Published:Updated:

வலையோசை : கண்ணாடி

வலையோசை : கண்ணாடி

வலையோசை : கண்ணாடி

ராஜராஜ சோழன் கல்லறை!  

'கும்பகோணத்துக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் ராஜராஜ சோழன் கல்லறை உள்ளது’ என்று நண்பர் ஒருவர் சொல்ல, ஆர்வம் தொற்றிக்கொண்டது.

சென்னையில் இருந்து கும்பகோணம் வழியேதான் எங்கள் ஊருக்கு செல்ல வேண்டும். ஓர்

வலையோசை : கண்ணாடி

அதிகாலையில் கும்பகோணத்தில் இறங்கியவுடன் குளிக்காமலே ஆட்டோ பிடித்துக் கல்லறையைத் தேடிப் புறப்பட்டுவிட்டேன்.  உடையாளூர் என்ற ஊரில்தான் அந்த நினைவிடம் இருக்கிறது. பக்கிரிசாமி என்ற பெரியவர்தான்  நினைவு இடத்துக்குப் பூஜை செய்து பராமரித்துவருகிறார். அவரிடம் பேசிய போது சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். ''இந்த இடம்தான் ராஜராஜனின் நினைவிடம் என்று ஆராய்ச்சியாளர்களால் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதே இடத்தில் முன்பு ஒரு கோயில் இருந்தது. 1960-ம் வருடம் ஏற்பட்ட மிகப் பெரிய வெள்ளப்பெருக்கில் கோயில் புதைந்துபோய்விட்டது. இந்த இடத்தைப் பற்றிக் கேள்விப்பட்டுத் தேடி வந்த அதிகாரிகள், ஒரு அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில்  பொக்லைன் எந்திரத்தின் மூலம்  15 அடி ஆழம் தோண்டிப் பார்த்தார் கள். உள்ளே  கட்டடம் போன்று இருந்தது. இந்த இடத்தைத் தோண்டிய அதேவேளையில் ஆளும் கட்சிப் பிரமுகர் ஒருவர் திருவாரூரில் வெட்டிக் கொலை செய்யப் பட்டார். உடனே இந்த இடத்தைத் தோண்டிய அதிகாரிகள் அபசகுனமாகக் கருதி  இடத்தை மூடிச் சென்றுவிட்டார்கள்'' என்றார் அந்தப் பெரியவர்.

தஞ்சைப் பெரிய கோயிலுக்குள் ஆட்சியில் இருப்பவர்கள் சென்றால் ஆட்சி பறிபோய்விடும் என்ற ஒரு மூட நம்பிக்கை உள்ளது. சில சம்பவங்கள் அப்படி நடந்தும் உள்ளன. இந்தக் காரணத்தால் இந்த இடத்தைத் தோண்டியவர்கள் அந்தக் கொலைச் சம்பவத்தை அபசகுன மாக நினைத்து இருக்கலாம்!

யாருக்கு வேலை அதிகம்?

ரு ஊருல ஒரு புருஷன் - பொண்டாட்டி, மூணு புள்ளைங்கனு ஒரு குடும்பம். புருஷன் பொண்டாட்டிக்குள்ள அடிக்கடி சண்டைவரும். புருஷன் சொல்லுவான், 'இந்தக் குடும்பத்துல எனக்குதான் வேலை அதிகம். இந்தக் குடும்பத்துக்காக மாடா உழைக்கிறேன்’னு. பொண்டாட்டி சொல்லுவா, 'நான் மட்டும் என்ன... சும்மாவா இருக்கேன்? துணி துவைக்கிறது, சமைக்கிறது,

வலையோசை : கண்ணாடி

புள்ளைங்களக் கவனிக்கிறதுன்னு எனக்குதான் வேலை அதிகம்’னு. சண்டை அதிகரிச்சுகிட்டே போச்சு. சத்தம் தாங்க முடியாம, அவங்க முன்னாடி கடவுள் தோன்றுகிறார். அவர்கிட்ட ரெண்டு பேரும் தங்களோட பிரச்னையைச் சொல் றாங்க.

உடனே கடவுள் ஒரு யோசனை சொல்கிறார். அதாவது 'புருஷனைப் பொண்டாட்டியாகவும், பொண்டாட்டியைப் புருஷனாகவும் மாத்திடுறேன். ரெண்டு பேரும் அடுத்தவங்க வேலையைப் பாருங்க. யாருக்கு வேலை அதிகம்னு உங்களுக்கே புரியும்’னு சொல்கிறார். ரெண்டு பேரும் ஒப்புக்குறாங்க.

இப்போ புருஷன்காரன் காலையில சீக்கிரம் எழுந்து புள்ளைங்களை ஸ்கூலுக்குக் கிளப்பிவிட்டு, டிபன் ரெடி செஞ்சு, பாத்திரம் கழுவி, புருஷனை வேலைக்கு அனுப்பி, வீடு பெருக்கி, மதியம் சாப்பாடு செஞ்சு, புள்ளைங்களுக்கு மதியச் சாப்பாடு கொடுத்து, துணி துவைச்சு... பெண்டு நிமிருது.

சமாளிக்க முடியாம கடவுள்கிட்ட போய், 'என்னால முடியல. என் பொண்டாட்டிக்குதான் அதிக வேலைன்னு ஒப்புக்கிறேன்’னு சொல்றான் புருஷன்காரன். உடனே கடவுள், 'இதுக்குதான் அடுத்தவங்க வேலையை சாதாரணமா நினைக்க கூடாது’னு அட்வைஸ் பண்றார். புருஷனும் உண்மையை உணர்றான்.

சரி... கதை இதோட முடிஞ்சுதா? அதுதான் இல்லை.

'என்னை ஆம்பளையா மாத்துங்க’ னு சொல்லுறான். அதுக்கு கடவுள் என்ன சொன்னார் தெரியுமா? 'இப்போ நீ கர்ப்பமா இருக்கே... இப்போ மாத்த முடியாது. பிரசவம் முடிஞ்சு வா!’

வலையோசை : கண்ணாடி
அடுத்த கட்டுரைக்கு