Election bannerElection banner
Published:Updated:

பெரம்பலூரில் இருந்து இன்னொரு ராஜா!

பெரம்பலூரில் இருந்து இன்னொரு ராஜா!

##~##
ளைப் பார்த்தால்... ஃபாரின் டூர் போய் வந்த ஜிம் ஓனர் மாதிரியே இருக்குல்ல?! ஆனால், இவர் பெரம்பலூர் நகராட்சித் தலைவர் இளையராஜா.

'ஜாலியா ஊர் சுத்திக்கிட்டு இருந்த பையன் நான். திடீர்னு ஒருநாள் சேர்மனாகி, வெள்ளை வேட்டி கட்டி, பெரிசா மீசை வெச்சு, கொஞ்சம் சதை போட்டு, பவர் இல்லாம கண்ணாடி மாட்டி... நடிகர்கள் மாதிரி மெனக்கெட்டு சேர்மன் லுக் கொடுக்க நான் மெனக்கெட்டா, அதிகாரிகள் 'தம்பி’ன் னுதான்

பெரம்பலூரில் இருந்து இன்னொரு ராஜா!

கூப்பிடுறாங்க' - சங்கோஜமாகச் சிரிக்கும் ராஜா, அரசியலுக்கு வந்ததும் நாற்காலியில் அமர்ந்ததும் அக்மார்க் விபத்து.

'என் அப்பா நாகரத்தினம் வார்டு அளவில் செல்வாக்கான நபர். 15 வருஷமா ஏரியா கவுன்சிலரா இருந்து இருக்கார். கடந்த முறை உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில், 'எனக்கு முடியலை, ஆளை விடுங்க’ன்னு அப்பா விலகிட் டார். ஆனா, அப்பா மேல் அன்பு கொண்ட ஏரியாவாசிகள், என்னை ஜெயிக்கவெச்சாங்க. காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஒப்பந்த அடிப்படையில், நகராட்சித் தலைவர் பதவி காங்கிரஸுக்குன்னு முடிவானதும், யானை மாலை போட்ட கதையா... இருந்த ரெண்டு காங்கிரஸ் உறுப்பினர்களில் நான் நகராட்சித் தலைவர் ஆகிட்டேன்' எனத் தான் தலைவர் ஆன கதை சொல்கிறார். இவர் பதவி ஏற்றபோது வயது 27.

'நகராட்சித் துணைத் தலைவரின் வயசு 65. அவர் உட்பட பெரும்பாலான உறுப்பினர்கள் எம்.பி. சீட் கேட்டு விண்ணப்பித்து, அடுத்த தேர்தல் வரை அரசியல் டச் போகாமல் இருக்க நகராட்சி உறுப்பினர் ஆனவர்கள். ஏரியா அரசியலில் பழம் தின்னு

பெரம்பலூரில் இருந்து இன்னொரு ராஜா!

கொட்டை போட்டவங்க. இவங்க மத்தியில் ப்ளஸ், மைனஸ்னு ஒரு புதுமுகமா பல அனுபவங்கள். அப்புறம்... இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர், நகர காங்கிரஸ் தலைவர்னு கட்சிப் பொறுப்புகளும் தேடி வர, இதுதான் வாழ்க்கைன்னு இறங்கிட்டேன். ஆரம்பத்தில் உள்ளூர ஏதாவது தப்பாகிடுமோ, கெட்ட பேராகிடுமோ, இருக்கிற மரியாதையும் பறி போயிடுமோன்னு பயம் இருந்துச்சு. ஆனா, இப்போ சின்ன பயமும் இல்லை. கார், பந்தா, கும்பல் எதுவும் கிடையாது. தெருவுக்குத் தெரு சைக்கிள், பைக்னு கிடைக்கிற லிஃப்ட்ல ஊரைச் சுத்தி வலம் வந்துடுவேன்' என்கிறார் ராஜா!

- எஸ்.சுமன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு