Published:Updated:

வலையோசை : குடந்தையூர்

வலையோசை : குடந்தையூர்

வலையோசை : குடந்தையூர்

வலையோசை : குடந்தையூர்

Published:Updated:
வலையோசை : குடந்தையூர்

'மொய்’யானவன்!

 எங்களுக்குச் சொந்தக்காரங்க ஜாஸ்தி. எங்க உறவுல கல்யாணம்னு வந்தா நான் ரெண்டு விஷயத்திலே எஸ்கேப் ஆகணும்னு நினைப்பேன். ஒண்ணு சமையல் ஸ்டோர் ரூம் இன்சார்ஜ் வேலை. இன்னொன்னு மொய் எழுதுறது. ஆனா, பாருங்க... சமையல் ஸ்டோர் ரூம் இன்சார்ஜ் வேலையில இருந்து நான் தப்பிச்சாலும், மொய் எழுதறதுல இருந்து தப்பிக்க முடியாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வலையோசை : குடந்தையூர்

ஏன்னா, நான் அலுவலகத்தில் காசாளராக இருக்கிறதால கணக்குகளை சீக்கிரம் பைசல் பண்ணிடுவேன்னு என்கிட்ட அந்தப் பொறுப்பை ஒப்படைப்பாங்க. அதிலே என்ன கஷ்டம்னா... அங்கே இங்கே நகர முடியாது. வந்திருக்கும் உறவினர்கள்கிட்ட சந்தோஷமாகப் பேச முடியாது. குடும்பத்தோட சாப்பிட முடியாது. மொய் கொண்டுவந்து கொடுக்கிறவங்க இனிஷியல் முதற்கொண்டு நான் சரியா எழுதேறேனானு  பார்த்துட்டுதான் நகருவாங்க. சாயங்காலம் வரை மொய்ப் பணத்தை பத்திரமா வெச்சுகிட்டே திரியணும்.

எல்லா வேலையும் முடிச்சுக் கணக்குகளை விவரமாக எழுதிக் கொண்டுபோய் 'கரெக்டா இருக்கானு செக் பண்ணிக்குங்க’ன்னு ஒப்படைச்சா, அவர் மொய்ப் பையை வாங்கி பீரோவில் அலட் சியமாப் போட்டுட்டு 'அதெல்லாம் எதுக்கு? நீதானே கணக்கு எழுதி இருக்கே... எல்லாம் கரெக்டாதான் இருக்கும்’னு கூலா சொல்லி நகர்ந்திடுவாரு. நமக்கு அவங்க கணக்குச் சரிபார்த்து ஓ.கே. சொன்னாதான் நிம்மதியாக இருக்கும். ஆனால், நான் என்ன சொல்லியும் கேட்க மாட்டாங்க. இப்படி அதுலே இவ்வளவு கஷ்டம் இருக்கு.

என் தம்பி, தங்கை, மச்சினி, மாமா பொண்ணு, மாமா பையன் என்று சகல பேருக்கும் மொய் எழுதினது நான்தான். முக்கியமான ஒரு விஷயம் என்னன்னா... என் பையன், பொண்ணுக்கு காதணி விழா நடந்துச்சு. அதுக்கு மொய் எழுதினது யார் தெரியுமா? நானேதான்.  

என்னக் கொடுமை சரவணன் இது?

'கேட்டு இறங்கிடுங்க!’

வலையோசை : குடந்தையூர்

தஞ்சாவூர் சென்று இருந்த நான், அங்கு இருந்து நீடாமங்கலம் செல்ல பஸ் ஏறினேன். கண்டக்டரிடம், 'நான் இறங்க வேண்டிய ஸ்டாப்பில் பஸ் நிற்குமா?’ என்று கேட்டேன். பதிலுக்கு கண்டக்டர், 'கேட்டு இறங்கிடுங்க’ என்றார். நான், 'நீங்கதானே கண்டக்டர். யாரைக் கேட்டு இறங்கச் சொல்றீங்க? டிரைவரைக் கேட்டு இறங்கச் சொல்றீங்களா?’ என்றேன். அவர் மீண்டும், 'கேட்டு இறங்கிக்கோங்க சார்’ என்றார். நான் புரியாமல் முழித்து, பின் அவர் சொன்ன விளக்கத்தைக் கேட்டுச் சிரித்துவிட்டேன். அவர் சொன்னது 'ரயில்வே கேட் அருகே வண்டி நிற்கும். அங்கே இறங்கிடுங்க’ என்பதுதான்!

மின்வெட்டு Vs இன்வெர்ட்டர்

வலையோசை : குடந்தையூர்

மின் வெட்டின் கொடுமை தாங்காமல் வீட்டில் இன்வெர்ட்டர் வாங்கிப் பொருத்தினேன். பொருத்திய பின், அடுத்து மின் வெட்டு எப்ப வரும் என்று எதிர்பார்க்க வேண்டியதாகிவிட்டது. திட்டாதீங்க... இன்வெர்ட்டர் செக் செய்வதற்காகத்தான். ஆனால், பாருங்கள்... தினமும் ராத்திரி மின் வெட்டு படுத்தி எடுக்கும். அன்று பார்த்து பவர் கட்டே ஆகவில்லை. நான் வீட்டில் எல்லோரிடமும், 'பார்த்தீங்களா... இவ்வளவு செலவு பண்ணி இன்வெர்ட்டர் போட்டவுடன் பவர் கட் ஆகலை’ என்றேன் கொஞ்சம் நொந்து போய். பக்கத்து வீட்டில் வசிக்கும் வயதான அம்மா சொன்னார்கள்... ''நீங்க பண்ணின செலவால் எல்லாருக்குமே நல்லது நடந்திருக்குனு சந்தோஷப்படுங்க தம்பி’ என்றார். அதன்பின் வந்த நாட்களில் இன்வெர்ட்டரே கதறும் அளவுக்கு மின் வெட்டு படுத்தி எடுப்பது வேறு கதை!

நிமிர்ந்து நில்!

வலையோசை : குடந்தையூர்

''நம்மிடம் வேடிக்கையாகப் பேசுபவர்களை எப்படி எதிர்கொள்வது?''

''ஒரு சுவையான நிகழ்ச்சி சொல்கிறேன். லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் தாஷ்கண்ட் சென்று இருந்தபோது ஒரு பத்திரிகை நிருபர், 'நீங்கள் ரொம்ப குள்ளம்’ என்று வேடிக்கையாகக் கூறினாராம். அதற்கு அவர், 'இருக்கலாம். அதனால், எனக்கு நன்மைதான். நான் மற்றவர்களிடம் பேசும்போது நிமிர்ந்து இருப்பேன். ஆனால், மற்றவர்கள் என்னிடம் பேசும்போது தலைகுனிய வேண்டும்’ என்று சிரித்துகொண்டே சொன்னாராம். உங்கள் கேள்விக்குப் பதில் கிடைத்துவிட்டதா?''

வலையோசை : குடந்தையூர்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism