறுவிறுப்பு!

வலையோசை - வல்லத்தான்

'அழகர்சாமியின் குதிரை’ படத்துக்குத் தேசிய விருதான தாமரை விருது கிடைச்சிருக்கு. இதுல என்ன சாதனைனா... காசு கொடுத்தா எது வேணும்னாலும் கிடைக்கும் என்கிற, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டுல, இதைப் போல படத்துக்கு ஒரு விருது கிடைக்குதுனா அது சாதனைதான்.

படத்துல நடிச்ச அப்புதானே ஹீரோ! ஆனால், துணை நடிகருக்கான விருதுதானே கிடைச்சிருக்கு. ஏன்? சரி... விடுங்க பாஸு! ஜனநாயகத்துல இதெல்லாம் சகஜம்தானே! எனக்குப் படத்தைவிட 'அழகர்சாமியின் குதிரை’ சிறுகதைதான் ரொம்பப் பிடிக்கும். அதுல இருந்த சஸ்பென்ஸ், விறுவிறுப்பு எல்லாம் படத்துல இல்லைங்க!

ஜாங்கிரி... டோங்கிரி!

வலையோசை - வல்லத்தான்

இந்தியாவில் உள்ளவங்கள்ல மூணுல ஒருத்தரு கஷ்டப்படுறதா ஒரு சர்வே சொல்லுதாம். அப்ப.. நல்லா இருக்குறதுல ஒண்ணு எதிர்க்கட்சி; அடுத்தது ஆளுங்கட்சி. மூணாவதா இருக்கிற மக்கள்தான் கஷ்டப்படுறது. சரிதானே..?

இந்த விஞ்ஞானிகளுக்கு வேற வேலையே இல்லையா..? இவங்களுக்கு ஒரு நாக்கா... இல்ல, ரெண்டு நாக்கா?

அப்பறம் என்னங்க... அதிக நேரம் தூங்குனா உடம்பு குறையும்னு லேட்டஸ்டா கண்டுபிடிச்சிருக்காங்களாம்!

வங்கத்து அம்மாவோட இம்சை நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா அதிகமாயிட்டே இருக்கு. கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் அவங்க கட்சிக்காரர்கள் யாரும் கம்யூனிஸ்டைச் சேர்ந்தவங்களோட திருமண பந்தம் வைக்கவேண்டாம்னு கட்டளையிட்டு இருந்தாங்க. அடுத்ததா, இப்ப மேலும் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 'செய்திகளைப் பார்க்காதீர்கள்; டான்ஸ், பாடல்களைக் கண்டு ரசியுங்கள்’ என்பதே மம்தாவின் புதிய உத்தரவு. தான் மக்களுக்கு ஆற்றிவரும் பணிகளைச் சில செய்தி சேனல்கள் தவறாக வெளியிடுவதால், இப்படி ஓர் உத்தரவு. ஹைய்யோ... ஹைய்யோ!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு