Published:Updated:

தாவணிக்கு மரியாதை! - தஞ்சாவூர்

 ##~##
நே
ற்றைய டிசைன் இன்று அவுட் ஆஃப் ஃபேஷன். ஆனால், ஃபேஷன் சக்கரத்தில் எப்போதும் உச்சத்தில் இருப்பது தாவணி!

'அது என்னன்னே தெரியலை. புதுசு புதுசா என்ன டிரெஸ் வந்தாலும், பசங்களுக்குத் தாவணி போட்ட பொண்ணுங்களைத்தான் பிடிக்குது. ஏன் அப்படி?'' சந்தேகம் தீர்க்க தாவணிப் பெண்கள் குழுவுடன் தஞ்சை பெரியகோயிலுக்குள் நுழைந்தோம். எங்கெங்கும் சுடிதார், ஆங்காங்கே ஜீன்ஸ்... என்று தென்பட்ட பெண்களில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு தாவணிப் பெண்... ம்ஹ்ம்..! ''முதல்ல பெரியகோயிலை ஒரு ரவுண்ட் வந்து தாவணி போட்ட பொண்ணுங்க எத்தனை பேர் இருக்காங்கன்னு பார்த்துடுவோம்'' என்று கிளம்பினார்கள் சரண்யா, சுகன்யா தேவி, ரமா, மணிமேகலை உள்ளிட்ட படை. மூச்சிரைக்கச் சுற்றியதில் எண்ணி 10 பேர் மட்டுமே தாவணிப் பெண்கள்.

தாவணிக்கு மரியாதை! - தஞ்சாவூர்

  ''பொண்ணுங்களாவது 10 பேர் இருக்காங்க. வேட்டி கட்டின பசங்க எத்தனை பேர்னு எண்ணிப் பார்த்தீங்கன்னா ஒருத்தர் கூடத் தேற மாட்டாங்க. ஸோ, ரொம்பக் கவலைப் பட வேண்டாம்!'' என்று 'நமக்கு நாமே’ திட்டத்தில் பாராட்டிக்கொண்ட பெண்கள், தாவணி பெருமையை அள்ளிவிட ஆரம்பித்தனர். 'என்கிட்டயும் சுடிதார், மிடிலாம் இருக்கு. ஆனால், தாவணி போடுறப்போ கிடைக்கிற

தாவணிக்கு மரியாதை! - தஞ்சாவூர்

சந்தோஷம் வேற எந்த டிரெஸ்லயும் கிடையாது!'' என்று ஆரம்பித்தார் ரமா. ''ஒரு பொது இடத்தில் தாவணி போட்டு போறப்போ நமக்குக் கிடைக்கிற மரியாதையே தனி. பொண்ணுங்களைக் கிண்டல் பண்ற பசங்ககூட நம்மை ஒரு மரியாதையோடுதான் பார்ப்பாங்க. இதெல்லாம் சொன்னா புரியாது... இட்ஸ் எ கேர்ள் திங்!'' என்று வெட்கப் புன்னகை சிந்தி தாவணிக்கு டிக் அடித்தார் ரமா.

''சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம், மத்தவங்களைச் சந்தோஷப்படுத்திப் பார்க்குறதுதான். தாவணியில் ரெண்டுமே உண்டு. எங்க வீட்டுல ஃபங்ஷன் நடக்குறப்போ சொந்தக்காரப் பொண்ணுங்க எல்லாம் 'சுடி, மிடி’னு சுத்துவாங்க. ஆனா, நான் பாவாடை - தாவணிதான் போடு வேன். அப்பதான் நம்மளைப் பார்க்கும்போதே சொந்தக்காரங்க மத்தியில் இமேஜ் கூடும். 'அந்தப் பொண்ணு சொன்னா சரியாதான் இருக்கும்’னு மரியாதையா நடத்துவாங்க. அதைவிட முக்கியமான மேட்டர், நாம தாவணியில் நிக்கிறதைக் காட்டி மிடி, சுடி போட்டுருக்குற பொண்ணுங்களை அவங்களோட சொந்தக்காரங்க திட்டுவாங்க பாருங்க... அதுதான் இருக்குறது லேயே பெரிய சந்தோஷம்!'' என்று புது ஆங்கிளில் யோசித்தார் மணிமேகலை.

தாவணிக்கு மரியாதை! - தஞ்சாவூர்

சுகன்யாதேவியின் அனுபவம் கொஞ்சம் பாவம்தான். 'எனக்கு பாவாடை - தாவணின்னா ரொம்பப் பிடிக்கும். நான் படிச்ச ஸ்கூல்ல எட்டாவதில் இருந்தே பாவாடை தாவணிதான் யூனிஃபார்ம். நான் ஆசை ஆசையா காத்திருந்தேன். ஆனா, நான் எட்டாவது வந்த வருஷத்துல இருந்து சுடிதாரை யூனிஃபார்மா கொண்டு வந்துட்டாங்க!'' என்று வருந்தும் சுகன்யா, ''அந்த சோகத்தைப் போக்க, இப்போ காலேஜுல வாரம் ஒரு தடவை ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் தாவணி போட்டுட்டு வந்து அசத்துவோம்ல!'' என்கிறார் துள்ளலாக!

''நான் பக்கத்தில் ஒரு கிராமத்தில் இருந்துதான் காலேஜுக்கு வர்றேன். இப்போல்லாம் எங்க கிராமத்துப் பொண்ணுங்களே தாவணியை விரும்பறதில்லை. காலேஜ், கம்ப்யூட்டர் சென்டர்னு அவசர அவசரமா ஓடுறதுக்கு தாவணி சரிப்படாது. அதுக்காக மனசுக்குப் பிடிச்ச டிரெஸ்ஸைக் கைவிட முடியாதே? அப்பப்போ கோயில், கல்யாணம், ஃப்ரெண்ட் வீடுகளுக்கு மட்டும் தாவணிதான் டிரெஸ் கோடு!'' -கோடு கிழிக்கிறார் சுகன்யா.

- இரா.மங்கையர்க்கரசி
படங்கள்: ந.வசந்தகுமார் 

அடுத்த கட்டுரைக்கு