Published:Updated:

மத்தவங்க செய்ய முடியாததை நாம செய்யணும்!

கரூர் அசத்தல்

##~##

சாதனைகள் செய்வதற்கு நேரத்தையும், உழைப்பையும் பணயம் வைப்பார்கள். கரூர் பசுபதிபாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமாரோ, தன் உயிரையே பணயம் வைத்து சாதனைகளைச் செய்துவருகிறார்.

 சவப் பெட்டிக்குள் படுத்துக்கொண்டு ஒரு மணி நேரம் மண்ணுக்குள் புதைந்து இருப்பது, அரை மணி நேரம் தலைகீழாக இடுப்புவரை மண்ணுக் குள் புதைந்து இருப்பது, முகம் முழுவதும் கிளிப் புகளை மாட்டிக்கொண்டு இருப்பது, பின்புறமாக பல கி.மீ. தூரம் நடப்பது, தலையைக் கீழேவைத்து கால்கள் இரண்டையும் மேலே மடித்தவாறுயோகா செய்வது என குண்டக்க மண்டக்க சாதனைகளைச் செய்து வியப்பில் ஆழ்த்துகிறார்.

''சின்ன வயசுலேர்ந்தே மத்தவங்க செய்ய முடியாததை நாம செய்யணும்னு நினைப்பேன். முதல் சாதனையாக  சவப் பெட்டிக்குள்படுத்துக் கொண்டு மண்ணுக்குள்  புதைந்து மீண்டுஎழுந்து வரும் சாதனையைச் செய்ய முடிவெடுத்தேன். படிப்பையும் கவனித்துக்கொண்டு இரவு, பகல் பாராமல் அதற்கான பயிற்சியில் இறங்கினேன். 2008-ம் ஆண்டில் என் நண்பர்கள் முன்னிலையில் இதனைச் செய்து காட்டினேன்.

மத்தவங்க செய்ய முடியாததை நாம செய்யணும்!

அந்த சாதனைக்கு 'மம்மி’ என்று பெயரிட் டேன். ஏனென்றால் என்னை ட்வைன் நூலால் நெய்யப்பட்ட துணியால் உடல் முழுக்க சுற்றி விடுவார்கள். எகிப்தில் பிணத்தை அடக்கம் செய்யும் சம்பிரதாயங்களில் இது மிக முக்கிய மானது. அதன்பிறகு ஆறடி ஆழத்துக்குக் குழி தோண்டி, ஒரு சவப் பெட்டியில் என்னைப் படுக்கவைத்து அதை மூடி  ஆணி அடித்துவிடு வார்கள். உள்ளே எ

மத்தவங்க செய்ய முடியாததை நாம செய்யணும்!

ன்னுடைய அசைவைக் கண்காணிக்க ஒரு வீடியோ கேமராவும், டார்ச் லைட்டும் இருக்கும். ஒரு மணி நேரம் கழித்து நண்பர்கள் மண்ணைத் தோண்டி பெட்டியை வெளியில் எடுத்து திறப்பார்கள். எனக்கு எதுவும் ஆகி இருக்காது.

உள்ளே காற்று கொஞ்சம் இருக்கும். அதைத் தான் ஒரு மணிநேரம் சுவாசிக்க வேண்டும். கடு மையான மூச்சுப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவந்தால் மட்டுமே இது சாத்தியம்தான். நுரையீரலின் அடி ஆழம் வரை காற்றை இழுத்து அடக்கி மெதுவாக விடவேண்டும். இப்படிச் செய்தால், உடனுக்குடன் காற்றை இழுத்து அதிக அளவில் மூச்சு விடுவது குறைந்துவிடும். இதுபோன்ற நிகழ்வை உலக அளவில் அரை மணி நேரம் மட்டுமே இதற்கு முன்பு செய்து கின்னஸில் பதிவு செய்து இருக்கின்றனர். பல பேர் இந்தப் முயிற்சியில் இறந்துபோனதும் உண்டு.

மத்தவங்க செய்ய முடியாததை நாம செய்யணும்!

அடுத்தது, ஆழமாகக் குழிதோண்டி அதில் ஒரு டிரம்மை வைப்பார்கள். அதில் தலைகீழாக நான் நிற்க... என் இடுப்பு வரை மண்ணைப் போட்டு மூடிவிடுவார்கள். என்னால் முடியவில்லை என்றால் சொல்வதற்காக, ஒரு போன் மட்டும் டயல் செய்த நிலையில் உள்ளே இருக் கும். வெளியே இருப்பவர் அடிக்கடி பேசுவார். அதற்கான பதிலை மேலே உள்ள என்இரண்டு கால்களின் மூலம் சைகையாகக் காண்பிக்க வேண்டும். 30 நிமிடங்கள் வரை மூச்சைப் பிடித்து அதில் இருந்திருக்கிறேன்.

தலையைத் தரையில் வைத்து கால்கள் இரண்டையும் மேல் நோக்கி மடித்தவாறு, அதில் 25 கிலோ எடை உள்ள சிறுவனை  உட்கார வைத்தபடி அரை மணி நேரம் இருந்திருக்கிறேன். இதற்குப் பெயர் பத்ம சிரசாசனம். என் முகத்தில் துணிகளைக் காயப்போடப் பயன்படுத்தும் 120  கிளிப்பு களை மாட்டி அரை மணி நேரம் இருந்திருக்கிறேன். இதுவரை 104 கிளிப் மாட்டி இருந்தது தான் கின்னஸ் சாதனை. இந்தச் சாதனைகளை ஊர் மக்கள் முன்பும், பல தொலைக்காட்சி களிலும்  பதிவு செய்திருக் கிறேன். இனிமேல் நான் செய்யும் அத்தனை சாதனைகளையும்  கின்னஸில் பதிவு செய்ய முயற்சி எடுக்கப்போகிறேன்'' நம்பிக்கையாகச் சிரிக்கிறார் செந்தில் குமார்!

செய்தி, படங்கள்: ஞா.அண்ணாமலை ராஜா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு