Published:Updated:

இனி, சேவைதான் என் வாழ்க்கை!

இனி, சேவைதான் என் வாழ்க்கை!

இனி, சேவைதான் என் வாழ்க்கை!

இனி, சேவைதான் என் வாழ்க்கை!

Published:Updated:
##~##

''என் வாழ்க்கை முழுக்கப் போராட்டங்கள்தான்!'' - பொங்கி வர வேண்டிய வேதனைக்குப் பதிலாக, நம்பிக்கை தரும் புன்ன கையோடு பேசுகிறார் பிரியங்கா. தமிழ் நாட்டில் வேலைவாய்ப்புத் துறையில் பதிவுசெய்த ஒரே திருநங்கை. தமிழகத்திலேயே செவிலியர் பயிற்சி படிக்கும் முதல் திருநங்கையும் இவர்தான். இவரைப் பற்றி என் விகடன் வாசகர் கோபால் 'வாய்ஸ் ஸ்நாப்’ மூலம் தகவல் கொடுத்து இருந்தார்.

 திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் படித்து முடித்துத் தேர்வுக்குக் காத்திருக்கும் பிரியங்காவைச் சந்தித்தேன். ''நான் பிறந்து வளர்ந்தது மணப்பாறை பக்கத்துல் இருக்கும் வையம்பட்டி. அங்கே 10-வது வரைக்கும் படிச் சேன். அடுத்தது ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிச்சது எல்லாம் ஒரு பாய்ஸ் ஸ்கூல்லதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனி, சேவைதான் என் வாழ்க்கை!

சின்ன வயசுல இருந்தே என் உடம்புல ஏதேதோ மாற்றங்கள். ஏழு வயசுலேயே ஸ்கூல் டயத்துல மட்டும்தான் பசங்க டிரெஸ் போடு வேன். வீட்டுக்கு வந்த உடனேயே பக்கத்து வீட்டுப் பிள்ளைங்கக்கிட்டே இருந்து பாவாடை, சட்டை வாங்கிப் போட்டுக்குவேன். எனக்கு அண்ணனும் தம்பியும் மட்டும்தான். வீட்டுல துணி துவைக்கிறது, சமைக்கிறதுனு அம்மாவுக்குக் கூடமாட வேலை செய்வேன். அதனால அம்மாவும் அப்பாவும் பெருசா கண்டுக்கலை.  

20 வயசுலதான் பிரச்னை பெருசாச்சு. என் நடவடிக்கையில சந்தேகம் வந்து என்னை வீட்டுலேயே அடைச்சு வெச்சுட்டாங்க. வெளில போனாக் கிண்டல், கேலி. வீட்டுக்குள்ள வெறுப்பு, சண்டைனு என் வாழ்க்கைக் கிட்டத்தட்ட நரகமாயிடுச்சு. ஒரு கட்டத்துல வீட்டைவிட்டு ஓடிப்போய் திருநங்கைகளோட சேர்ந்துட்டேன். ஆபரேஷன் பண்ணி முழுமையான திருநங் கையா மாறினேன்.

இனி, சேவைதான் என் வாழ்க்கை!

ஆபரேஷன் செஞ்சதுக்கப்புறம் உடம்பு ரொம்ப மோசமாப் போச்சு. நிறைய ரத்தம் வெளியேறினதால, நடக்கக் கூட முடியலை. திரும்பவும் பிரச்னை. ஏழு வயசுல இருந்து அது வரைக்கும் என் மனசுல ஓடுற எண்ணங்கள் எல்லாமே, 'நாம எப்ப பொண்ணா மாறப்போறோம்’கிறதைப் பத்திதான் இருக் கும். ஆனா, பெண்ணா மாறினதுக்கு அப்புறம், 'படிக்கணும். அதுவும் சின்ன வயசுல ஆசைப்பட்ட மாதிரி நர்ஸ் ஆகணும். நமக்குத் தான் எங்கேயும் பாசம் கிடைக்கலை. நாமளா வது மத்தவங்களுக்குப் பாசத்தைக் காட்ட ணும்’கிற எண்ணம் வந்துச்சு.  

பொதுவாக திருநங்கைகள்னா கேவலமான தொழில் பண்ணுவாங்கங்கற எண்ணம்தான் நம்ம மக்கள் மனசுல இருக்கு. அந்த மாதிரி ஒருநாளும் நடந்துக்கக் கூடாதுன்னு நினைச்சேன். தனியா வீடு எடுத்துத் தங்கித் தையலும் கத்துக்கிட்டேன். 'சேஃப்’ என்ற அமைப்பு வெச்சு நடத்திகிட்டு இருக்குற கஜோல் (இவரும் திருநங்கைதான்) எனக்கு முழு உதவி யும் பண்ணினாங்க. நான் படிச்சு முடிச்சிருந்த ப்ளஸ் டூ-வையும் தையல் பயிற்சியையும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெஞ்சோம். அங்க பதிவுசெஞ்ச முதல் திருநங்கை நான்தான்.

இனி, சேவைதான் என் வாழ்க்கை!

னக்கு நர்ஸிங் படிக்கணும்னு ஆர்வம் இருந்தாலும், எப்படிப் படிக்கிறதுங்கிற தயக்கம் இருந்துச்சு. கஜோல்தான் எனக்கு அம்மாவா இருந்து உதவி செஞ்சாங்க. அடுத்ததா எந்த காலேஜ்ல என்னைச் சேர்த்துக்குவாங்கனு தயக்கமா இருந்தது. அப்பத்தான் ஹர்ஷமித்ரா மருத்துவமனை டாக்டர் கோவிந்தராஜன் சார் முன்வந்தார். போன வருஷம் ஜூனில் சேர்ந்தேன். கல்லூரி ஏத்துக்கிட்டாலும், கூடப் படிக்கிறவங்க ஏத்துக்குவாங்களானு அடுத்த சந்தேகம். ஆனா, எனக்குக் கூடப் பிறக்காத சகோதரிகளை காலேஜ் கொடுத்துச்சு. பஸ் செலவு, வீட்டு வாடகை, சாப்பாடு இதெல்லாம் சில தொண்டு நிறுவனங்கள் மூலமாக் கிடைக்குது.  

எங்க சமூகத்துல மட்டுமில்லாம எல்லாருமே நர்சிங் படிச்ச ஒரே திருநங்கை நான்தான்னு பெருமையாப் பேசுறாங்க. சங்கடங்கள் நீங்கி முதல்முறையா சந்தோஷமா இருக்கு. இனிமே எனக்கு சேவை மட்டுமே வாழ்க்கை. எல்லாரையும் சந்தோஷமாப் பார்த்துப்பேன்!'' என்கிறார் தாய்மை உணர்வோடு!

- க.ராஜீவ்காந்தி
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism