Published:Updated:

அப்படியே சாப்பிடலாம்!

மணக்கும் மணப்பாறை முறுக்கு...

அப்படியே சாப்பிடலாம்!

மணக்கும் மணப்பாறை முறுக்கு...

Published:Updated:
##~##

ணப்பாறையில் மட்டும் அல்ல; தமிழ்நாட்டின் சில ஊர் பேருந்து நிலையங்களில்  நீங்கள் 'மணப்பாறை முறுக்கேய்ய்ய்ய்...’ என்ற  குரல்களைக் கேட்டு இருக்கக் கூடும். வாங்கும் மனநிலை இல்லை என்றாலும் அவர் களின் குரலும், முறுக்குப் பாக்கெட்டின் கவர்ச்சியுமே ''எப்பா.. இங்க ஒரு பாக்கெட் கொடு...'' எனச் சொல்ல வைத்துவிடும்.

 முறுக்குகளில் 'மணப்பாறை முறுக்கு’க்கு மட்டும் அப்படி என்ன மவுசு இருக்கிறது? மணப்பாறையில் இறங்கி யாரிடம் முறுக்கு பற்றிக் கேட்டாலும் 'முறுக்கு மனோகர்’ என்ற பெயர் சொல்கிறார்கள்.''ரொம்ப வரு ஷமா அவங்க குடும்பம்தான் இங்கே முறுக்கு சுடுறாங்க. இப்படியே போங்க... யார்கிட்டக் கேட்டாலும் வீட்டைக் காமிப்பாங்க'' என்று ஊர்க்காரர்கள் கை காட்டிய திசையில் சென்று மனோகர் வீட்டை அடைந்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்படியே சாப்பிடலாம்!

''இரண்டு தலைமுறையா நாங்க முறுக்குத் தயாரிக்கிற தொழில் செய்றோம். 'மணப்பாறை முறுக்கு’க்குனு தனி அடையாளம் கிடைச்சது 50 வருஷத்துக்கு முன்னாடிதான்'' என்று என்னிடம் பேசியபடியே, கிட்டத் தட்ட 15 கிலோ மாவை ஒரே ஆளாகப் பிசைகிறார். அரிசி, உளுந்துமாவில்  சரியான பதத்துக்கு நீர் சேர்த்து எள், ஓமம், சீரகத்தைக் கலந்து, கைப்பிடி மாவை குழாயில்வைத்துப் பின்பு  எண்ணெயில் கொஞ்சம் நீர் தெளித்து முறுக்குச் சுடும் பதத்துக்கு எண்ணெய் தயாரா எனப் பார்க்கிறார்.

''எங்க ஊர் முறுக்கோட ருசிக்குக் காரணமே இந்த ஊர் தண்ணிதான். இங்கே இருக்கிற கிணத்துல கிடைக்கிற உப்புத் தண்ணிதான் முறுக்குக்கு ருசி கொடுக்குது. அப்பா கத்துக் கொடுத்த கைப்பக்குவம் இன்னொரு முக்கிய மான காரணம்'' என்று சொல்லி முடிப்பதற்கும் எண்ணெய்க் காய்வ தற்கும் சரியாக இருக்க... சீரான இடைவெளியில் ஒவ்வொரு முறுக்காக எண்ணெயில் பிழிகிறார்.

''உண்மையைச் சொல்லணும்னா மணப் பாறை முறுக்கு பிறந்த இடம் ரெயில்வே ஸ்டேஷன்தான். அப்பா அங்கதான் தொழிலை ஆரம்பிச்சாரு. முறுக்கு பிசினஸ் பிக்-அப் ஆனதும் பஸ் ஸ்டாண்ட்ல ஆரம்பிச்சு, பல இடங்கள்லேயும் விற்க ஆரம்பிச்சிட்டோம். இப்போ இந்த ஊர்ல கிட்டத்தட்ட 100 குடும்பங்கள் முறுக்குத் தொழில் செஞ்சு கிட்டு இருக்காங்க'' என்றபடியே பொன் நிற மாக மாறிய முறுக்கைக் கரண்டியில் எடுத்து எண்ணெயை வடித்துக் கூடையில் அடுக்கு கிறார்.

அப்படியே சாப்பிடலாம்!

''ஒரு நாளைக்குச் சராசரியா  மூணாயி ரத்துல இருந்து நாலாயிரம் எண்ணிக்கை வரைக்கும் முறுக்குச் சுத்துவோம். 10 முறுக்கு உள்ள ஒரு பாக்கெட்டை நாங்க எட்டு ரூபாய்க்குத் தர்றோம். அதைக் கடையில 10 ரூபாய்க்கு விற்பாங்க. தீபாவளி மாதிரி  சம யத்தில ஒரு மூட்டை மாவு ஓடும். அதாவது கிட்டத்தட்ட 10 ஆயிரம் முறுக்கு!'' பேசிக் கொண்டே எல்லா முறுக்குகளையும் கூடை யில் அடுக்கிவைக்கிறார்.

''நாங்க இங்க தயாரிக்கிற முறுக்கு உள் ளூர் மட்டும் இல்லாம அமெரிக்கா, துபாய், சிங்கப்பூர்னு பல நாடுகளுக்கும் ஏற்றுமதி யாகுது. போன மாசம்கூட துபாய்ல இருந்து வந்தவங்க ஆயிரம் முறுக்கு வாங்கிட்டுப் போனாங்க.

என்னோட குழந்தைகள் படிச்சுகிட்டு இருக்காங்க. ஆனாலும், எனக்கு அடுத்து இந்தத் தொழிலை யார் செய்வாங்கன்னுதான் தெரியலை'' என்று சொல்பவர் முகத்தில் சற்று வருத்தம் எட்டிப்பார்க்கிறது.!

- ஆ.அலெக்ஸ் பாண்டியன்
படங்கள்: ஜெ.வேங்கடராஜ், ர.அருண் பாண்டியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism