##~## |
அஞ்சு வருஷமா காம்பியரிங் பண்றேன். ஒரு தடவை லேடீஸ் சாய்ஸ் நிகழ்ச்சியில் பசங்க போன் பண்ணி, எஸ்.எம்.எஸ். படத்தில் கலாய்க்குற மாதிரி கலாய்ச்சுட்டாங்க. இதெல்லாம் காம்பியரிங் வாழ்க்கையில் சகஜம்னு போய்ட்டே இருக்க வேண்டியதுதான். ஆனா, எனக்குன்னு சில ஃபேவரைட் காலர்ஸ் இருக்காங்க. மகேஸ்வரி, ஆனந்தி, கலைச்செல்வி... இவங்கல்லாம் நான் எப்ப ஷோ பண்ணாலும், ரெகுலரா போன் பண்ணுவாங்க. பல பேரை நான் குரலை வெச்சே கண்டுபிடிச்சுடுவேன். என் கனவு எப்படியாச்சும் சேட்டிலைட் சேனலில் காம்பியரிங் பண்ணணும்!''

'ஹலோ தமிழா’ நிகழ்ச்சியின் அதிரடி ஆர்.ஜே. திருச்சி ஹலோ எஃப்.எம். மதி. ''என் நிஜப் பெயர் முத்துகிருஷ்ணன். பச்சையப்பனில் தமிழ் படித்து, சினிமாவில் பாட்டு எழுதும் கனவில் கொஞ்ச காலம் திரிந்தேன். குடும்ப வறுமையால், கேரளாவில் கந்துக் கடைக்கு வேலைக்குப் போனேன். ஆனால், மனசு முழுக்க கவிதைதான் இருந்துச்சு. ஒன்றரை மாசத்தில் ஊர் திரும்பி, டிரை சைக்கிளில் பன் விற்க ஆரம்பிச்சேன். அஞ்சு வருஷம் இப்படித்தான் கழிஞ்சுது. என் கவிதைகளைப் புத்தகமாப் போட்டு, பிறகு 'ஹலோ’வில் சேர்ந்து, இப்போ உங்க ஹலோ தமிழன்!'' என்கிற 26 வயது மதி, உள்ளூர்ப் பிரச்னை முதல் உலக நடப்பு வரை சகலத்தையும் தன் நிகழ்ச்சியில் அலசுகிறார். மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்துவைக்கும் இவரது 'புகார் பெட்டி’ நிகழ்ச்சி செம ஹிட்!
-ச.ஸ்ரீராம், து.சதீஷ்குமார், படங்கள்: பா.காளிமுத்து