Published:Updated:

அடடே... நீதிதாசன்!

அடடே... நீதிதாசன்!

அடடே... நீதிதாசன்!

அடடே... நீதிதாசன்!

Published:Updated:
##~##

வியரங்க மேடைகளில் தமிழ் மணக்கக்  கவிதை பாடிக்  கொண்டு இருந்தவர் அந்த இலக்கி யவாதி. இப்போது கந்துவட்டிக்கு எதிராகவும், வெளிநாட்டுக் குளிர் பானங்களுக்கு எதிராகவும், மத நல் லிணக்கத்துக்கு ஆதரவாகவும் குரல் கொடுப்பதுடன் களப்பணியும் ஆற்றி வருகிறார் என்று அறிந்து திருவாரூரில் அவரைச் சந்தித்தேன்.

 அவர் கவிஞர் நீதிதாசன். இயற்பெயர் ஜவஹர். ''என் தந்தையின் நகை வணிகத்தைத்தான் நான் பார்த்துவந்தேன். இலக்கியப் பணிக்காக அதை உதறித் தள்ளியவன் நான். படைப்பாளியாக இருப்பதால் மட்டுமே மக்களின் உயர்வுக்கு எதுவும் செய்துவிட முடியாது என்பதை உணர்ந்து, இப்போது களப்பணியாளராக என்னை மாற்றிக்கொண்டவன்'' என்று தன்னைப் பற்றிசின்ன தாக ஒரு முன்னுரை தந்தவர் தொடர்ந்து பேசினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடடே... நீதிதாசன்!

''இன்று அநீதிக்கு எதிராகவும், சமூகக் கொடுமைகளை ஒழிப்பதற்கும் வெறும் கவிதைகள் மட்டுமே போதாது என்று நினைக்கிறேன். மக்கள் மத்தியில் அதற்கான தேவைகளை,கட்டா யத்தைப் பிரசாரம் மூலம் கொண்டு செல்ல வேண்டும். அப்படியான பிரசாரமும்  ஃப்ளெக்ஸ் பேனர்களில் மட்டும் தெரிந்து எவருடைய மனசிலும் ஒட்டாமல் உதிர்ந்து போய்விடக்கூடாது. எனவேதான், என்னுடைய களப்பணியையும்  பிரசாரத் தையும் நவீன வடிவத்தில், புதுமையாக, மக்களை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்று யோசித்துச் செய் தேன்.

மத நல்லிணக்கம் தொடர்பான பிரசாரத்தை மக்களிடம் எப்படியாவது கொண்டு செல்ல நினைத்தேன். அதற்காக 'திருவாரூர் நகரில் நடுநாயக மாக உள்ள கமலாலயம் குளத்தில் 10 மணி நேர 'தொடர் தண்ணீர் தவம்’ என்கிற பிரசாரத்தினை வடிவமைத் தேன்.

கையில், 'மத நல்லிணக்கம் காப்போம்’ என்கிற போர்டைப் பிடித்துக்கொண்டு 10 மணி நேரம் தண்ணீரில் மிதந்து மதநல்லிணக்கப் பிரசாரம் செய்தோம்!'' என்கிற நீதிதாசன் இந்த 'மனித நேயப் பேரவை’ எனும் அமைப்பை கடந்த 14 ஆண்டுகளாக நடத்திவருகிறார்.

திருவாரூர் மாவட்டத்தில் கந்துவட்டிக்கு கடன் வாங்குபவர்கள் இடையே விழிப்பு உணர்வை ஏற் படுத்த இவர் செய்த இன்னோர் ஐடியா - 'கந்து வட்டிக்குக் கருமாதி நிகழ்ச்சி.’

'இப்படி எல்லாம் மக்கள் பணியாற்ற உக்காந்து யோசிப்பீங்களா... இல்லை ரூம் போட்டு யோசிப்பீங்களா..’ என்று சிரித்துக்கொண்டே கேட்டேன். சீரியஸாகப் பதில் சொன்னார் நீதிதாசன். ''இப்போ உள்ளூரிலேயே நிறையக் குளிர்பானங்கள் தயார் ஆகுது. ஆனால், விளம்பரத்தினைப் பார்த்து மயங்கி அந்நிய நாட்டுக் குளிர்பானங்களைத்தான் எல்லோரும் குடிக்கிறாங்க. இது உடம்புக்கு கெடுதல் மட்டுமில்லை. நம்ம உள்ளூர் வணிகத்தையும், தொழிலையும் முடக்குகிற செயல். இதுக்கு ஏதாச்சும் செய்யணும்னு யோசிச்சேன். 'அந்நியக் குளிர்பானங்கள் கழிப்பறை கழுவத்தான் பயன்படும். பாருங்கள், அந்தக் குளிர்பானங்களை ஊற்றினால்

அடடே... நீதிதாசன்!

கழிப்பறைகள்  எப்படி சுத்த மாகின்றன’ என்பதை வீடு வீடாகச்சென்று செயல்விளக்கம் தந்து பிரசாரம் செய் தோம்'' என்று அவர் சொல்லிக் கொண்டு இருந்தபோது ஒரு மினி லாரியில் சிறுசிறு பானைகள் வந்து இறங்கின. நம் கேள்வியைப் பார்வை யாலே புரிந்துகொண்டவர், ''இன்று எல்லாக் கடைகளிலும் விதவிதமான போதை பாக்குப் பொட்டலங்கள் விற்கப் படுகின்றன. அதற்கு எதிரான எங்கள் பிரசாரம்தான் இது. அதாவது போதைப் பாக்குப் பொட்டலங்களை எரித்து அந்த சாம்பலை இந்தப் பானைகளில் வைத்து கடலில் கரைக்கப் போகிறோம்.

'ஏ மனிதா... இந்த அஸ்தி மாதிரி

நீயும் ஆவாய்... எச்சரிக்கை’ - என்று சொல்லத்தான் இந்த அஸ்திப் பானைகள்'' என்றார்!

புதுசு புதுசா யோசிக்குறாங்கப்பா!

- ஜி.கணேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism