Published:Updated:

வலையோசை : நாடோடி இலக்கியன் பக்கம்

வலையோசை : நாடோடி இலக்கியன் பக்கம்

வலையோசை : நாடோடி இலக்கியன் பக்கம்

வலையோசை : நாடோடி இலக்கியன் பக்கம்

Published:Updated:
வலையோசை : நாடோடி இலக்கியன் பக்கம்

ஆப்பிள் குழி!

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிராமத்தில் உள்ள எங்களுடைய வீட்டின் முன்பக்கம் தானியங்கள் காயவைப்பதற்காக கான்க்ரீட் தளம் போடப்பட்டு இருக்கும். அந்தத் தளத்தில் வீட்டை ஒட்டிய ஓர் இடத்தில் சதுர வடிவில் ஒரு சிறிய குழி இருக்கும். எங்க‌ள் வீட்டுக்குப் புதிதாக வ‌ருப‌வ‌ர்க‌ள், ''ஏன் அங்கே மட்டும் கான்க்ரீட் போடவில்லை?'' என்று கேட்பார்கள். அப்படி எல்லோரையும் கேட்கவைத்த குழிதான் ஆப்பிள் குழி.

கி.பி 2000-ம் ஆண்டு ஒருநாள் காலை தெருவில் பழக் கன்றுகளை விற்று வந்தவரிடம் மாதுளை, ஆப்பிள் மற்றும் சப்போட்டா ஆகியவற்றில் வகைக்கு ஒன்றாய் வாங்கி, வீட்டுக்கு முன்பாக இருக்கும் தோட்டத்தில் நட்டுவைத்தேன். நாட்கள் வாரங்களாகவும் வாரங்கள் மாதங்களாகவும் மாறின. ஆனால், அந்த மூன்று செடிகளும் அப்படியேதான் இருந்தன.

மாதங்கள் வருடங்கள் ஆவதற்குள் பெய்த ஒரு பெருமழைக் காலத்தில் ஆப்பிள் செடி மட்டும் சிறிது இரக்கம்கொண்டு வளரத் தொடங்கியது. அப்போதுதான் கான்க்ரீட் தளம் போடுவதற்கான வேலை ஆரம்பமானது. சரியாக ஆப்பிள் செடி மட்டும் தளத்தின் எல்லைக்குள் சிக்கிக்கொண்டது. என் குடும்பத்தார், நண்பர்கள், கொத்தனார் எனப் பலரும் என்னிடம் அந்தச் செடியை வேரோடுப் பெயர்த்து வேறிடத்தில் நட்டுவிடலாம் என்றுச் சொல்லியும் பிடிவாதமாக மறுத்துவிட்டேன். வேறு வழியின்றி ஆப்பிள் செடியை அப்படியேவைத்து சுற்றிலும் தளம் போட்டுவிட் டார்கள்.

வலையோசை : நாடோடி இலக்கியன் பக்கம்

அப்போது நான் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் எடுத்துக்கொண்டு இருந்தேன். மாணவர்களும் என்னுடன் சேர்ந்து ஆப்பிள் செடி வளர்ப்பில் ஆர்வமாக இருந்தனர். ஒருநாள் அத்தனை மாணவர்களும்  சோகத்தோடு வாசலிலேயே உட்கார்ந்திருந்தனர். என்னைப் பார்த்ததும் ''அண்ணே எல்லாம் போச்சு. ஆப்பிள் செடியை ஆடு கடிச்சிடுச்சு'' என்றபடி அழத் தொடங்கிவிட்டாள் பத்தாம் வகுப்பு மாணவி. செடியில் இலைகள் ஏதும் இன்றி வெறும் குச்சி மட்டுமே மிச்சம் இருந்தது. வெகுண்டெழுந்த நான் என் மாணவப் படைகளோடு ஆடுகளுக்குச் சொந்தக்காரர் வீட்டுக்குச் சென்றேன். ''ஆடுகளைச் சும்மா பொத்தாம் பொதுவில் அவுத்து விடுகிற வேலை எல்லாம் இத்தோடு நிறுத்திக்கோங்க'' என்று நான் ஆரம்பித்ததுதான் தாமதம்... என் மாணவக் கண்மணிகள் ''இனிமேல் ஆடுகள் எங்க வீட்டுப் பக்கம் வந்தால் பிரியாணிதான்'' என்கிற ரேஞ்சில் ஆளாளுக்குப் பொங்கி எழுந்துவிட்டார்கள்.

பிறகு இலைகள் ஏதுமற்ற அந்த ஆப்பிள் செடியைச் சுற்றி வேலி அடைத்து வைத்ததில் மீண்டும் வளரத்தொடங்கியது. முன்னைவிட நிறையக் கிளைகள் பரப்பி தளதளவென்று வேகமெடுத்து வளர்ந்தது. இப்படிப் பல கட்ட சோதனைகளைத் தாண்டி செழித்து வளர்ந்து  இருந்த ஆப்பிள் செடியை, என் மாணவர்களை நம்பி ஒப்படைத்துவிட்டு நான் வேலை தேடி சென்னைக்குப் பயணமானேன். ஆண்டுகள் உருண் டோட ஒருநாள் என்னுடைய மாணவி  எனக்கு போன் செய்து ''அண்ணே ஆப்பிள் செடி காய்ச்சிருக்கு'' என்றாள். ''வாவ்'' என்று அலறிய நான் ''எத்தனைக் காய்கள்'' என்றேன். ''தனித்தனியா காய்க்கலண்ணே... கொத்துக் கொத்தாக் காய்ச்சிருக்கு'' என்றதும் எனது மகிழ்ச்சி இரட்டிப்பானது. ''ஆமாமா... ஆப்பிள் கொத்து கொத்தாதான் காய்க்கும். இந்த வாரம் இதுக்காகவே நான் ஊருக்கு வரேன்'' என்றதும், ''இதுக்காக வர வேண்டாம்ணே... ஏன்னா எல்லாமே நாவக்காய்ணே'' என்றாள். சிறிது நேர அமைதிக்குப் பிறகு, ''ஊருக்குள்ள யாரும் பார்க்குறதுக்குள்ள பசங்ககிட்டச் சொல்லி அந்தச் சனியனை வெட்டி தூர வீசச் சொல்லு'' என்றபடியே போன்காலை அவசரமாகக் கட் செய்தேன்!

பன்றி வேட்டை பாக்குத் திருவிழா!

வலையோசை : நாடோடி இலக்கியன் பக்கம்

ஞ்சை மாவட்டத்தின் ஒரத்தநாடு தாலுகாவின் கீழ் வரும் கோனூர் நாட்டில் ஆண்டுதோறும் ஒரு வாரத்துக்கும் மேலாக 'பன்றி வேட்டை பாக்குத் திருவிழா’ நடைபெறும்.

இந்த 18 பட்டிகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் ஒரேப் பள்ளியில் படித்தவர்களாக இருப்பார்கள். திருமணமாகித் திருவிழாவில் கணவனோடு நிற்கும் பெண்கள் தங்களோடு கூடப் படித்த பசங்களைப் பார்க்கும்போது, ஒரு மாதிரி நாணிக் கோணுவாங்கப் பாருங்க... அடடா அழகான கவிதை.

சில பெண்கள் பார்த்தும் பார்க்காதது போல பந்தாவாகக் கணவனின் கைகோத்தபடியே நின்றுகொண்டு இருப்பார்கள். அந்த மாதிரிப் பொண்ணுங்களைத்தான் ரவுண்டு கட்டுவானுங்க பசங்க. 'டேய்... ஊள மூக்கு’, 'சுருட்டை’, 'கவுதாரி’ எனப் பள்ளி நாட்களில் வைத்த பட்டப் பெயர்களை வேறு யாரையோ கூப்பிடுவதுபோல் உரக்கச் சொல்லி டரியலாக்குவானுங்க. பதறிக் கையை உதறி யாரும் அறியாத வண்ணம் ''சீ போ''  என்று அந்த பொண்ணுங்க செல்லமாகத் திட்டுவதை  ஒரு வாரத்துக்குக் கதை கதையாகப் பேசித் திரிவாய்ங்க. இன்னொரு பக்கம் பழைய காதலிகளைக் கண்களாலேயே நலம் விசாரித்தபடியே மென்சோகத்தோடு நகர்ந்து போகும் நடுத்தர வயது மனிதர்களையும் காணமுடியும்!

வலையோசை : நாடோடி இலக்கியன் பக்கம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism