Published:Updated:

இதுதான் நிஜ குடும்பப் பாட்டு!

இதுதான் நிஜ குடும்பப் பாட்டு!

இதுதான் நிஜ குடும்பப் பாட்டு!

இதுதான் நிஜ குடும்பப் பாட்டு!

Published:Updated:
##~##

ழைய திரைப்படங்களில் தொலைந்துபோன குடும்பத்தைக் கண்டுபிடிக்கக் குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் ஒரு பாடலை வைத்திருப்பார்கள். கரூரிலோ, குடும்ப அங்கத்தினர்களே ஒன்றுசேர்ந்து பாடல்களை உருவாக்குகின்றனர். இந்தத் தகவலை என் விகடன் வாசகர் சரவணன் குரல்பதிவு மூலம் தெரிவித்து இருந்தார்.

 தான்தோன்றிமலையில் வசிக்கும் பள்ளி மாணவரான சக்தி சண்முகவேலின் வீட்டுக்குள் நுழையும்போதே மாடியில் பாட்டுச் சத்தம் கேட்கிறது.

'தடம் மாறும் இளைஞனே நீ தடுமாறாதே
காலம் வந்து சேருமே கடமை மறவாதே
கலங்கி நிற்கும் பெண்மையே      
கண்ணீர் விடுவதேனோ
காலம் மாறும் நேரமே சாதனை வருமோ!’

இதுதான் நிஜ குடும்பப் பாட்டு!

சக்தி கீ போர்டு வாசிக்க... அவனுடைய தாய் அம்சலட்சுமி அருகில் அமர்ந்து இந்த வரி களைப் பாடிக்கொண்டு இருக்கிறார்.  

என்னைப் பார்த்ததும், ''வாங்க... வாங்க... எங்க சக்தி ஒரு மெட்டு சிக்கிடுச்சுனு சொன் னான். அதான் மெட்டுக்கு வரி மாட்டுதான்னு பார்த்துகிட்டு இருக்கேன். அவன் போடுற மெட்டுக்கு நான் பாட்டு

இதுதான் நிஜ குடும்பப் பாட்டு!

எழுதுவேன். என் கடைசிப் பையன் சக்தி குருவோ, எங்க வீட்டுக் காரர் ஆறுமுகமோ அதைப் பாடி மொபைல்ல ரெக்கார்டு பண்ணிவெச்சுக்குவோம்'' என்கிறார் அம்சலட்சுமி.

தொடர்ந்து பேசுபவர், ''எனக்குச் சின்ன வயசுல இருந்தே கவிதை எழுதும் பழக்கம் உண்டு. என் பையன் ஆறு வருஷமா கீ போர்டு வாசிக்கிறான். அவன் போடுற இசைக்குத் தகுந்த மாதிரி நான் வரிகள் எழுதுவேன். அதுக்காகவே அவன் உற்சாகமா நிறைய ட்யூன் போடுவான். இப்படி பிராக்டீஸ் பண்ணி 100 பாடல்களுக்கு மேல உருவாக்கி இருக்குறோம். 2010-ம் வருஷம் தேவா சாரைப் பார்த்து 12 டியூன்களும், அதற் கான வரிகளையும்கொண்ட சி.டி-யை கொடுத் தோம். அதை அவர் மகன் ஸ்ரீகாந்த் தேவாவை வெச்சு ஒரு இசை ஆல்பமா வெளியிட்டார். அத்தனை பாடல்களும் எங்கள் இஷ்ட தெய்வ மான ஓம் சக்தியைப் பற்றியது. நாங்கள்தான் அதற்கு மெட்டுப் போட்டோம் என்று தெரிந்து ஆதிபராசக்தி கோயிலில் உள்ள அடிகளார் எங்களைக் கூப்பிட்டு வாழ்த்தினார். அந்தப் பாடல்களுக்காக உலகம் முழுக்க உள்ள ஆதி பராசக்தி ரசிகர்கள் பாராட்டு தெரிவிச் சாங்க.

இப்போ மது ஒழிப்பு, அனைவருக் கும் கல்வி, சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவற்றை மையப்படுத்திப் பல பாடல்களை உருவாக்கி இருக்கோம். எதிர்காலத்தில் எங்கள் குடும்பக் கூட்டணியில் நிறைய ஆல்பங்களை ரிலீஸ் பண்ணுவோம்!'' என்கிறார் உற்சாகமாக.

இதுதான் நிஜ குடும்பப் பாட்டு!

சக்தி சண்முகவேல், ''என்னோட இந்தத் திறமைக்கு முழு முதல் காரணம் என் அம்மா தான். நான் எப்ப    கீபோர்டு எடுத்து வெச்சுக்கிட்டு உட் கார்ந்தாலும், அவங்களும் நோட்டும் பேனாவுமா பக்கத் துல உக்காந்துருவாங்க. நாங்க அம்மா, மகன்னு சொல்றதைவிட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். அதனாலதான் என்னால இந்த சாதனைகளைச் செய்ய முடிஞ்சது'' என்கிறான் பெருமையாக!

கட்டுரை, படங்கள்: - ஞா.அண்ணாமலை ராஜா