Published:Updated:

புரோட்டா கடையில் பக்கோடா பாண்டி!

 ##~##
'இ
ப்பப் பாரேன், சிவா கோவத்துல அவன் சட்டைப்பையைக் கிழிச்சிக்கு வான்’, 'சிவாவுக்குக் கண்ணு சிவந்துடுச்சே, அவனுக்குக் கோவம் வந்தா, அடிக்காம விட மாட்டானே’ என உசுப்பேற்றும் 'பசங்க’ படத்தின் 'பக்கோடா பாண்டி’யை மறக்க முடியுமா? புதுக்கோட்டை மாவட்டம் - பனையப்பட்டி எனும் சிறிய கிராமம்தான் பாண்டியின் சொந்த ஊர்.

பாண்டியைத் தேடிப்போனோம். ''பக்கத்தில் நற்சாந்துப்பட்டியில் பாண்டியோட அப்பா புரோட்டா கடை வெச்சிருக்கார். இன்னிக்கு ஞாயித்துக் கிழமையாச்சே. பாண்டி அங்கேதான் இருப்பான்'' என்றார்கள். நற்சாந்துப்பட்டி புரோட்டாக் கடைக்குப் போனால், கஸ்டமர் ஒருவருக்கு புரோட்டாவுக்கு சால்னா ஊற்றிக்கொண்டு இருந்தான் பாண்டி.

புரோட்டா கடையில் பக்கோடா பாண்டி!

''எம் பேரு எனக்கே மறந்துபோற அளவுக்கு எல்லாரும் 'பக்கடா, பக்கடா’ன்னு சொல்லி,  அதுவே எனக்கும் பழக்கமாகிப்போச்சு. என் சொந்தப் பேர் பாண்டி. எட்டாங் கிளாஸ் படிக்கிறேன். எங்க ஹோட்டலுக்கு விராச்சிலைங்கிற ஊர்ல இருந்து பாண்டிராஜுங்குற அண்ணன் அடிக்கடி வருவார். அதுல எங்க அப்பாவுக்கும் அந்த அண்ணனுக்கும் பழக்கம். அண்ணன், 'படம் எடுக்கப் போறேன். அதுல உங்க பையனை நடிக்கவைப்பமா?’ன்னு எங்க அப்பா கிட்ட கேட்ருக்காங்க. எங்க அப்பாவும் சரின்னு சொல்லிதான், நான் சினிமாவுல நடிச்சேன்'' என்கிறான் வெள்ளந்திப் புன்னகையுடன்!

புரோட்டா கடையில் பக்கோடா பாண்டி!
புரோட்டா கடையில் பக்கோடா பாண்டி!

''நான் ஆறாங் கிளாஸ் படிச்சிக்கிட்டு இருக்கும்போதுதான் முதல் நாள் ஷூட்டிங் நடந்துச்சு. முதல் ஸீன் நான் கையை சுத்திக்கிட்டு வர்ற மாதிரி எடுத்தாங்க. அடுத்து, நான் பேசிய முதல் வசனம் 'எங்க அம்மா அடிக்கடிசொல்லு வாங்க... எனக்கு அருவாமணை குண்டின்னு’. இதைப் பேச எனக்குக் கூச்சமா இருந்ததால, ரொம்ப நேரமா சும்மாவே நின்னேன். பாண்டியண்ணன், 'டேய்... ஒழுங்காப் பேசுடா’ன்னு அதட்டித் திட்டுன பிறகுதான் பேசினேன். மொத்தம் 85 நாள் அந்தப் படத்தோட ஷூட்டிங் நடந்துச்சு. நான் ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்த தால, சாயந்திரம் 4 மணிக்கு மேலதான் நான் நடிச்ச ஸீன் எல்லாம் எடுத்தாங்க. அந்தப் படம் முடிஞ்சதும், பாண்டி அண்ணன் எனக்கு 25 ஆயிரம் ரூபாய் குடுத்தாங்க. என்னோட நடிப்பைப் பாராட்டி, பாண்டிச்சேரில எனக்கு ஒரு விருதும் பத்தாயிரம் ரூபா பணமும் குடுத்தாங்க. இது எல்லாத்துக்கும் பாண்டிராஜ் அண்ணன்தான் காரணம். அவர் இல்லேன்னா, என்னை எல்லாம் யாருக்குத் தெரியும்? இப்பவும் சொந்த ஊர் விராச்சிலைக்கு வந்தா, அண்ணன் எனக்கு போன் பண்ணிரும். நானும் கிளம்பிப்போய் பார்த்துப் பேசிட்டு வருவேன்.

புரோட்டா கடையில் பக்கோடா பாண்டி!

எனக்கு அந்தப் படத்துல புடிச்ச வசனம், 'இந்த மாசத்துல ஞாயித்துக் கிழமை நாலு நாள். சனிக் கிழமை நாலு நாள். தீபாவளி ஒருநாள். ரம்ஜான் ஒருநாள், காந்தி ஜெயந்தி ஒருநாள். மொத்தத்துல பதினாலு நாள்’னு கேப்டன் விஜயகாந்த் மாதிரி பேசுனதுதான். அந்தப் படத்த நான் பார்த்தப்ப அந்த வசனத்தை நான் பேசும்போது பயங்கர கைத்தட்டல். அதுக்குப் பிறகு 'வம்சம்’ படத்துல ஒரு ஸீன்ல வந்து போவேன். 'பசங்க’ படத்துக்குப் பிறகு, 'ஊலலல்லா’, 'சூரியமகன்’, 'புறநகர்னு’ மூணு படம் பண்ணி

புரோட்டா கடையில் பக்கோடா பாண்டி!

இருக்கேன்'' என ஒரு கிராமத்துப் பையனின் இயல்போடு வெளிப்படையாகப் பேசுகிறான் பாண்டி.

''தினமும் காலையில் 6 மணிக்குக் குளிச்சுட்டு கடைக்கு வந்திருவேன். 8 மணி வரைக்கும் கடை. அப்புறம் பள்ளிக் கூடத்துக்குப் போயிட்டு சாயங்காலம் கடைக்கு வந்து     ராத்திரி 8 மணி வரைக்கும் இருப்பேன். அதுக்குப் பிறகு படிச்சுட்டு, ஹோம்வொர்க் செஞ்சிட்டு படுக்க 10 மணி ஆயிடும்'' பாண்டியின் பேச்சில் அத்தனை யதார்த்தம்!

- வீ.மாணிக்கவாசகம்.
படங்கள்: பா.காளிமுத்து

அடுத்த கட்டுரைக்கு