Published:Updated:

ஒளியும் ஒலியும்!

ஒளியும் ஒலியும்!

##~##
'ஹ
லோ பங்காளி’ என்ற குரலைக் கேட்டால், அது திருச்சி ஹலோ எஃப்.எம். ராஜாதான். ''மூணு வருஷத்துக்கு முன்னாடி 'பல்லாங்குழி’ன்னு முதல் ஷோ பண்ணேன். அது வார்த்தை விளையாட்டு நிகழ்ச்சி. போன் பண்றவங்கல்லாம், 'சார், ஐயா, அண்ணா’ன்னு பேசுவாங்க. இந்த ரெகுலர் பேச்சை மாற்ற, 'என்ன பங்காளி’ன்னு விளையாட்டா ஆரம்பிச்சது செம பிக்-அப் ஆகிடுச்சு. ரேஷன் கார்டு தொடங்கி டிராஃபிக் ஜாம் வரை எல்லாத்தையும் பேசி, முடிஞ்சா அதுக்கு ஒரு தீர்வையும் சொல்வோம். மூணே

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஒளியும் ஒலியும்!
நிமிஷம்தான். உடனே, அடுத்த பாட்டை, கேர்ள் ஃப்ரெண்ட்டுக்கோ, சித்தப்பாவுக்கோ டெடிகேட் பண்ணிட வேண்டியதுதான்!'' என்று சிரிக்கிறார் ராஜா. ''எனக்குக் கல்யாணம் நடக்கப்போறதை நிகழ்ச்சியில் சொன்னேன். அடுத்த நாளே  திருச்செங் கோடு பக்கம் ஒரு அம்மா தேங்காய், பழம்,வெற்றிலைப் பாக்கு, ஸ்வீட்ஸ், பேன்ட் - ஷர்ட் வெச்சு சீர் கொண்டுவந்து கொடுத்தாங்க. அந்த சீர்ப் பைக்குள் ஒரு மிளகாய் வத்தலும் இருந்துச்சு. ஏன்னு கேட்டதுக்கு, 'திருஷ்டி படக் கூடாதுல்ல’ன்னு சொன்னாங்க. இதைவிட வேற என்ன சார் வேணும்?''  

- சண்.சரவணகுமார்
படம்: பா.காளிமுத்து

ஒளியும் ஒலியும்!

ட்டுக்கோட்டை அன்பு டி.வி- யில் 'அன்பு நேரங்கள்’ நிகழ்ச்சியில் கலக்கும் வைரமணி, 'ஓ.கே. பேட்டியை ஆரம்பிக்கலாம்’ என பில்டப்புடன் ஆரம் பித்தார். 'நான் டிப்ளமோ படிச்சுட்டு வேலைக்காக வெயிட்டிங் (அவனவன் வேலை தேடிட்டிருக்கான்... இவரு காத்திருக்காராமாம்!). ஒருநாள் என் நண்பன், 'மச்சான்... நீ ரொம்ப அழகா இருக்கே. எனக்கே பயமா இருக்கு. காம்பியரிங் பண்ணுடா’ன்னான். 'சரி, பண்ணிடாலாம்’னு குதிச்சாச்சு. இப்ப பட்டுக்கோட்டையில நம்மளைத் தெரியாத வங்களே கிடையாது. ஒரே ஒரு கஷ்டம்... ஆறு மாசமாகத்தான் காம்பியரிங் பண்ணு றேன். அதுக்குள்ள நமக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ்! (விடுங்க பாஸ்). பொண்ணுங்க நிறையப் பேர் போன் பண்றாங்க. பட், நான் வீட்ல பார்க்கும் பொண்ணத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்!''

யாருக்கோ, மெசேஜ் சொல்ற மாதிரி இருக்கே?!

வி.சுரேஷ் படம்: கே.குணசீலன்

ஒளியும் ஒலியும்!

''நான் 10-ம் வகுப்பு ஃபெயில். கரஸ்ல விஸ்காம் முடிச்சுட்டு சூரியன் எஃப்.எம். தொகுப்பாளராகி, இப்போ 'காதல் காதல்’ சரண்யாவா உங்ககூட பேசிட்டு இருக்கேன்!''- மிட்டாய்க் குரலில் பேசும் சரண்யாவும் காதல் திருமணம் செய்தவர்தான். ''ஒரு தலைக் காதல், இருதலைக் காதல், முக்கோணக் காதல், ஆட்டோகிராஃப் காதல், ஏமாந்த காதல், ஏமாற்றிய காதல், சொல்லாத காதல், சொல்ல மறந்த காதல், எதிர்காலக் காதல், ஏகாந்தக் காதல்... இப்படி காதலைக் கண்டம்துண்டமா ஆபரேஷன் செஞ்சு, பல நிகழ்ச்சிகள் பண்ணி இருக்கேன். ஃப்ரெண்ட்ஸ்கிட்ட பேச முடியாத விஷயங்களைக்கூட வேற பெயரோட நம்மகிட்ட போன் பண்ணிப் பேசுவாங்க. ஒருதடவை புதுக்கோட்டையில் இருந்து சுசீலான்னு ஒரு பொண்ணு. லவ் ஃபெயிலியராம். கையில் பாய்ஸன் பாட்டிலோட பேசுது. பதறிப்போச்சு. பேச்சுக் குடுத்துக்கிட்டே அந்த ஏரியாவில் உள்ள ஒருத்தரைவெச்சுக் காப்பாத்தினோம். செந்தில்னு ஒரு காலர் இருக்கார். தினமும் பேசுவார். முதல் வருஷம் 'செந்தில்’ என்ற பெயரோடு பேசினார். அடுத்த வருஷம் 'நல்லவன்’ என்ற பெயரோடு பேசினார். இப்போ '777’ என்ற பெயரில் பேசிட்டு இருக்கார். இப்போ அவருக்கே ஃபேன்ஸ் உருவாகிட்டாங்க!.''  

- சண்.சரவணக்குமார் படம்: பா.காளிமுத்து

ஒளியும் ஒலியும்!