Published:Updated:

வலையோசை : குங்குமப் பூ

வலையோசை : குங்குமப் பூ

வலையோசை : குங்குமப் பூ

நூலகன்!

வலையோசை : குங்குமப் பூ

1740-ம் ஆண்டில் அமெரிக்காவில் ஒரே ஒரு புத்தகக் கடைதான் இருந்ததாம். இங்கிலாந்தில் இருந்து தான் அங்கு புத்தகங்கள் வந்துகொண்டு இருந்தன. நூலகம் என்றால் என்ன என்றே அறியாத காலம் அது. பலரும் சென்று படிப்பதற்கான ஒரு நூலகம்இருந் தால் எவ்வளவு பயன்படும் என்ற எண்ணம் ஒரு சிறு வன் மனதில் தோன்றியது. அவனும் அவனுடைய நண்பர்கள் சிலரும் சேர்ந்து ஒரு சிறிய அறையில் ஒரு பொது நூலகத்தைத் துவக்கினார்கள். வாசகர்களிடம் சந்தா வசூலித்து, இரண்டு ஆண்டுகளில் பெரிய நூலக மாக மாற்றினார்கள். அமெரிக்காவில் அமைக்கப்பட்ட முதல் பொது நூலகம் இதுதான். அதன்பின் இத்தகைய நூலகங்கள் நாடு எங்கும் ஏற்படுத்தப்பட்டன. நூல கம் தோன்றக் காரணமாக இருந்த அந்தச் சிறுவன்தான் பின்னாளில் உலகப் புகழ் பெற்ற அறிஞராகத் திகழ்ந்த பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்!

குடிக்கு முன் படி!

வலையோசை : குங்குமப் பூ

லகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொருவித மான மது தயாரிக்கப்படுகிறது. ரஷ்யாவின் ஓட்கா உருளைக்கிழங்கிலும், சீனாவின் மவுத்தாய், ஜப்பானின் சாக்கே ஆகியவை அரிசியிலும், ஸ்காட்லாந்தின்ஸ்காட்ச் கோதுமை மற்றும் மக்காச்சோளத்திலும், ஃபிரான்சின் ஷாம்பெயின் திராட்சையில் இருந்தும் தயாராகிறது. கோவாவின் பென்னி முந்திரியில் இருந்து தாயாரிக்கப் படுகிறது. இதுதவிர அரபு நாடுகளில் பேரீச்சம் பழத்தி லும், இலங்கை, ஃபிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் தென்னை, பனையின் பொருட் களில் இருந்தும் மது தயாரிக்கப்படுகிறது. கரும்புஆலை யில் இருந்து வெளியேறும் கழிவான மொலாசஸில் இருந்து மதுவைத் தயாரிப்பது தமிழ்நாடு மட்டுமே!

இதைச் செய்!

வலையோசை : குங்குமப் பூ

உணவைக் குறை, நாவினைக் கட்டு.
சவாரியைக் குறை, அதிகம் நட...
கவலையைக் குறை, சிரித்துப் பழகு.
சோம்பலைக் குறை, அதிகம் சிந்தி.
செலவைக் குறை, அதிகம் சேமி.
திட்டுவதைக் குறை, அதிகம் அன்பு செய்.
உபதேசம் குறை, செயலை அதிகரி.
கெட்ட பழக்கம் விடு, நல்லன கைப்பிடி
மூடப் பழக்கம் விடு, மூத்தோர் சொல் கேள்!

காதல் வலை!

வலையோசை : குங்குமப் பூ

'காதல் ஆண்களின் கண் வழியாகவும், பெண்களின் காது வழியாகவும் நுழைகிறது!’ என்கிறது போலந்து நாட்டுப் பழமொழி. அதேசமயம், 'இளம் காதலர்கள் விரும்புகிறார் கள்... விவேகமானவர்கள் வருந்துகிறார்கள்’ என்கிறது இந்தியப் பழமொழி. 'காதல் ஒரு விநாடி. ஆனால், துக்கம் வாழ்க்கை முழுவதும்’ என்கிறது அரேபியப் பழமொழி. 'காதல் செய்யும் பெண், நரியைவிட ஆயிரம் மடங்கு தந்திரசாலி’ என்கிறது பிரான்ஸ் நாட்டுப் பழமொழி. 'கல் வீடு என்பது சுவர்களாலும் தூண்களாலும் ஆனது, காதல் வீடு என்பது அன்பும் கனவும் நிறைந்தது’ என்கிறது இந்தியப் பழமொழி. 'காதலைப் பற்றிப் பேசும்போது பலமாகப் பேசாதீர்கள் மெதுவாகப் பேசுங்கள்!’ என்கிறார் எழுத்தாளர் ஷேக்ஸ்பியர். 'தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவை இல்லை; காதல் வந்துவிட்டால் அழகு தேவை இல்லை’ இது ஆபிரகாம் லிங்கன். அதே நேரத்தில், 'அழகைப்பார்த்து வருவது இல்லை காதல்; ஆனால், காதலிக்கப்படுபவர்கள் எல்லோரும் அழகானவர்கள்’ என்கிறது இந்தியப் பழமொழி. இவை எல்லாம் யோசித்துப் பார்த்தால் ஒன்று தோன்றுகிறது. காதலுக்கு ஆதரவு இல்லாவிட்டாலும் அதை அழிக்க முடி யாது. காதலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது இல்லை. அவர்களே தானாகக் காதல் வலையில் சிக்குகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு