Published:Updated:

டீ சொல்லுங்க... காசு கொடுத்திருங்க!

டீ சொல்லுங்க... காசு கொடுத்திருங்க!

டீ சொல்லுங்க... காசு கொடுத்திருங்க!

டீ சொல்லுங்க... காசு கொடுத்திருங்க!

Published:Updated:
##~##

ல்லியான உடல்வாகு, கறுப்பு கூலிங்கிளாஸ், செக்யூரிட்டி யூனிஃபார்ம், செக்யூரிட்டி தொப்பி, கூடுதலாக விநாயகர் டாலர்... இந்த கெட்டப்பில் 24 மணி நேரமும் கரூர் பஸ் ஸ்டாண்டைச் சுற்றி வரும் 'மூணு சட்டை சாமியார்’ ஊரில் ஏக பிரபலம்!

 அவரை இரவுப் பொழுது ஒன்றில் ஒரு டீக்கடை வாசலில் சந்தித்தேன். ''வாங்க தம்பி... என் பெயர் ஜோதிடர் என்.ராஜு. அரசியல் கணிப்புல நான் ஸ்பெஷலிஸ்ட். ஒபாமா முதல் நம்ம அம்மா வரை என்னோட கணிப்பின்படிதான் அரியணைல உட்காந்தாங்க'' என்று ஆரம்பத்திலேயே கிரெடிட் எடுத்துக்கொண்டவர், அடையாள அட்டையைக் கேட்டு வாங்கிப் பரிசோதிக்கிறார். அதற்கு அவர் சொன்ன காரணம்தான் அலப்பறையானது ''ஏன்னா... நான் எந்த இங்கிலீஷ் பத்திரிகைக்கும் பேட்டி தர்றதில்லைங்க. ''சரி... ஒரு டீ சொல்லுங்க. பணம் நீங்கதான் தரணும். இப்பவே சொல்லிட்டேன்'' என்று கறார் கண்டிஷன் போட்டபடி பேச்சைத் தொடர்ந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டீ சொல்லுங்க... காசு கொடுத்திருங்க!

''எதிர்காலத்தைக் கணிக்குற பவர் எனக்குள்  வந்து 30 வருஷம் ஆச்சு. 'விஜயகாந்த் அரசியலுக்கு வருவார்’னு பத்து வருசத்துக்கு முன்னாடியே நான் கணிச்சுச் சொன்னேன்.(அவரே பல பேட்டியில சொல்லிட்டாரு தல) ரஜினிக்குப் பேர்ல கூட்டுத்தொகை மூணு வருது. அந்த நம்பருக்கு அரசியல் யோகம் குறைவுதான். மக்கள் நெனச்சா அவரை அரசியலுக்கு இழுக்கலாம். வந்துட்டா அவர் ஜனாதிபதி ஆகுறதை யாராலயும் தடுக்க முடியாது! (அவர் நினைச்சாலும்கூடவா?)

டீ சொல்லுங்க... காசு கொடுத்திருங்க!

கனிமொழிக்கு இனிஷியல் 'மு’ வருது. (மு.க தானே வரும்?!) இப்ப அந்த 'மு’ வேலை செய்ய ஆரம்பிக்குது. அவங்க அரசியல்ல முன்னேற அந்த 'மு’ உதவும். (அது 'மு’வா... இல்லை 'மூவ்’வா?) இன்னும் மூணு வருசத்துல அவங்க அசைக்க முடியாத அரியாசனத்துல உக்காருவாங்க. ராஜபக்ஷே இந்தியாவுலதான் படுகொலை செய்யப்படுவார். பிரபாகரன் பூரண சுகத்தோட இருக்காரு. நேத்துகூட எனக்கு அருள் வரும்போது, அவர்கிட்ட பேசுனேன். கொஞ்ச நாள்ல புலிகள் யுத்தம் ஆரம்பிச்சு, மூணு வருஷத்துல தமிழ் ஈழம் வாங்கிருவாங்க'' என்று அடுக்கிக்கொண்டே போனவர், திடீரெனத் தன் சட்டையைக் கழற்றினார்.

''நான் சாமி... அதனால மூணு சட்டை போடுவேன். கரூரே என்னை மூணு சட்டை சாமியாருன்னுதான் கூப்பிடும். உள்ளே வெள்ளை சட்டை, அடுத்து பச்சை, மேலே செக்யூரிட்டி யூனிஃபார்ம்!'' என்று முதல் சட்டையைக் கழற்றினார். ''தம்பி... இதுக்கு மேல போட்டோ எடுக்க வேண்டாம். இது போட்டோ எடுக்க தடை செய்யப்பட்ட பகுதி. கோயில் கர்ப்பக்கிரகம் மாதிரி'' என்று சட்டையைப் பற்றி பில்டப் கொடுத்தார்.

''நம்ம கரூரே ஒரு காலத்துல என் ஆட்சியிலதான் இருந்தது. (ரைட்டு!) அதுனால கேரளா போய்த் தவமிருந்து மந்திரம், ஜோசியம் படிச்சிட்டு வந்தேன். (மூணு மாச கோர்ஸா தல?) இப்பக் கரூரைக் காவல் காக்க இந்த செக்யூரிட்டி யூனிஃபார்ம்ல கிளம்பிடுறேன். (யார்கிட்ட இருந்து.. உங்ககிட்ட இருந்தா?) நடந்தே கரூரை வலம் வருவேன். நான் இங்கே இருக்கிறதால ஏதோ சட்டம் - ஒழுங்கெல்லாம் பரவாயில்லை. (இல்லைன்னா ரொம்ப நல்லாயிருக்குமா?) என்னைப் பார்த்தா எப்பேர்ப்பட்ட திருடனும் திசை தெரியாம தெறிச்சு ஓடுவான். (ஏன் பாஸ் பங்கு கேட்பீங்களா?)

என் தொப்பியில ஏன் விநாயகர் வெச்சிருக்கேனு கேக்குறீங்களா? (கேட்கவே இல்லையே?) நான் ஊரைக் காவல் காக்குறேன். சாமி என்னைக் காவல் காக்குது. அதான் வெச்சிருக்கேன். நம்ம உடம்பு, உயிர் ரொம்ப முக்கியம்ல தம்பி. அடுத்து, சட்டைப் பையில முன்னாடி தச்சு வெச்சிருக்குற கண்ணாடி, என் முன்னாடி நிக்குறவன் நல்லவனா? கெட்டவனான்னு எனக்கு ஸ்கேன் பண்ணிக் காட்டும்'' (நீங்க நல்லவரா... கெட்டவரா?) என்று சொல்லிக்கொண்டு இருக் கும்போதே நைட் ரவுண்ட்ஸ் போலீஸ்காரர்கள் இருவர் டீக்கடைக்குள் நுழைய... ''சரி, வேகமாக் கௌம்புங்க... நாள பின்ன வாய்ப்பு இருந்தாப் பார்ப்போம். மறக்காம டீக்கு காசு கொடுத்துட்டுப் போங்க'' என்றபடி எஸ்கேப் ஆனார் மூணு சட்டை சாமி!

- கட்டுரை, படங்கள்: ஞா.அண்ணாமலை ராஜா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism