Published:Updated:

அமெரிக்காவுக்கு அனுப்புறோம் சாமியோவ்!

அமெரிக்காவுக்கு அனுப்புறோம் சாமியோவ்!

அமெரிக்காவுக்கு அனுப்புறோம் சாமியோவ்!

அமெரிக்காவுக்கு அனுப்புறோம் சாமியோவ்!

Published:Updated:
##~##

சி, பாசி மணிகளைக் கைகளில் ஏந்தித் தெருத் தெருவாக விற்கும் நரிக்குறவர்ளைப் பார்த்தால், ''பாவம்... எப்படித்தான் வாழ் றாங்களோ?''என்று ஒரு நிமிடம் இரக்கப்பட்டு, பின் கிளம்பிவிடுவோம்தானே? ஆனால், அப்படி இல்லாமல், அவர்களின் வாழ்க்கை முன்னேற கை கொடுத்து இருக்கிறார்கள் சில அமெரிக் கர்கள்.

 சமீபகாலமாக நரிக்குறவர்களின் தயாரிப்புகளை இறக்குமதி செய்துகொள்வதற்காக யு.எஸ்., யு.கே. நாடுகளைச் சேர்ந்த பிரபல நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாடுகளில் உள்ள பிரபல பல்கலைக்கழக மாணவர்கள் தேவராயநேரியில் உள்ள நரிக்குறவக் குடியிருப்புகளுக்கு வந்து அந்த மக்களுடனேயே தங்கி வியாபார யுத்திகளை அவர்களுக்குக் கற்றுத்தந்துவிட்டு, ஊசி பாசி மணிகள் செய்யும் முறைகளை கற்றுக்கொண்டு செல்கின்றனர். இவ்வளவுக்கும் காரணம், அந்த நரிக்குறவக் குடியிருப்பில் 1990-ல் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட NEWS (Narikkuravar Welfare  Society) என்னும் அமைப்புதான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமெரிக்காவுக்கு அனுப்புறோம் சாமியோவ்!

அந்த அமைப்பின் நிறுவனச் செயலாளரும் தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரிய உறுப்பின ருமான மகேந்திரனிடம் பேசினேன். ''எல்லோரும் அவங்கவங்க வேலையைப் பார்த்துட்டுப் போயிட்டே இருக்காங்க.  சமுதாயத்தை மேல கொண்டுவர்றது எப்படினு நானும் என் மனைவி சீதாவும் யோசிச்சப்பக் கிடைச்ச ஐடியாதான் இந்த அமைப்பு.  அந்தக் காலத்துல நான் 12-வது படிச்சு முடிக்க எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு எனக்குத்தான் தெரியும். இந்த அமைப்பு மூலமாக் கல்வி மற்றும் மருத்துவ சேவையை ஆரம்பிச்சோம். நரிக்குறவ மாணவர்கள் படிப்பைப் பாதியிலயே நிறுத்திடுறது வாடிக்கையான விஷயம். அதைத் தவிர்க்க, அவங்களுக்கு பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்துலயே ஹாஸ்டல் ஆரம்பிச்சோம். அதுக்கு நல்ல பலன் கிடைச்சது'' என்று மகேந்திரன் சொல்லி முடிக்க,  தொடர்கிறார் அவரது மனைவி சீதா.

அமெரிக்காவுக்கு அனுப்புறோம் சாமியோவ்!

''எங்க இனத்துல வீடுகளில்தான் பிரசவங்கள் நடக்கும். நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணை எட்டி உதைப்பாங்க. அந்த அதிர்ச்சியில் குழந்தை பிறக்கும். இதுதான் முன்பு இருந்த பிரசவ முறை. இப்போ செவிலியர் ஒருத்தர் தன்னார்வத்தோட, வந்து பிரசவம் பார்த்துக் கொடுக்குறாங்க. இது போன்ற விஷயங்களைச் செய்தாலும் எங்க மக்கள் முன்னேற வாழ்வாதாரம், பொருளாதாரம் வேணுமே? அதைப் பத்தி யோசிச்சப்ப தோணின ஐடியாதான்... வெளிநாட்டு  ஏற்றுமதி!

அமெரிக்காவுக்கு அனுப்புறோம் சாமியோவ்!

நம் நாட்டுல தெருத் தெருவா அலைஞ்சு  வித்தாலும் நூறு ரூபாய்க்குப் பொருள் விற்கிறது கஷ்டம். அதே ஊசி பாசி மணியை வெளிநாட்டு ஆட்கள் ஆர்வமா வாங்கிட்டுப் போறதைப் பார்த்து இருக்கோம். இதுக்காக 'சிடியா’ (நரிக்குறவ பாஷையில் பாசி மணி என்று அர்த்தமாம்!) என்னும் கம்பெனி தொடங்கினோம். ஆரம்பத்தில் சாராலிங் கிறவர் எங்க கூடவே தங்கி, ஏற்றுமதி நுணுக்கங்களைக் கத்துக் கொடுத் தார். ரெண்டு வருஷமா ஏற்றுமதி செஞ்சு நல்லா சம்பாதிக்குறோம். இப்போது அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றின் மூலம் தன்னார்வ மாணவர்கள் சிலர் எங்ககூடத் தங்கி, வணிகரீதியான பயிற்சிகள் கொடுத்துட்டு இருக்காங்க. விரும்பும் நிறங்களை மணியில் ஏற்றுவது முதல் விலை நிர்ணயம் செய்யும் முறைகள் வரை கற்றுக்கொடுத்திருக்காங்க. இனிமே, எங்க வாழ்க்கையை நாங்களே மேம்படுத்திருவோம்!'' என்கிறார் நம்பிக்கையாக!

ஒளிமயமான எதிர்காலம் உங்கள் உள்ளங்கையில் தெரிகிறது!

- க.ராஜீவ் காந்தி
படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism