Published:Updated:

உங்க பர்ஸில் என்ன இருக்கு?

உங்க பர்ஸில் என்ன இருக்கு?

'உங்கள் பர்ஸில் இந்த நிமிடம் என்னவெல்லாம் இருக்கிறது?’ என்று கேட்டால், உங்களால் பர்ஸைப் பார்க்காமல் சொல்ல முடியுமா? திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் சிலரை மறித்துக் கேட்டோம். எல்லோரும் பர்ஸைப் பார்த்துதான் சொன்னார்கள். பதில்கள் இங்கே...

ஜெயசீலன் (புத்தக விற்பனையாளர்)

சில்லரையும், நோட்டுக்களுமாகச் சேர்த்து

உங்க பர்ஸில் என்ன இருக்கு?

1,000, மூன்று ஏ.டி.எம். கார்டுகள், ஐந்து விசிட்டிங் கார்டுகள், டிரைவிங் லைசென்ஸ், பில்கள், செல்போன் டாப்-அப் கார்டு, மனைவியின் படம், ஆஞ்சநேயர் படம். இத்துடன் சேர்த்து ஒரு கல்யாண போட்டோ. 'இது என்ன?’ என்று கேட்டால், ''எனக்கு ஒரே ஒரு தங்கை. இவதான் எங்க குடும்பச் சொத்து. 1996-ல் தங்கச்சி கல்யாணம் நடந்தப்போ எடுத்த போட்டோ. எப்பவும் என்கூடவே இருக்கட்டும்னு பர்ஸில் வெச்சிருக்கேன்'' என்று சொல்லும்போதே அவரது பாசம் தெரிந்தது!

பாலாஜி, (திருச்சி, அண்ணா பல்கலைக்கழக மாணவர்)

உங்க பர்ஸில் என்ன இருக்கு?

800, அப்பா போட்டோ, வீடியோகான், யுனிநார் உள்பட ஆறு சிம்கார்டுகள், பான் கார்டு, ஐ.டி. கார்டு, ஏ.டி.எம். கார்டு, நூலக கார்டு, 10 விசிட்டிங் கார்டுகள், கல்லூரிக் கட்டண ரசீது, அவ்வளவுதான். ''ஆறு சிம்கார்டுகளைவெச்சு என்ன பண்ணுவீங்க பாஸ்?'' என்றால், வளைந்து நெளிந்து சிரிக்கிறார்!

உங்க பர்ஸில் என்ன இருக்கு?

அன்புச் செல்வன் (வளனார் கல்லூரி மாணவர்)

ல்லூரி ஃபீஸ் கட்டிய சலான், பழைய இரண்டு ரூபாய் தாள், குடும்ப போட்டோ, நான்கு சிம்கார்டுகள். சிவப்பு கலர் டோக்கன் ஒன்றை மட்டும் மறைத்தார். அழுத்திப் பிடித்துக் காரணம் கேட்டால், ''இது என் காதல் சின்னம். யு.ஜி. படிக்கும்போது அவளை முதலில் காலேஜ் கேன்டீனில்தான் பார்த்தேன். அப்போ அவள் வாங்கிய டோக்கன்தான் இது. அவ கூடதான் பேச முடியலை. அவள் வாங்கிய டோக்கனையாச்சும் ஞாபகமா வெச்சுக்குவோம்னு நாலு வருஷமா சுமந்துகிட்டுத் திரியுறேன்'' என வெட்கப் படுகிறார் பையன்!

அஸ்ரஜ் (செல்போன் கடை ஊழியர்)

அம்மா போட்டோ, தீப்பிடித்து பாதி எரிந்து  போன 5 ரூபாய் தாள், ஃபாரின் காயின், 20 விசிட்டிங் கார்டுகள். இத்துடன் இருந்த மலேசியப் புகைப்படம் ஒன்றுக்கு சுவாரஸ்ய கதை சொல்கிறார் அஸ்ரஜ். ''எங்க சின்ன தாத்தா அப்துல் ரஹீம், சின்ன வயசுலயே மலேசியாவுக்கு கப்பல் ஏறி ஓடிப் போய், சொந்த முயற்சியில் கடைவெச்சு, உழைச்சு முன்னேறி, நிறையப் பணத்துடன் இந்தியா திரும்பினார். அவருக்கு மலேசியாவில் நிம்மதியான இடம் இந்தக் கட்டடம்தான். சாகுற வரைக்கும் தாத்தா பர்ஸில் இருந்த இந்த போட்டோ, இப்போ என் பர்ஸில் இருக்கு'' என சென்டிமென்ட் டில் உருகினார்!

டி.நடராஜன் (டிம்பர் மார்ட் ஊழியர்)

தாடியுடன் எடுத்த பழைய படம், ஏ.டி.எம். கார்டு, ஆறு விசிட்டிங் கார்டுகள், சிம்கார்டு ஒன்று,

உங்க பர்ஸில் என்ன இருக்கு?

100,  என சிம்பிளாக இருந்தது பர்ஸ். கசங்கலான காகிதம் ஒன்றில் பழைய தோழியின் முகவரி எழுதிப் பத்திரமாக வைத்திருந்தார். ''ரகசியம் எதையும் பர்ஸில் வைக்கிறது இல்ல சார். அது உண்மையாவே ரகசியமா இருந்தா, மனசுக்குள்ளயே இருக்கும். அதை ஏன் பர்ஸுக்குள்ள வைக்கணும்?'' -  கேட்கும்போதே இவரிடம் எக்கச்சக்க ரகசியங்கள் புதைந்துகிடக்கின்றன என்பது புரிகிறது!

மணிகண்டன் (தனியார் நிறுவன ஊழியர்)

எல்லோரையும் போல பணமும், சில கார்டுகளும் வைத்திருந்த இவரது பர்ஸில், அழகான கையெழுத்தில் எழுதப்பட்ட கடிதம் ஒன்று இருந்தது. ''நீங்க நினைக்கிறதுபோல இது லவ் லெட்டர் இல்லை. என் அம்மாவுக்கு நான் எழுதிய கடிதம். படிச்சு முடிச்சு கொஞ்ச நாள் வெட்டியா ஊர் சுத்திட்டு, பிறகு திருப்பூருக்கு வேலைக்குப் போனேன். அம்மா வைப் பிரிஞ்சு இருக்க முடியாமல், அடிக்கடி கடிதம் எழுதி அனுப்புவேன். அப்படி எழுதி அனுப்பாம விட்ட கடிதம் இது. அப்படியே என் பர்ஸிலேயே தங்கிடுச்சு!''

-சண்.சரவணக்குமார் படங்கள்:பா.காளிமுத்து

அடுத்த கட்டுரைக்கு