Published:Updated:

''பம்பரம் விளையாட வருவல்ல அப்ப பார்த்துக்கிறேன்!''

 ##~##
கி
ராமத்துப் பள்ளிக்கூட வாழ்க்கை என்பது எதனுடனும் ஒப்பிட முடியாத அளவுக்கு இனிய அனுபவங்களைக்கொண்டது. அதைக் கடந்து வந்தவர்களுக்கு மட்டுமே அதன் சுவை புரியும். காலங்கள் மாறினாலும் வகுப்பறையின் இயல்பு மட்டும் எப்போதும் குழந்தைத் தனங்கள் நிறைந்ததே. குதூகலமும், குறும்புகளும் நிறைந்த அந்த அழகான வாழ்க்கையை ஒருநாள் அவர்களுடன் இணைந்து கழித்த தருணம் இங்கே...
''பம்பரம் விளையாட வருவல்ல அப்ப பார்த்துக்கிறேன்!''

பேராவூரணிக்கு அருகே உள்ள கொன்றைக்காடு அரசுத் தொடக்கப் பள்ளியில் ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை உள்ள மாணவ - மாணவிகளை ஒன்றாக உட்காரவைத்து, தேன்மொழி டீச்சர் செயல் வழிக் கற்றல் வகுப்பு நடத்திக்கொண்டு இருந்தார். வாயில் பேனாவைக் கடித்துக்கொண்டே பாடத்தை உன்னிப்பாகக் கவனித்த காவ்யாவை, 'பேனா பாவம்... அதைக் கடிக்காதே’ என்ற டீச்சரிடம், 'அப்ப பென்சிலைக் கடிக்கலாமா?’ எனக் கேட்டுச் சிரிக்கத் தொடங்கினாள்.

''பம்பரம் விளையாட வருவல்ல அப்ப பார்த்துக்கிறேன்!''

இரண்டாம் வகுப்பு படிக்கும் குறும்பன் வெங்கடேஷ், தன் முன்னால் இருந்த அபியின் தலைமுடியை இழுக்க... அபி அழுதுகொண்டே டீச்சரிடம் புகார் செய்தாள். வெங்கடேஷை அழைத்துக் கண்டித்து அனுப்ப, கூடவே சிரித்துக்கொண்டே போனாள் அபி. (வலி போச்சு... நட்பு இருக்கு). வகுப்புக்குள் நடந்தவற்றை எல்லாம் நாம் கேமராவால் க்ளிக் செய்ய, சிவசக்தி மட்டும் பயந்துகொண்டே டேபிளுக்குள் பதுங்கினாள். அதையும் படம் பிடித்ததும் வகுப்பறை முழுக்கச் சிரிப்பலை. 'டீச்சர், இது என் நோட்டு’ என மோகன்ராஜும் பிரகதீஷ§ம் சண்டை போட, இருவரையும் அழைத்து பஞ்சாயத்து பேசி பைசல் செய்தார் டீச்சர்.

''பம்பரம் விளையாட வருவல்ல அப்ப பார்த்துக்கிறேன்!''
''பம்பரம் விளையாட வருவல்ல அப்ப பார்த்துக்கிறேன்!''

'டேய்... உன் டை சூப்பரா இருக்கு. நான் போட்டுப் பார்க்கவா?’ என்ற சிவாவிடம், 'ம்... அம்மா திட்டுவாங்க. தர முடியாது’ என மறுத்தான் மணிராஜ். 'சாயங்காலம் பம்பரம் விளையாட வருவல்ல, அப்ப பார்த்துக்கிறேன்’ எனக் கோபத்தோடு முகத்தைத் திருப்பிக்கொண்டான் சிவா. அப்போது மதிய உணவு இடைவேளை மணி அடிக்கத் தொடங்கியது. 'ஹே’ என உற்சாகத்தோடு கிளம்பியது பட்டாளத்தின் திடீர் ரயில் வண்டி. இன்ஜினை ஓட்டியது வசீகரன் (ரோபாட்டிக்ஸ் படிச்சா நல்ல ஸ்கோப் இருக்கு கண்ணா!).

மழலைகளின் கை வண்ணத்தில் உருவாக்கப்பட்டு இருந்த ஓவியங்கள் வகுப்பில் தொங்கவிடப்பட்டு இருந்தன. அதில் யானை படத்தை யார் தொடுவது என்கிற மூவர் போட்டியில், விக்னேஸ்வரனுக்கு வெற்றி. 'சரி... நாங்க கிளம்புறோம்’என்று நாம் கிளம்ப, 'திரும்பவும் எப்ப வருவீங்க?’ எனக் கேட்டாள் சிவசக்தி. (அன்னிக்கு லீவு போடுறதுக்கா?)

- சி.சுரேஷ்
படங்கள்: கே.குணசீலன்

அடுத்த கட்டுரைக்கு