Published:Updated:

மாற்றுத் திறனாளிகளின் தாய்!

குளக்குடி கலக்கல் கலையரசி

மாற்றுத் திறனாளிகளின் தாய்!

குளக்குடி கலக்கல் கலையரசி

Published:Updated:
##~##

''பழையபடி இயங்க முடியுமா?'' என்ற கேள்விக்கு டாக்டர்கள் கிட்டத்தட்ட கைவிரித்துவிட்டனர். கலகலப்பு இழந்தார் கலை யரசி. ஏற்கெனவே அவரால் மாடிப் படி ஏற முடியாது. அதிக நேரம் நிற்கவும் முடியாது. தொடர்ந்து கொஞ்ச தூரம் நடக்க முடியாது. லேசாக இடித்துக்கொண்டாலே அவருடைய எலும்புகள் நொறுங்கிவிடும். இத்தனை உடல் இம்சைகளை எதிர்கொள்ளுவதற்கு ஏற்ற சராசரி உயரமும் கிடையாது. இப்படிப் பல  தொல்லைகள் இருந்தாலும் இரண்டாவது ஜென்மமாக மருத்துவ மனையில் இருந்து மீண்டுவந்தார் கலையரசி. காரணம்,  திருச்சி மாவட்டத்தில் கலையரசியை நம்பி இருக்கும் நூற்றுக்கணக்கான மாற்றுத் திற னாளிகள்!

மாற்றுத் திறனாளிகளின் தாய்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 கலையரசியைச் சந்திக்கச் சென்றேன்.  லால் குடியைத் தாண்டி நகர சந்தடிகளில் இருந்து ஒடுங்கிக்கிடக்கிறது குளக்குடி. தன்னுடைய சொந்த மனையில் மாற்றுத் திறனாளிகளுக்காக அவர் எழுப்பி இருக்கும் விஸ்தாரமான கட்ட டத்தில் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டு இருக்கிறார் கலையரசி.

''ஏழு குழந்தைகளில் கடைக்குட்டியாகப் பிறந்தவள் நான். உயரக் குறைபாடு, போலியோவினால் பாதிக்கப்பட்ட கால்கள் மற்றும் கால்சியம் குறைபாடு காரணமாக அடிக்கடி உடைந்துபோகும் எலும்புகள் என்று என்னுடைய உடலில் ஏகப்பட்ட பிரச்னைகள். என்னுடைய குறைபாடுகள் என்னைப் பெரிதாகப் பாதிக்காத வகையில், என் குடும்பத்தினர் என்னை அரவணைத்து வளர்த்தார்கள். பள்ளி முடித்து வெளியில் வந்தபோதுதான், கை, கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் பற்றிய நிதர்சனம் எனக்குத் தெரிந்தது. சக மனிதர்களால் கேலி கிண்டலுக்கு ஆளானவர்களாக, சொந்தங்களாலேயே விலக்கப்பட்டு வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தவர்கள் என்னை வெகுவாகப் பாதித்தார்கள். எனக்குக் கிடைத்ததைப் போல நல்ல குடும்பமும் வசதியும் அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. ஆனால், என்ன செய்ய வேண்டும் என்று அப்போது தெரியவில்லை'' என்றவர் கொஞ்சம் இடைவெளி விட்டுத் தொடர்ந்தார். ''தையல் ஆசிரியர் படிப்பை முடித்ததும் திருச்சியில் இருக்கும் கிறிஸ்துவ மிஷனரிஸ் நடத்தும் பள்ளி ஒன்றில் ஆசிரியை ஆனேன். அங்கு சேவையாற்றிய சிஸ்டர்களின் உதவியோடு அவர்களின் பக்குவத்தையும், சமூகத்தில் களம் இறங்கி செயல்படும் திடத்தையும் கற்றுக்கொண்டேன். அங்கு இருந்து வெளியேறி மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக்காக 13 வருடங்களுக்கு முன் டிரஸ்ட் ஒன்றை ஆரம்பித்தேன். அதுதான் பூர்ணோதயா டிரஸ்ட்.

மாற்றுத் திறனாளிகளின் தாய்!

மாற்றுத் திறனாளிகளுக்கு நிழல் தந்து, அவர் களின் மறுவாழ்வுக்காகப் பல்வேறு தொழிற் பயிற்சிகளை இலவசமாகத் தருகிறேன். கூடவே, அவர்களுக்கான அடையாள அட்டை, அரசின் நலத் திட்டங்கள், மருத்துவ முகாம், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக சுய உதவிக் குழு, வங்கிக் கடன், வேலைவாய்ப்பு ஆலோசனை இவற்றையும் தருகிறேன். அவர்களுக்கு அத்தியா வசியமான உளவியல் சார்ந்த கவுன்சிலிங்குக்கும் ஏற்பாடு செய்கிறேன்.  

மாற்றுத் திறனாளிகளின் தாய்!

2008-ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு விபத்து என் எலும்பு களை நொறுக்கி, மருத்துவமனையில் படுக்க வைத்து விட்டது. என் கூடவே இருந்த மாற்றுத் திறனாளிகளின் பிரார்த்தனைகள்தான் என்னை மீண்டும் நடமாட வைத்தது. கை, கால்கள் நன்றாக இருப்பவர்களேவேலை இல்லை என்று விரக்தியில் இருக்கும் சமூகத்தில், சொந்த உடலே ஒத்துழைக்க மறுக்கும் மாற்றுத் திறனா ளிக்காக வேலை தேடுவது சற்று சவாலாகத்தான் இருந் தது. ஆனால், நானும் ஒரு மாற்றுத் திறனாளி என்பதால், வெளித் தெரியும் குறைகளையும் மீறி உள்ளுக்குள் புதைந்து இருக்கும் திறமைகளை வெளியில் கொண்டுவர முடிந்தது. முந்தைய பேட்சில் பயிற்சி முடித்து சம்பாதிக்க ஆரம்பித்தவர்கள், அடுத்து வருபவர்களை கை தூக்கிவிட, என்னோடு கைகோத்துக்கொள்கிறார்கள், ஆல விருட்சமாக நான் எதிர்பார்த்ததையும் தாண்டி பூர்ணோதயா பரந்து விரிந்து இருக்கிறது.

ஒவ்வொருவரும் தன்னுடைய தனிப்பட்ட குறைபாடுகளில் மனம் உழன்று முடங்கிக்கிடந் தால் தானும் முன்னேற வாய்ப்பு இல்லை. தான் சார்ந்த சமூகத்துக்கும் எதுவும் செய்ய முடியாது. இல்லையா?'' எளிமையான வார்த்தைகளில் நம் எல்லோருக்குமான கனமான கேள்வியை முன் வைக்கிறார் கலையரசி!

- எஸ்.சுமன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism