Published:Updated:

என் ஊர் : தஞ்சாவூர்

பர்வீனில் 'மனிதன்'... சாந்தியில் 'தேவர் மகன்'!இயக்குநர் சுப்ரமணியசிவா

என் ஊர் : தஞ்சாவூர்

பர்வீனில் 'மனிதன்'... சாந்தியில் 'தேவர் மகன்'!இயக்குநர் சுப்ரமணியசிவா

Published:Updated:
##~##

'திருடா திருடி’,  'பொறி’, 'சீடன்’ ஆகிய படங்களை இ'யக்கிய சுப்ரமணிய சிவா, தன்னுடைய சொந்த ஊரான தஞ்சாவூர் பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

 ''தஞ்சையில் என்னை எப்போதும் வியக்கச் செய்யும் இடம் ஆயிரம் வருடங்களைக் கடந்த பெரிய கோயில். கோபுரங்களின் உட்பகுதியில்தான் எத்தனை எத்தனை வேலைப்பாடுகள்... அலங்காரங்கள்! கோபுரத்தின் உச்சிக் கலசத்தைச் சுற்றி ஒரு லாரி வலம்வரும் அளவுக்கு இடம்இருக் கிறது. அப்படி ஒரு பிரமாண்டமான கோயில் அது. அந்தக் கலசம் தஞ்சையில் இருந்து 15 கி.மீ. தொலைவில்

என் ஊர் : தஞ்சாவூர்

இருக்கும் சாரப்பள்ளம் என்னும் கிராமத்தில் இருந்து யானைகளைக் கொண்டு உருட்டி உருட்டியே எடுத்து வரப்பட்டது என்று படித்தபோது, ஒரு தஞ்சாவூர்க்காரனாகப் பெருமிதம் அடைந்தேன்.

சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலத் தஞ்சாவூர் முழுக்க முழுக்கப் பண்ணையாளர்களின் வசம் இருந்தது. உக்கடைத் தேவர், பூண்டி வாண்டையார், கபிஸ்தலம் மூப்பனார்... இவர்கள் எல்லாம் அதில் முக்கியமானவர்கள். இவர்கள்தான் தஞ்சைக்கு நெற்களஞ்சியம் எனப் பெயர் வர முக்கியக் கார ணமாக இருந்தவர்கள்.

90-களின் பிற்பாதியில் நான் ஒரு பூச்சி மருந்துக் கம்பெனி யில் விற்பனைப் பிரதிநிதியாக இருந்தேன். அப்போது நான் சுற்றி வராத தஞ்சைக் கிராமங்களே இல்லை. தஞ்சையில் இருந்து 40 கி.மீ. தூரம் எந்தத் திசையில் போனாலும், அங்கு நீங்கள் ஒரு நகரத்தைப் பார்க்க முடியும். தஞ்சை மாவட்டத்தின் சிறப்புகளில் இதுவும் ஒன்று.

என் ஊர் : தஞ்சாவூர்

அந்தக் காலகட்டத்தில்தான் விவசாயிகளையும் விவசாயத் தையும் மிகமிக அருகில் இருந்து பார்த்தேன். விவசாயத்தின் மகத்துவத்தையும் விவசாயிகளின் துயரங்களையும் அப்போதுதான் உணர்ந்தேன். ஜூன் மாதம் ஆரம்பித்துவிட்டாலே விவசாயிகள் உரங் களையும் பூச்சி மருந்துகளையும் மாட்டு வண்டி களில் ஏற்றிக்கொண்டு போவதையும், ஏப்ரலில் பருத்தியை ஏற்றிக்கொண்டுப் போவதையும் அப்போது அடிக்கடி பார்க்கலாம். அப்படி உண்ண அரிசியையும் உடுத்தப் பருத்தியையும் தந்த அந்த விவசாயிகளின் வாரிசுகள் பலர், இன்று விவசாயத்தை விட்டு வெளியேறிப் புதிய வாழ்வாதாரத்தைத் தேடி வெவ்வேறு வேலை பார்க்கவேண்டிய நிலைமைக்கு வந்து விட்டார் கள்.

தஞ்சையின் இன்னொரு புதையல், சரஸ்வதி மஹால் நூலகம்.  என்னை மிகவும் கவர்ந்த இடங்களில் இதுவும் முக்கியமானது. என்னுடைய சிறுவயதில் பெரும்பாலான நேரத்தை நான் இந்த நூலகத்தில்தான் செலவிட்டேன். ஆனால், இன்றைய இளைஞர்கள் அங்கு இருக்கும் அரிய பல பொக்கிஷங்களைப் பயன்படுத்துவதே இல்லை. ஆய்வு கட்டுரைத் தயாரிப்பவர்களையும் வயதானவர்களையும் தவிர்த்து இளைஞர்களை, சிறுவர்களை அங்கே பார்க்கவே முடிய வில்லை.

என் ஊர் : தஞ்சாவூர்

தஞ்சை மருத்துவக் கல்லூரி, பல உயிர்களைக் காப்பாற்றிய புண்ணியம் வாய்ந்த ஒரு கல்லூரி. உயிருக்கு ஆபத்து என்றால், தஞ்சை மற்றும் அதனைச் சுற்றி உள்ள மாவட்ட மக்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது தஞ்சை மருத்துவக் கல்லூரிதான். அந்த அளவுக்கு அங்கு சிகிச்சைகள் தரமாக இருக்கும். அதே சமயம் அரசு மருத்துவமனைகளுக்கே உரிய சுகாதாரக் குறைபாடும் குறைவு இல்லாமல் இருக்கும்.

என் சிறு வயதில் எனக்கும் எங்கள் வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்த சிறுவர்களுக்கும் புது ஆற்றுப் பாலம்தான் முக்கியமான பொழுதுபோக்கு பகுதி. ஆற்றில் தண்ணீர் வரும் ஒவ்வொரு நாளுமே எங்களுக்குத் திருநாள்தான். அதிகாலை சோப்பு டப்பாவையும் துண்டையும் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பிச் சென்றால் அலுத்துபோய் வீடு திரும்பும் வரையில் நீச்சல் அடிப்போம்.

திரைப்படங்களையும் தஞ்சாவூர் இளைஞர் களையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. ஏனெ னில், எங்களின் பிடித்தமான பொழுதுபோக்கே அதுதான். இளைஞர்கள் எல்லாரும் ஒன்றுகூடி சைக்கிள் எடுத்துக்கொண்டு தியேட்டர் தியேட் டராகச் சுற்றிவருவோம். பர்வீன் தியேட்டர்கட்டி முடித்து முதன்முதலாக 'மனிதன்’ பார்த்ததுஆகட் டும்... சாந்தி தியேட்டரில் 'தேவர் மகன்’ பார்த் தது ஆகட்டும்... எல்லாமே என் மனதில் இன் றும் அப்படியே பதிந்திருக்கிறது. பின்னாட்களில் நான் திரைப்படத் துறையைத் தேர்ந்து எடுத்ததற்கு இந்த அனுபவங்களும் ஒரு காரணம்!''

-உ.அருண்குமார்
படங்கள்: கே.குணசீலன், ஜெ.வேங்கடராஜ்