Published:Updated:

புள்ளவராயன் குடிகாடு திரும்பிய திசை எல்லாம் பட்டதாரிகள்!

ஓர் ஆச்சர்ய கிராமம்

புள்ளவராயன் குடிகாடு திரும்பிய திசை எல்லாம் பட்டதாரிகள்!

ஓர் ஆச்சர்ய கிராமம்

Published:Updated:
##~##

''ஒரு கிராமம் முழுக்கவே பட்டதாரிகள் என்று எங்காவது கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? தஞ்சை மாவட்டத்தில் உள்ள புள்ளவராயன் குடிகாடுதான் அந்த உதாரணக் கிராமம். நானும் அந்த ஊரைச் சேர்ந்தவன்தான்'' என்று ஊர்ப் பாசத்துடன் வாய்ஸ் ஸ்நாப்பில் தகவல் தந்து இருந்தார் என் விகடன் வாசகரும் தஞ்சையின் பிரபல மனநல மருத்துவருமான கே.ராதாகிருஷ்ணன்.

 அம்மாபேட்டையில் இருந்து வடுவூர் செல்லும் வழியில் சுமார் 10 கி.மீ. தூரத்தில் இருக்கிறது புள்ளவராயன் குடிகாடு. ஊருக்குள் செல்ல ஒரே ஒரு பஸ் மட்டும்தான். ஊருக்குள் நுழைந்து மகாத்மா காந்தி நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த சிவானந்தம் என்பவரைச் சந்தித்தேன். 1967-லேயே பி.எஸ்சி. கணிதம் படித்தவர். இருந்தாலும், விவசாயி என்று சொல்லிக்கொள்வதில்தான் அவருக்குப் பெருமை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எங்க கிராமம்தான் 1970-லேயே கல்வி அறிவு முழுமையாகப் பெற்ற கிராமம். அப்பவே வீட்டுக்கு வீடு பட்டதாரிகள் இருப்பாங்க. இப்ப 750 குடும் பங்களா, கிட்டத்தட்ட 3,000 பேர் இருக்கோம்.

புள்ளவராயன் குடிகாடு திரும்பிய திசை எல்லாம் பட்டதாரிகள்!

1954-லேயே எங்க ஊருக்குத் துவக்கப் பள்ளி வந்துடுச்சு. 1963-ல் ஹைஸ்கூல் வந்துடுச்சு. 1970-களிலேயே எங்க ஸ்கூலோட முதல் செட்ல படிச்ச ஒருத்தர், டாக்டருக்குப் படிச்சு அமெரிக்காவுல செட்டில் ஆனார். அப்ப எல்லாம் எங்களுக்குப் படிக்கிறதுக்கு வசதியா இருந்தது பூண்டி புஷ்பம் காலேஜ்தான். இப்ப எங்க ஊர்ல இருந்து அதிகம் பேரு வெளியூர் போய்ப் படிக்கறதால சில காலேஜ் பஸ் ஊருக்குள்ள வருது. ஆனா, நாங்க படிச்ச காலத்துல 20 கி.மீ. நடந்தேதான் போகணும்.

எங்க கிராமத்தில் இருந்து மட்டும், 18 டாக் டர்கள், 100-க்கும் அதிகமான இன்ஜினீயர்கள்,  ஆசிரியர்கள், போலீஸ் அதிகாரிகள் உருவாகி இருக்காங்க. பாலகிருஷ்ணன்னு ஒரு இன்ஜினீயர் தமிழ்நாடு வெடி மருந்து தொழிற்சாலையில் ஜி.எம்-மா இருந்திருக்காரு. அப்பாவுனு ஒருத்தர் வணிக வரித் துறையில

புள்ளவராயன் குடிகாடு திரும்பிய திசை எல்லாம் பட்டதாரிகள்!

இணை ஆணையரா வேலை பார்த்திருக்கார். அப்பாதுரைனு ஒருத் தர் வீரப்பனைத் தேடின அதிரடிப் படையில ஐ.ஜி-யா இருந்தாரு. இந்த மாதிரி பெரிய லிஸ்ட்டே  இருக்கு.

இந்தப் பெருமை எல்லாம் 1960-கள்ல ஆரம்பப் பள்ளியில் ஆசிரியரா இருந்த காத்தையா வாத்தியாரைத்தான் சேரும்.  அவர் ஆசிரியரா இருந் தப்ப வீடு வீடாப் போய் ராட்டி தட்டற பொம்பளைங்ககிட்டயும் மாடு மேய்க்கிற ஆம்பளை கிட்டயும் 'நீதான் படிக்கல. உன் புள்ளயும் இந்த வேலை செய்யக் கூடாதுனா ஸ்கூலுக்கு அனுப்பு’னு எடுத்துச் சொல்வாரு. புள்ளைங்க படிக்கிறாங்களானு  பார்க்க நைட் ரவுண்ட்ஸ் வருவாரு'' என்றார் பெருமிதமாக. ஊர் பஞ்சா யத்துத் தலைவியான ராதிகா சுதாகர், ''கல்வி அறிவு நிறைந்த கிராமமா இருப்பதால, எங்க ஊருக்குள்ள சாதிப் பிரச்னை வந்தது இல்லை. படிப்புக்கு மட்டும்தான் மரியாதை தருவோம். எல்லாரும் விவசாயம் பார்ப்போம். என் வீட்டுக் காரர் ஒரு பட்டதாரி, வாலிபால்ல நேஷனல் பிளேயர். இருந்தாலும், விவசாயம்தான் தொழில். என்ன... ஒரே ஒரு குறை. இன்னமும் சரியான பஸ் வசதி இல்லாம தனித் தீவாகவே வாழ்ந்துக் கிட்டு இருக்கோம். அதனாலேயே வசதியானவங்க அவங்களோட பிள்ளைகளை நாமக்கல் பக்கம் ஹாஸ்டல்ல தங்கவெச்சுப் படிக்கவெக்கிறாங்க. அந்த நிலை மாறணும்னா எங்க ஊருக்கு பஸ் வசதி கண்டிப்பா வேணும்'' என்று வேண்டுகோள் விடுக்கிறார்.

இந்த ஊரைச் சேர்ந்தவரும் வேளாண்மை உதவி இயக்குநருமாகிய இளஞ்செழியன், ''உழவுக் கணக்குப் பாத்தா உலக்குகூட மிஞ்சாதும்பாங்க. ஆனா, எங்க ஊர் மக்கள் இந்த வார்த்தைகளைப் பொய்யாக்கிட்டாங்க. படிச்சவங்க விவசாயத் துக்கு வந்தா என்ன மாற்றங்கள் வரும்கிறதுக்கு எங்க ஊர் உதாரணம். இங்கே உள்ளவங்க விவ சாயம் பார்க்க நிலம் கிடைக்காம, வெளியூர்ல நிலம் வாங்கிப்போட்டு தினமும் அங்கே போய் விவசாயம் பண்றாங்க. 20 கி.மீ. சுற்றுவட்டாரத்துலயும் எங்க ஊர் ஆளுங்க நிலம்தான் இருக் கும். வீட்டுக்கு வீடு பட்டதாரிகள் இருக்கிறது மாதிரியே வீட்டுக்கு ஒரு விவசாயியும் உண்டு. கவர்ன்மென்ட் வேலை செஞ்சு வாங்குற சம்பளத்தைவிட அதிகமாகவே விவசாயத்துல சம்பாதிக்கிறோம்'' என்கிறார்.

- க.ராஜீவ்காந்தி
படம்: ந.வசந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism