Published:Updated:

வலையோசை : நிஜாம் பக்கம்

வலையோசை : நிஜாம் பக்கம்

வலையோசை : நிஜாம் பக்கம்

வலையோசை : நிஜாம் பக்கம்

Published:Updated:
வலையோசை : நிஜாம் பக்கம்

குஷ்புவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான் பத்திரிகைகளுக்கு வாசகர் கேள்விகள் அனுப்புவது வழக்கம். ஒரு முறை ஒரு மாத நாவலில் நான் எழுதிய கேள்வியையும் அதற்கான பதிலையும் என்னுடைய முழு முகவரியோடு பிரசுரித்து இருந்தார்கள். ஐந்து நாட்களுக்குப் பின் எனக்கு ஒரு கடிதம் வந்தது. திருப்பத்தூரில் இருந்து குணசேகரன் என்று அனுப்புபவர் முகவரி யில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்படி ஒரு ந(ண்)பரை எனக்குத் தெரியாதே என்ற யோசனையுடனே கடிதத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தேன்.

'அன்புள்ள குஷ்பு அவர்களுக்கு..’ என்று ஆரம்பமாகி இருக்கவும், அதிர்ச்சியாகி மீண்டும் பெறுபவர் முகவரி பார்த்தேன். சரியாக என் முகவரிதான் எழுதப்பட்டு இருந்தது. 'சரிதான்’ என்று மேற் கொண்டுப் படிக்க ஆரம்பித்தேன்.

'அன்புள்ள குஷ்பு அவர்களுக்கு,

எனது பெயர் பி.குணசேகரன். நான் எட்டாம் வகுப்பு படிக்கி றேன். நான் உங்களுடைய ரசிகன். உங்களுடைய எல்லாப் படத்தையும் பார்த்துவிடுவேன். முதல் நாளே பார்த்துவிடுவேன். திரும்பத் திரும்பப் பார்ப்பேன்.  நீங்கள் அழகாயிருக்கிறீர்கள். நன்றாக நடிக்கிறீர்கள். உங்கள் பாட்டு கேசட் வாங்கி அடிக்கடி பாட்டுக் கேட்பேன். உங்கள் போட்டோ ஒன்றை கண்டிப்பா எனக்கு அனுப்பி வைக்கவும்.

 இப்படிக்கு,
பி.குணசேகரன்.’

சிறிது யோசனை செய்த நான், என்னுடைய பதில் வந்த மாத இதழை எடுத்துப் பார்த்தேன்.

அட, முதல் கேள்வி நடிகை குஷ்பு பற்றி ஒரு வாசகர் எழுப்பிய கேள்வியும் அதற்கான பதிலும் முடிந்து அதைத் தொடர்ந்து என்னுடைய முழு முகவரி மற்றும் கேள்வியும் பிரசுரமாகி இருந்தது. ஆக, என் முகவரியைத்தான் குஷ்பு முகவரி என்று நினைத்து, அந்தப் பையன் லெட்டரை எனக்கு அனுப்பிவிட்டான் என்று புரிந்து கொண்டேன். எனவே, அவனுக்குப் பதில் எழுதினேன்.

வலையோசை : நிஜாம் பக்கம்

'தம்பி, இது குஷ்பு முகவரி இல்லை. என்னுடைய முகவரி. அதனால், நீ வேறு கடிதம் எழுதி குஷ்புவின் முகவரிக்கு அனுப்பு. நானே விசாரித்து குஷ்புவின் முகவரியை அடுத்த கடிதத்தில் எழுதி அனுப்புகிறேன். குஷ்பு போட்டோ என்னிடம் இல்லை. வேண்டும் எனில், என்னுடைய போட்டோவை உனக்கு அனுப்பி வைக் கிறேன்’

என்று பதில் எழுதி 'நன்றாகப் படிக்கணும்’ என அறிவுரைகள் எழுதி, (மாட்னான்டா ஓர் அடிமை!) போஸ்ட் செய்துவிட்டு, அதை மறந்தும்விட்டேன்.

அடுத்த ஐந்தாறு தினங்களில் அந்தப் பையனிடம் இருந்து பதில் கடிதம் வந்தது.

'அன்புக்கும் மரியாதைக்கும் உரிய அண்ணாவுக்கு,

வணக்கம். உங்க கடிதம் கிடைத்தது. நடிகை குஷ்பு என்று நினைத்து உங்க முகவரிக்குக் கடிதம் அனுப்பிவிட்டேன். மன்னிக் கவும். குஷ்புவோட அட்ரஸ் அனுப்புறதா எழுதி இருந்தீங்க. அப்படி குஷ்பு அட்ரஸ் அனுப்பாட்டியும் பரவாயில்லை. உங்க போட் டோவை தயவுசெய்து அனுப்பிடாதீங்க.

இப்படிக்கு,
பி.குணசேகரன்.’

(அடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!)

காந்தியும் நண்பரும்!

வலையோசை : நிஜாம் பக்கம்

ண்பர் என்னிடம் சொன்னார்: ''எப்பொழுதும் என் சட்டைப் பையில் காந்தி படம் இருக்கும். மறந்திட்டு வெளியில் வந்திட்டாலும் திரும்பப் போய் எடுத்திட்டுத்தான் வருவேன்''

நான் கேட்டேன்: ''இப்பவும் பாக்கெட்ல இருக்கா? காட்ட முடியுமா?'

நண்பர் சொன்னார்: ''காட்டுவேன்; ஆனால், கையில தர மாட்டேன்'

நான் சொன்னேன்: ''காட்டுங்க''

நண்பர் எடுத்துக் காட்டினார், ஐநூறு ரூபாய் தாளை. அதில் இருந்த காந்தி என்னைப் பார்த்து சிரித்தார்.

வலையோசை : நிஜாம் பக்கம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism