Published:Updated:

இன்று சமூகசேவை... நாளை அரசியல்!

நம்பிக்கை இளைஞர்கள்

இன்று சமூகசேவை... நாளை அரசியல்!

நம்பிக்கை இளைஞர்கள்

Published:Updated:
##~##

திருச்சி தேவதானம் பகுதியில் ஒரு மாலை நேரம். கூட்டமாகச் சில இளைஞர்கள் உரத்த குரலில் பிரசாரம் செய்துகொண்டு இருந்தார்கள். ''மளிகைக்கடைக்கு உங்க பையனை அனுப்பும்போது நீங்க கொடுக்கும் ஒரு ரூபா, ரெண்டு ரூபாதான் நீங்களே உங்க குழந்தைக்கு கத்துக்கொடுக்குற லஞ்சம் வாங்குற குணம். சாதிச் சான்றி தழ்ல ஆரம்பிச்சு, ரேஷன் அட்டை, டிரைவிங் லைசென்ஸ்னு எது வாங்கணும்னாலும் லஞ்சம் கொடுக்குறீங்க. 'அதைக் கொடுத்தாதானேப்பா வேலை நடக்குது’னு நீங்க சொல் லலாம். இனிமே கொடுக்காதீங்க. ரெண்டு நாள், மூணு நாள் ஆகியும் சரியான பதில் இல்லையா? தகவல் அறியும் உரிமைச் சட்டத்துல மனு குடுங்க'' - என்று பாடம் எடுக்கிறார்கள் அந்த இளைஞர்கள். முதலில் சாதாரணமாகத் திரும்பிப் பார்க்கும் சிலர் சுவாரஸ்யமாகி, கவனிக்க ஆரம்பிக்கிறார்கள். சிலர் காது கேட்காத மாதிரி கடந்தும் போகிறார்கள்.

 பிரசாரம் செய்யும் இளைஞர்கள் அனைவருமே கல்லூரி மாணவர்கள். மீசை முளைக்காத வயதில் மக்கள் தொண்டு, அரசியல் எனக் கொடி பிடிக்கும் இளைஞர்களை சினிமாக்களில் மட்டுமே பார்த்த மக்களுக்கு, நேரில் பார்க்கும்போது ஆச்சர்யமாகத்தானே இருக்கும். இவர்களைப்பற்றி என் விகடன் வாசகர் சண்முகம் வாய்ஸ் ஸ்நாப்பில் தகவல் சொல்லி இருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்று சமூகசேவை... நாளை அரசியல்!

அந்த இளைஞர்களைச் சந்தித்தேன். ''என் பேரு வைத்தீஸ்வரன். நான் எட்டாவது வரைக்கும் ஒரு ஸ்கூல்ல படிச்சேன். ஒன்பதாவது வேற ஸ்கூல்ல படிக்க அட்மிஷனுக்குப் போனேன். 450 மார்க் வாங்கி இருந் தும் எனக்கு சீட் கொடுக்கல. அதே சமயம் 320 மார்க் வாங்கின ஒரு பையனுக்கு சீட் கொடுத்தாங்க. விசாரிச்சா, அந்தப் பையன் எம்.எல்.ஏ- வோட சிபாரிசுன்னு சொன்னாங்க. அன்னிக்குதான் என் மனசுல அந்த விதை விழுந்துச்சு. அதுக்குப் பிறகு பலமுறை யோசிச்சு ஒரு முடிவை எடுத்தேன்.  மக்களுக்கு நல்லது செய் யணும், அதுக்கு அரசியல்தான் சரியான வழி. அதுக்கான முதல்படிதான் இது''- முஷ்டி முறுக்கிச் சொல்கிறார். வைத்தீஸ்வரனோடு சேர்ந்து அரவிந்தன், பாலாஜி, பிரபாகரன், முஹம்மது நூர் என அந்த ஏரியா வைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரும் கை கோத்து, 'சுதந்திர சமூக சேவை மன்றம்’ என்ற அமைப்பை நடத்திவருகிறார்கள்.

இன்று சமூகசேவை... நாளை அரசியல்!

''எங்க அமைப்பை ஆரம்பிச்சு ஏழு மாசம் ஆயிடுச்சு. எங்க ஏரியா முழுக்க லஞ்ச ஒழிப்பு மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்பு உணர்வுக் கூட்டம், பாரதியார் பிறந்த நாள் விழா, சாலைப் பாதுகாப்பு விழிப்பு உணர்வு நிகழ்ச்சி, பல் மருத்துவ முகாம், மரம் நடு விழானு எங்களால முடிஞ்ச அளவு சேவை செஞ்சுக்கிட்டு இருக்கோம். எங்க பிரசாரத்தால லஞ்சம் ஒழிஞ்சிடும், உலகம் பசுமை ஆகிடும்னு சொல்ல வரல. ஒருத்தராவது லஞ்சம் வாங்க மாட்டேன். கொடுக்கமாட்டேன்னு உறுதி எடுக்கலாம். ஒரு தெருவுல நாலு செடிங்க வைக்கலாம். அந்த நம்பிக்கையோட எங்களால முடிஞ்ச பங்கை இந்த சமூகத்துக்குக் கொடுத்துக் கிட்டே இருப்போம்.'' என்கிறார் அரவிந்தன்.

''இனி வரும் காலங்களில் கல்வி, சுகாதாரம், விவசாயம் என்று மூன்று விஷயங்களை அடிப்படையா வெச்சுத் தீவிரமா வேலை செய்யப்போறோம். வீட்டுல நிறைய எதிர்ப்பு இருக்கு. இருந்தாலும், சமூகத்துல மாற்றத்தை ஏற்படுத்தியே தீரணும்னு நாங்க உறுதியா இருக்கோம்'' என்கிறார் முஹம்மது நூர்.

எல்லாம் சரி... மக்களிடம் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு இருக்கிறது என்றால், உதட்டைப் பிதுக்குகிறார்கள்.

''யாருமே, ஆர்வத்தோட வர்றது கிடையாது. நாளைக்கு முகாம், நிகழ்ச்சி இருக்குதுனா, முதல் நாளே வீடு வீடா போய்ச் சொல்வோம். முகாம் அன்னைக்கும் போய் 'வாங்க’னு கூப்பிடுவோம். இப்போது நூறு பேர் வர்றாங்க. இது ஆரம்பம்தான். இன்னும் நாங்கள் போக வேண்டிய தூரம் எவ்வளவோ  இருக்கு'' என்கிறார்கள் தைரியமாக!

- ஆ.அலெக்ஸ் பாண்டியன்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன், ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism