Published:Updated:

என் ஊர் : வ.அகரம்

எப்பவும் எனக்கு ரதி வேஷம்!

என் ஊர் : வ.அகரம்

எப்பவும் எனக்கு ரதி வேஷம்!

Published:Updated:
##~##

மார்க்ஸியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலப் பொதுச்செய லாளரும், பெரியார் சிந்தனையாளருமான வெ.ஆனைமுத்து, தான் வளர்ந்த ஊரானபெரம் பலூர் மாவட்டத்தில் உள்ள வ.அகரம் பற்றிய நினைவுகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

 ''ஊருக்கு வடக்கே ஓடுற வெள்ளாறும் தெற்கே ஓடுற சின்னாறும்தான் எங்க ஊருக்கான அடையாளங்கள். இப்போது இருக்கிற போக்கு வரத்து வசதி எதுவும் அப்போ கிடையாது. வெளியூரில் இருந்து எங்கள் ஊருக்கு யாராவது வரணும்னா,  நடராஜா சர்வீஸ்தான்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சின்னாற்றில் வருஷம் முழுக்கத் தண்ணி ஓடிக்கிட்டே இருக்கும். கார்த்திகை மாசம் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். அப்போது எல் லாம் நீச்சல் தெரிஞ்சவங்க நீச்சல் அடிச்சு ஆற்றைக் கடந்து போயிருவாங்க. இல்லைன்னா நாலைஞ்சு பேர் கைகோத்துகிட்டு மெள்ள நடந்துபோவோம்.

என் ஊர் : வ.அகரம்

சித்திரை மாதம் மட்டும்தான் ஆற்றின் தென் மடவுல (பள்ளம்) தண்ணி தேங்கிக்கிடக்கும். அதில் ஆண்களும் பெண்களும் தனித் தனியாக் குளிப்பாங்க. வருஷம் முழுக்கத் தண்ணி ஓடின ஆத்துல, இப்போ அடைமழை பெஞ்சாதான் தண்ணியைப் பார்க்க முடியுது.

என் ஊர் : வ.அகரம்

ஊரில் வருஷா வருஷம் சித்திரை மாதம் 18 நாள் நடக்கும் திரௌபதை அம்மன் கோயில் திருவிழாவுக்குச் சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்து ஜனங்க வருவாங்க. ஒவ்வொரு நாள் ராத்திரியும் விடிய விடிய பாரதக் கதை படிப் பாங்க. அதுல குட்டிப் பூசாரி வேஷம் எனக்கு. பெரிய பூசாரி என்ன சொன்னாலும் 'ஆமா, ஆமா’னு சொல்லணும். அதுதான் என்னோட ஒரே வசனம்.

அப்போ கோடை விடுமுறை விட்டா, சோழன் மாளிகை நடேசன் என்பவர் வருவார். அவரோடு ஊர் இளைஞர்கள் வேஷம் கட்டிக்கொண்டு ராம நாடகம், பாகவத நாடகம் போடுவாங்க. ஆறாம் வகுப்புப் படிக்கிற வரைக் கும் நான் ரெண்டு அடி நீளத்துக்கு முடி வெச்சி ருந்தேன். என் தம்பி இளங்கோ இறந்த பின்னாடி மூன்றாவது பிள்ளையான எனக்கு மூக்குக் குத்திவிட்டாங்க. பொண்ணு மாதிரியே இருந்ததால, அப்போ எனக்கு எப்பவும் ரதி வேஷம்தான் கிடைக்கும்.

ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரைக்கும் லெப்பைகுடிக்காட்டில் உள்ள அரசுப் பள்ளியில் படித்தேன். அந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்புக்கு ஆசிரியராக இருந்த கணபதி வாத்தியார், தனக்கு வரும் குடியரசு, விடுதலை ஆகிய இதழ்களை என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொல்வார். இவர்தான் சுயமரியாதைக் கருத்துக்களை எனக்குச் சொல்லி கொடுத்த வர்.

சின்னாற்றங்கரையில தாத்தாவுக்குச் சொந்தமாக இருந்த தென்னை மரங்களில் கள் இறக்கு பவரின் மகனான ரெங்கசாமியும் நானும் நண்பர்கள் ஆனோம். அவனோட சேர்ந்து சடுகுடு, உப்பு மூட்டை விளையாடுவோம். அவனோட வீட்டுக்குப் போனா, பழைய சோத்துல தயிர் ஊத்திக் கொடுப்பாங்க. நான் அந்த வீட்டில் சாப்பிடுறது தெரிஞ்சு,  என் பாட்டி என்னைத் திட்டிக் குளிக்கச் சொன்னுச்சு. என் தோழனையே தீண்டப்படாதவனாகச் சொன்ன சாதிக்கு எதி ராக நான் திரும்புனது அப்போதான்.

என் ஊர் : வ.அகரம்

அப்போலேர்ந்து ஊருக்குள் நடக்கிற திரு விழாக்களுக்கு எதிராகவும், கோயிலுக்குப் போகக் கூடாதுனும் பிரசாரம் செய்ய ஆரம்பிச்சேன். நான் சொல்வதில் உண்மை இருப்பதாகஉணர்ந்த ஊர் சனம், ஒரு வருஷம் முழுக்கத் தீபாவளி கொண்டாடவே இல்லை. பெரியாரிடமே பாராட்டுப் பெறும் அளவுக்கு என்னைப் பக்குவப்படுத்தியது இந்த ஊர்தான். ஊருக்கும் மக்களுக்கும் நன்றி!''

- சி.ஆனந்தகுமார்
படங்கள்: எம்.ராமசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism