Published:Updated:

எல்லோரும் இங்கே சாதனையாளர்கள் !

ஞா.அண்ணாமலை ராஜா, ஆ.அலெக்ஸ் பாண்டியன் படங்கள்: ஜெ.வேங்கடராஜ், ர.அருண் பாண்டியன்

##~##

ஒரே பள்ளியில் படிக்கும் 960 மாணவ, மாணவியர்களும் 'இந்தியா புக் ஆஃப் ரெக்காட்ஸ்’ சாதனையைச் செய்து இருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? கரூர் பரணி பார்க் பள்ளி மாணவர்கள்தான் அந்தச் சாதனையாளர்கள்.

ஒன்றாம் வகுப்பு மாணவி ரக்ஷனா, ஒன்பதாம் வகுப்பு மாணவி ஸ்ரீநிதி மற்றும் விக்னேஷ்வரன், இரண்டாம் வகுப்பு மாணவன் ப்ரியதர்ஷன் ஆகிய நான்கு பேரும் தனி நபராக 'லிம்கா ரெக்கார்ட்ஸ்’ செய்தவர்கள்.

''ரக்ஷனா சிலம்பம் சுத்துறதுல கில்லி. தொடர்ந்து 4 மணி நேரம் இரண்டு கையால சிலம்பம் சுத்தி சாதனை செஞ்சிருக்கா... அதுலேயும் முதல் 20 நிமிடம் முட்டை மேல நின்னு செஞ்சுருக்கா... '' என ஆச்சர்ய இன்ட்ரோ கொடுக்கிறார்கள் ரக்ஷனாவின் தோழிகள்.  

''நான் சினிமா, பக்தி, கர்னாடிக்னு  மொத்தமா 150 பாடல்களைத் தொடர்ந்து 16 மணி நேரம் வாசிச்சு, சாதனை செஞ்சேன். என்னோட சாதனை ஆசிய அளவுல பதிவாகி இருக்கு'' என்று சொல்லும் ஸ்ரீநிதிக்கு இசையமைப்பாளர் ஆக வேண் டும் என்பதே கனவு.  

''36.69 நொடிகளில் 115 கிரிக்கெட் பிளேயர்ஸ் பெயர்களைச் சொல்லி தேசிய சாதனை செஞ்சுருக்கேன். அடுத்தடுத்து நிறைய சாதனைகள் செய்ய வேண்டி இருக்கு. வெயிட் பண்ணுங்க'' என்கிறான் விக்னேஷ்வரன் குறும்பாக.

பாகவதரில் ஆரம்பித்து ஏ.ஆர்.ரஹ்மான் வரை கிட்டத்தட்ட 40 பாடல்களை கீ-போர்டில் இசைத்து அசத்தி இருக்கிறான் ப்ரியதர்ஷன்.  

எல்லோரும் இங்கே சாதனையாளர்கள் !

அடுத்த சாதனைப் பட்டியலில் இருக்கும் 24 சுட்டிகளும் 10 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரே நேரத்தில் ஐந்து லிம்கா சாதனைகளைச் செய்து இருக்கிறார்கள்.

''நாங்க எல்லோருமே சாரணர் இயக்கத்துல இருக்கோம். நாங்க கேம்ப்ல கலந்துக்க டெல்லிக்குப் போனோம். போன கையோட இந்த லிம்கா சாதனையையும் செஞ்சுட்டோம். நாங்க 24 பேரும் ஒரே நேரத்துல கீ-போர்டு வாசிச்சுக்கிட்டே பாட்டும் பாடி, இந்தச் சாதனையைச் செஞ்சோம். மொத்தமா அஞ்சு ரெகார்ட்ஸ் அங்கிள். சொல்றேன், எண்ணிக்கோங்க'' என்றபடி சொல்ல ஆரம்பிக்கிறார் ரேஷ்மா.

எல்லோரும் இங்கே சாதனையாளர்கள் !

''முதல்ல 5 பாடல்களை 25 நிமிஷத்துல பாடிகிட்டே வாசிச்சோம். அடுத்து, 'ஹம்ஸே சோட்டே ஷூட்’ங்கிற  சாரணர் இயக்கப் பாடலையும், மூணாவதா 'ஜாரே ஜஹாங்கே அச்சா’ பாடலையும், நாலாவதா 'வீ ஷல் ஓவர் கம்’ என்ற இங்கிலீஷ் பாட்டையும் 25 நிமிஷத்துல 50 தடவை பாடினோம். அஞ்சாவதா, மொத்தமா 24 பேர் ஒண்ணாசேர்ந்து இந்தச் சாதனைகள் செஞ்சது. டோட்டலா அஞ்சு ஆயிடுச்சா?'' ஐந்து விரல்களையும் முகத்தின் முன் விரித்துக் கேட்கிறாள் ரேஷ்மா.

இவர்கள் செய்த அதே சாதனையைப் பள்ளியில் படிக்கும் 960 மாணவ - மாணவிய ரும் பள்ளித் திடலில் செய்து இருக்கிறார்கள். ''960 பேரும் ஒரே நேரத்துல, கீ-போர்டு வாசிச்சுக்கிட்டே தேச பக்திப் பாடல்களை ஒண்ணாச் சேர்ந்து பாடி லிம்கா ரெக்கார்ட்ஸ் செஞ்சோம். அதைப் பார்க்க எங்க அம்மா, அப்பா எல்லாம் ஸ்கூலுக்கே வந்திருந்தாங்க'' எனக் கோரஸாகக் குரல் கொடுக்கிறார்கள் மாணவர்கள்.

எல்லோரும் இங்கே சாதனையாளர்கள் !

ஆச்சர்ய விழிகளோடு பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமசுப்ரமணியனைச் சந்தித்தால், ''படிப்பு மட்டும் வாழ்க்கைக்குப் போதாது சார். இது மாதிரியான விஷயங்களும் குழந்தைகளுக்குத் தேவை. இதுல எங்க முயற்சிகளை விடக் குழந்தைகளுடைய ஆர்வம்தான் சாதனை களுக்குக் காரணம்''- சிம்பிள் ஸ்டேட்மென்ட் கொடுக்கிறார்.

எல்லோரும் இங்கே சாதனையாளர்கள் !

சுட்டிகள் ஆர்ப்பரிக்கக் கையசைத்து விடை பெற்றேன்!

அடுத்த கட்டுரைக்கு