Published:Updated:

வலையோசை : கனவுகள் மேயும் காடு

வலையோசை : கனவுகள் மேயும் காடு

வலையோசை : கனவுகள் மேயும் காடு

வலையோசை : கனவுகள் மேயும் காடு

Published:Updated:
வலையோசை : கனவுகள் மேயும் காடு
##~##

க்கா மகள் தன் குறிப்பேட்டைக் காட்டி 'மாமா... இதப் பாரேன்’ என்றாள். 'அ’னாவை அழகாக எழுதி இருந்தாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ''ரொம்ப நல்லா இருக்கே... நீங்களா எழுதினீங்க?'' என்றேன்.

''ம்ம்ம்...'' என்றாள்.

''எந்த மிஸ் சொல்லிக்கொடுத்தாங்க?''

''ஹர்ஷா மிஸ்!''

''

வலையோசை : கனவுகள் மேயும் காடு

ஓ... எங்க மறுபடி எப்டினு போட்டுக் காட்டுங்க பார்ப்போம்.''

''பர்ஸ்ட், மேல ஒரு ஸ்மால் சர்க்கிள் இப்டிப் போட்டுட்டியா, அதுக்குக் கீழ ஒரு பெரிய எலிப்ஸ், அப்பறம் ரெண்டையும் ஜாயின்ட் பண்ணி ஒரு கர்வ், நெக்ஸ்ட் ஒரு ஹரிசாண்டல் லைன், வெர்டிகிள் லைன். அவ்ளோதான்...''

அக்கா கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தாள்,மாமா பூரித்திருந்தார். ஒன்றாம் வகுப்பு சேரும்போது தமிழய்யா பொன்னுசாமி, என் விரலைப் பிடித்து சிலேட்டில் 'அ’ எழுதிக் காட்டியதை நினைத்துக்கொண்டு இருந்தேன்.

விட்டத்து மூலையில் ஒட்டடைக்கூட்டினில் சிக்கிய பொன்வண்டைப் பார்க்கப் பாவமாயிருந்தது.

ரவு 11 மணி. ஆள் அரவமற்ற நேரம். ஒரு மினி பஸ் செல்லக்கூடிய அளவுக்கான சிவப்பு கப்பி சாலை. வேகமாக சைக்கிள் பெடலை அழுத்தத்தொடங்கினேன். இப்போது அம்மா சொன்ன சில கதைகள் ஞாபகத்துக்கு வந்தன. பேய்க் கதை என்றால் விழி பிதுங்கவைக்கும் அளவுக்குத் தத்ரூபமாகச் சொல்வாள். அந்தப் பனை மரத்துப்பக்கம் வானொசர (வான் உயர) ஆம்பிளை வெள்ள வேட்டி - சட்டையோட நெடுநெடுனு அரிவாள் வெச்சிக்கிட்டு நின்னு பார்த்ததாகச் சொல்வாள்.

வலையோசை : கனவுகள் மேயும் காடு

நாய்கள் அந்த அடர்ந்த வயல்வெளிகளில் எங்கோ ஊளை இட்டன. இதுபோல் நாய்கள் ஊளையிட்டால், அது கெட்டதுக் கான அறிகுறி என்பார்கள். மறுநாளே பலித்துவிடும். அய்யோ... ஆ... நான் பயந்ததுபோலவே அந்த ஒத்தைப் பனை மரம் வந்தது. அம்மா சொன்னாளே... அதேபோன்றதொரு வானொசர உருவம். வெள்ளை வேட்டி - சட்டை... அதேதான்! ஆனால், கையில் ஒன்றும் இல்லை. வியர்த்து ஊற்றி உடலில் சட்டை ஒட்டிக் கொண்டது. கைகால் எல்லாம் வெடவெடக்கத் தொடங்கியது. கைகள் நடுங்கியதை நன்றாக உணர்ந்தேன். வறட்டுத் தைரியத்தில் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு சென்றேன். அந்த உருவத் தின் உயரம் 20, 25 அடி இருக்கலாம். அம்மா சொல்வதுபோல் பனை மர உயரம் எல்லாம் கிடையாது. தலையில் முடி இல்லாதது போல்தான் தெரிந்தது. வேட்டி காற்றில் ஆடுவதுபோலவும் தெரிந்தது. குலதெய்வத்தை வேண்டிக்கொண்டே நெருங்கிவிட்டேன்.

இன்னும் 30 அடி தூரம், 20 அடி, 10 அடி.... அடக் கடவுளே! செல்போன் டார்ச் லைட்டை அடித்துப் பார்த்தேன். அதன் காலடிக்கு கீழே இப்படித்தான் இருந்தது. ''இலவச தொலைக்காட்சி வழங்க வருகை தரும் எங்கள் ஏழைகளின் ஒளியே, வருக! வருக! இடம்: கீழ்மாத்தூர் பஞ்சாயத்து அலுவலகம்’. அது மின் துறை அமைச்சருக்கான வரவேற்புப் பதாகை!

1996-ம் வருடம். எங்கள் ஊருக்குத் தொகுதி எம்.எல்.ஏ. ஒரு நிகழ்ச்சிக்காக வருகை தந்திருந்தார். அவர் வரும்பொருட்டு ஒரு மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் ஆடல், பாடல், பேச்சுப் போட்டி போன்றவை அடங்கும்.

வலையோசை : கனவுகள் மேயும் காடு

பேச்சுப் போட்டிக்கு என்னையும் சேர்த்து மூவர் தேர்வு செய்யப் பட்டோம். என்னைவிடத் திறமை வாய்ந்தவர்கள் மற்ற இருவரும். மூவருக்கும் மூன்று தலைப்பு. எனக்கு அறிஞர் அண்ணா, மற்றொருவ னுக்கு காந்தி, இன்னொரு பெண்ணுக்குக் காமராஜர். பலமான போட்டி என்றே நினைத்தேன். அதற்காக நிறையச் செய்திகளைத் தொகுத்து 2 பக்க அளவில் மனப்பாடம் செய்து வைத்திருந்தேன். மற்ற இருவரும் இன்னும் அதிகமாகப் பேசச் செய்திகளைத் தொகுத்திருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

ஒரு மண்டபத்தில் இதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டு இருந்தன. ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்திருந்தன. அதன் பிறகு  என்ன நடக்கும் என்று தெரியாமலேயே மூவரும் அமர்ந்திருந்தோம். சிறப்புடன் பேச வேண்டும் என்ற ஆர்வமிகுதியால் மூவரும் கடைசி நேரம் வரை மனப்பாடம் செய்துகொண்டு இருந்தோம். ஆனாலும், கடைசி வரையில் எங்களை யாரும் பேச அழைக்கவில்லை. இறுதியாக, சட்ட மன்ற உறுப்பினர் கிளம்பும் முன் யாரோ ஒருவர் நாங்கள் வந்திருப்ப தைச் சொல்ல... 'அப்படியா?’ என்று கேட்டுவிட்டு,  என்னுடன் வந்த பையனை அழைத்து, முதல் பரிசு என்று சொல்லி ஒரு பெரிய பாத்திரத் தைக் கொடுத்தார்கள். பிறகு, என்னை அழைத்து இரண்டாம் பரிசு என்று சொல்லி, சிறிதான பாத்திரத்தைக் கொடுத்தார்கள். மூன்றாவதாக, அந்தப் பெண்ணுக்கு இன்னும் சிறிய அளவிலான பாத்திரத்தைக் கொடுத்தார்கள். அதன் பிறகு, எந்தப் பேச்சுப் போட்டியிலும் நான் பங்கேற்கவில்லை. எனக்கு அரசியல் வெறுப்பு உண்டானதும் இந்த காலகட்டங்களில் இருந்துதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism