Published:Updated:

என் ஊர் : மேலக்காவேரி

காணாமல் போன ஆலமரங்கள்... கதை சொன்ன ஆடுகள்!இந்த வாரம் : ஓவியர் என்.எஸ்.மனோகர்

என் ஊர் : மேலக்காவேரி

காணாமல் போன ஆலமரங்கள்... கதை சொன்ன ஆடுகள்!இந்த வாரம் : ஓவியர் என்.எஸ்.மனோகர்

Published:Updated:
##~##

பிரபல ஓவியரும் கும்பகோணம் கவின் கலைக் கல்லூரியின் முதல் வருமான என்.எஸ்.மனோகர் தான் பிறந்து வளர்ந்த கும்பகோணம் மேலக்காவேரி ஏரியாவை இங்கே தன் மனத் தூரிகையால் வரைந்து காட்டுகிறார்!

 ''நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் கோயில் நகரமான கும்பகோணத்துக்குத் தனி எழில் சேர்க்கும் மேலக்காவேரி பகுதியில்தான். பெருமாண்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பஜனை மடம்தான் நாங்க குடியிருந்த இடம். எங்க அப்பா நடராஜன் மழவராயர் நாப்பது வருஷமா அந்த ஏரியாவில பிரெசிடென்டா இருந்ததால, எல்லாருக்கும் தெரிஞ்ச குடும்பமா இருந்தோம்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான் பாணாதுறைப் பள்ளியில் படிச்சப்ப, அங்கே டிராயிங் மாஸ்டரா இருந்த கந்தசாமி சார்தான் எனக்கு ஓவியத்து மேல ஈடுபாட்டை விதைச்சவர். அதுக்குப் பிறகு எட்டாவது படிக்கும்போது, எங்க ஊர் பக்கத்துல இருந்த அசூர் ராஜேந்திரன் எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷனா இருந்தார். அப்ப எங்க வீட்டுக்குப் பக்கத்துல கவின் கலைக் கல்லூரி மாணவர்கள் சிலர் தங்கி இருந்தாங்க. பள்ளிக்கூடம் முடிஞ்சதும் பெரும்பாலான நேரம் அங்கேதான் இருப்பேன். அங்க தங்கி இருந்தவர்கள்ல ஒருத்தர்தான் சிற்பி ஜெயராமன். இப்ப பாண்டிச்சேரி கவின் கலைக் கல்லூரி முதல்வரா இருக்கார்.

என் ஊர் : மேலக்காவேரி

ஓவியம்தான் வாழ்க்கைனு முடிவு பண்ணி கவின் கலைக் கல்லூரியில சேர்ந்தேன். அங்கே படிக்கிறப்ப வீரசந்தானம், விஸ்வம், ஜெயராமன், சிற்பி ஜெயராமன்னு முன்னாள் மாணவர்கள் எல்லாருமே நண்பர்கள் ஆகிட்டாங்க.  

நுரையோட கரை புரண்டு வர்ற காவிரி வெள்ளத்தை இப்ப நினைச்சாலும் பரவசமா இருக்கும். மாலை நேரங்கள்ல காவிரி ஆத்துக்கு விளையாடப் போவோம். விளையாடும்போது தாகம் எடுத்தா வீட்டுக்கெல்லாம் வரமாட்டோம். சரசரவென ஊற்றுத் தோண்டி ஊறி வர்ற தண்ணியக் குடிச்சு தாகத்தைத் தணிச்சுப்போம். கடல் மாதிரி விரிஞ்சுகிடந்த அந்தக் காவிரி ஆறு, இப்போ  பார்க்கவே

என் ஊர் : மேலக்காவேரி

வேதனைப்படற அளவுக்கு மணலே இல்லாமக்கிடக்கு. 25 வருஷத்துல சுரண்டிச் சுரண்டியே காவிரியை அழிச்சுட்டாங்க.

என்னோட ஒரே பொழுதுப்போக்கு சினிமாதான். எங்க வீட்டுக்கு எதிர்லேயே 'தனலெட்சுமி’னு ஒரு டூரிங் டாக்கீஸ் இருந்தது. அது ஒரு காலத்துல எங்களுக்குச் சொந்தமா இருந்துச்சு. அதனால, நாங்க படம் பார்க்கணும்னா ஸ்பெஷலா மேட்னி ஷோ போடுவாங்க. பசங்ககூட நைட்ல வீட்டுக்குத் தெரியாமப் போனதும் உண்டு. படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி கூட்டம் கூடுறதுக்காக ஒரு கெட்டி மேள இசை  போடு வாங்க. அதை கேக்கறதுக்காகவே காத்திருந்த காலங்கள் உண்டு.

என் கலைப் பசிக்கு சாப்பாடு போட்ட இடங்கள்னா ராமசாமிக் கோயிலும், தாராசுரம், பட்டீஸ்வரம் கோயில்களும்தான். நாள் முழுக்க அங்கேயே கழித்த காலங்கள்கூட உண்டு. இந்தக் கோயில்கள், தேர்கள்ல உள்ள ஒவ்வொரு சிற்பமும் எங்களுக்கு மனப்பாடமாத் தெரியும். கோயில் மட்டுமல்ல... கும்பகோணத்துல இருந்த ஒவ்வொரு ஆலமரமும் என் நெருங்கிய நண்பர்கள்தான். கோணக்கரை, புள்ளபூதங்குடி, ஆண்டான் கோயில் பகுதிகள்ல இருந்த ஆலமரக் கிளைகளைக்கூட இன்னமும் என்னால் நினைவுகூர்ந்து வரைய முடியும்.

என் ஊர் : மேலக்காவேரி

கல்லூரிக் காலங்களில் கல்லூரிக்கு உள்ளே வந்து விளையாடும் ஆடுகள்கூட ஏராளமான கதைகள் சொல்லிப்போகும். எங்கோ வழி தெரியாமல் நிற்கும் குட்டியும், விளையாடச் சென்ற பிள்ளையை சத்தம் போட்டு சாப்பிட அழைக்கும் அம்மாவைப் போல கத்தியே கூப்பிடும் தாய் ஆடும் காட்டும் தாய்ப் பாசத்துக்கு நிகரான கவிதை, இந்த உலகத்தில் இல்லை. இப்போது கல்லூரியை திறந்தேதான் வைத்துள்ளேன். ஆனால், ஆடுகளைத் தான் காண முடியவில்லை!''

- க.ராஜீவ்காந்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism