Published:Updated:

கொள்ளிடக் கரையில் நாகஸ்வரப் பிரவாகம்!

கொள்ளிடக் கரையில் நாகஸ்வரப் பிரவாகம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இந்த லிங்க் மூலம் இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

ரம் தொலைத்து பாலை மணலாக விரிந்து இருக்கும் கொள்ளிடம் ஆற்றில் திடீரென வெள்ளம் கரைபுரண்டு வந்துவிட்டதாக ஒரு பிரமை. ஆற்று வெள்ளம் அல்ல அது; உடல் சிலிர்த்து, மனம் மலர்த்தி கரையச் செய் யும் நாகஸ்வர இசை வெள்ளம். அரியலூர் மாவட்ட எல்லையான திருமானூர் கொள்ளிடக்கரைவாசிகள் தினந்தோறும் அதிகாலை பிரம்ம முகூர்த்தத் தருணங்களில் இந்த இசை மழையில் சுகமாக நனைவது வழக்கம். கருணாநிதி- மகேஸ்வரி தம்பதியினர் மற்றும் அவர்களுடைய மகன்கள் கார்த்திகேயன், காமேஸ்வரன் இவர்கள் தான் அந்தக் கொள்ளிடக்கரை இசைக்குச் சொந்தக்காரர்கள். இவர்களைப் பற்றி  என் விகடன் வாசகர் முருகன், வாய்ஸ் ஸ்நாப்பில் தகவல் தெரிவித்து இருந்தார்.

கொள்ளிடக் கரையில் நாகஸ்வரப் பிரவாகம்!

 சாதகம் முடித்துச் சற்றே இளைப்பாறிய கருணாநிதியிடம் பேசினேன். ''பல நூற்றாண்டுகளாக இசை எங்கள் வாழ்க்கையாக, சுவாச மாகத் தொடர்ந்துகிட்டு இருக்கு. அந்தக் காலத் தில் குருகுல வாசத்திலும் பின்பு திருவையாறு இசைப் பள்ளியிலும் எங்களோட இசைப் பயிற்சி தொடர்ந்தது. திருமானூர்ல மட்டும் எங்க வகையறாவுல ஏழு நாகஸ்வரக் குடும்பங் கள் இருக்கோம். ஆரம்ப நாட்கள்ல என் அண் ணனோட சேர்ந்து  பல கச்சேரிகள் பண்ணிட்டு இருந்தேன். என்னோட மனைவியா வந்த மகேஸ்வரி திருமணத்துக்கு முன்னாடியே நாகஸ்வர சிஸ்டர்ஸ் என்ற பேரில் தன் சகோ தரியோட பிரபலமாகி இருந்தாங்க. திருமணத் துக்கு அப்புறம் என்னோட சேர்ந்து கச்சேரி செய்ய ஆரம்பிச்சாங்க. கல்யாணங்கள்ல தம்பதி சமேதரா வாசிக்கிறதை நல்ல சகுனமா மக்கள் நினைக் கவே, எங்க ஜோடிக்கு வரவேற்பு அதிகமாயிடுச்சு'' என்றார் உற்சாகமாக.

கருணாநிதி - மகேஸ்வரி தம்பதியினரின் மகன்கள் கார்த்திகேயன் - காமேஸ்வரன் பிரதர்ஸ் கூட்டணியும் பெற்றோர் ஜோடிக்குப் போட்டியாக கலக்கல் கச்சேரிகள் நடத்திவருகிறார்கள். இருவருமே பொறியியல் மாணவர்கள்.  கார்த்தி இப்போதுதான் பி.இ. முடித்திருக்க, சிவில் மாணவராகத் தன்னுடைய கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்துகொண்டு இருக்கிறார் தம்பி காமேஸ்வரன்.

கொள்ளிடக் கரையில் நாகஸ்வரப் பிரவாகம்!

நாகஸ்வரம் மட்டும் அல்ல; பாட்டு, தபேலா, வீணை, வயலின், புல்லாங்குழல் என ஜுகல் பந்திக்கான சகல படைய லுக்கும் கார்த்தி- காமேஸ் ரெடி. '' குருகுலப் பயிற்சியோடு திருவையாறு அரசர்

கொள்ளிடக் கரையில் நாகஸ்வரப் பிரவாகம்!

இசைக்கல்லூரி யில் நாலு வருஷம் முறைப்படி இசைபயின்றவர் என்னுடைய அப்பா.

அம்மாவும் சின்ன வயசுல இருந்து கச்சேரி பண்றவங்க. இந்தச் சூழல்ல வளர்ந்ததனால, இசை எங்களுக்குச் சுலபமா வந்தது. நாலு வயசு லேயே நாகஸ்வரத்தில சாதகம் பண்ண ஆரம் பிச்சிட்டோம். எங்க பரம்பரையில நாகஸ்வரம் வாசிக்கிறதுல பலர் பேர் புகழ் பெற்று இருந்தாலும், யாரும் அதிகமாப் படிச்சதில்லை. அந்த ஆதங்கத்தைத் தீர்க்க நானும் தம்பியும் பி.இ. சேர்ந்தோம். இசைதான் எங்களுக்கு எல்லாமே''  பக்குவமாக அண்ணன் கார்த்திகேயன் பேச, ''கல்லூரி வட்டாரத்திலேயும் எங்க இசைக்கு வரவேற்பு செமத்தியா இருக்கு. அதுவும் லேட் டஸ்ட் சினிமா பாடல்களை நாகஸ்வரம் புல்லாங்குழல்னுகலந்து கட்டி நாங்க வாசிக்கி றதைக் கேட்கிறதுக்காகவே தனி ரசிகர் பட் டாளம் இருக்கு'' என்றார் தம்பி காமேஸ்வரன் பெருமை பொங்க.  

நால்வரும் சாதகத்தை விட்ட இடத்தில்இருந்து தொடர... மனசுக்குள் மறுபடியும் கரை புரள்கிறது இசை!    

- எஸ்.சுமன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு