Published:Updated:

நிம்மதி நீதிபதி

நிம்மதி நீதிபதி

##~##
'உ
ன்னைத்தான் தம்பி பார்க்க வந்திருக்கோம்’ என்று சொன்னதுமே, ஓடிப் போய் ஒளிந்துகொண்டான் நீதிபதி. 'டேய், இங்க வாடா’ என நீதிபதியை மரியாதையே இல்லாமல் அழைத்தபடி துரத்திச் செல்கிறாள் நிம்மதி.  நிம்மதி, நீதிபதி... இரண்டும் பெயர்கள். நிம்மதி அக்கா, நீதிபதி தம்பி. தஞ்சாவூரைச் சேர்ந்தபழனிவேல், சித்ரா தம்பதியினரின் பிள்ளைகள் இவர்கள். 'என் மனைவி கர்ப்பமா இருக்கும்போதே பிறக்கும் குழந்தைக்கு நல்ல தமிழ்ப் பெயர்தான் வைக்கணும்னு முடிவு பண்ணினோம். நண்பரின் மனைவி பெயர் நிறைமதி. அந்தப் பெயர் பிடிச்சுப்போனதால், அதையே கொஞ்சம் மாற்றி 'நிம்மதி’ன்னு வெச்சோம். எல்லோரும் நினைக்கிற மாதிரி நிம்மதின்னா 'மன
நிம்மதி நீதிபதி
அமைதி’ங்குற அர்த்தம் மட்டுமே இல்லை. நிம்மதி என்றால் 'முழு நிலவு’ங்கிற அர்த்தமும் உண்டு. ரெண்டாவது பையன் பொறந்தப்போ 'நிதியரசர்’னு பெயர்வைக்க லாம்னுதான் நினைச்சோம். அது, காரைக்கால் அம்மையாரின் அப்பா பெயர். அந்தப் பெயரையே கொஞ்சம் மாற்றி 'நீதிபதி’ன்னு வெச்சுட்டோம். ஆரம்பத்தில் கிண்டல் பண்ணாங்க. இப்போ எல்லாரும் பாராட்டு றாங்க'' என்கிறார்கள் பெருமையுடன். இவர் கள் வீட்டின் பெயர் 'நிம்மதி குடில்’!

- இரா.மங்கையர்க்கரசி
படம்: ந.வசந்தகுமார்

பயபுள்ள காருண்யா!

நிம்மதி நீதிபதி

'டேய், ஒன்ன எத்தனை தடவை சொல்றது? பொண்ணுங்க பக்கம் நிக்காத, பசங்க பக்கம் போய் நில்லுன்னு?'-கண்டக்டரின் வசவைக் கேட்டதும் பஸ் தெறிக்க கல்லூரிப் பெண்கள் கூட்டம் ஹோவெனச் சிரிக்கிறது. அவர்... காருண்யா. பாய் கட், டி-ஷர்ட் என்று இரண்டாயிரம் பெண்கள் படிக்கும் கல்லூரியில் ஒரே 'பயபுள்ள’யாக வலம் வருகிறார் காருண்யா. பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கலைக் கல்லூரியில் எம்.சி.ஏ. இரண்டாம் ஆண்டு படிக்கும் காருண்யாதான் கல்லூரியின் கலகல அட்ராக்ஷன். 'அண்ணன் டிரெஸ்ஸை மாட்டிக்கிட்டு தெரு அண்ணன்களோட கோலி, பம்பரம், மங்காத்தா வரைக்கும் செட்டா விளையாடியே

நிம்மதி நீதிபதி

வளர்ந்துட்டேன். ஜல்லிகட்டில் மாடு பிடிக்கக்கூடப் போயிருக்கேன். 'பொம்பளப் புள்ளையா நீ?’ன்னு அப்பப்போ அப்பத்தாக்கள் திட்டத்தான் செய்வாங்க. அதை எல்லாம் கண்டுக்கிறது இல்லை. அந்த வித்தைகள்தான் காலேஜ் ஸ்போர்ட்ஸில் தனி அடையாளம் வாங்கித் தந்திருக்கு''- படபட எனப் பேசும் காருண்யாவுடன்,  இணைந்து சக மாணவிகள் புகைப்படம் எடுத்துப் பத்திரமாக வைத்திருக்கிறார்கள். எதிர் காலத்தில் தத்தம் பாய் ஃப்ரெண்டை வீட்டுக்குக் காட்ட வேண்டி வந்தால், இந்த போட்டோதான் வெள்ளோட்டமாம். யாத்தாடி!

- சு.சுபாஷ் லெனின்

அடுத்த கட்டுரைக்கு