Published:Updated:

கொள்ளிடம் நடுவே வசிப்பிடம்!

கொள்ளிடம் நடுவே வசிப்பிடம்!

 ##~##
ற்றோரக் கிராமங்கள் தெரியும். ஆற்றுக் குள் கிராமங்கள் தெரியுமா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

காவிரியில் வெள்ளம் வந்தால், கொள்ளிடம் ஆற்றில்தான் திறந்துவிடுவார்கள். இந்தக் கொள்ளிடம் ஆறு கடலில் கலப்பது நாகை மாவட்டத்தின் கடைக்கோடிக் கிராமமான பழையாறு என்னும் ஊரில். இந்த ஊருக்கு சற்று முன்னர் தொடங்கி, 10 கிலோ மீட்டர் தூரம் வரை பல கிராமங்கள் கொள்ளிடம் ஆற்றுக்குள் இருக்கின்றன. மின்சாரம், குடிநீர், பள்ளி, ரேஷன் கடை என எல்லா வசதிகளும் உண்டு.

கொள்ளிடம் நடுவே வசிப்பிடம்!

கொள்ளிடத்தைப் பொருத்தவரை காவிரி மற்றும் சில துணை ஆறுகளில் ஏற்படும் வெள்ளம், உபரி நீர் ஆகியவைதான் அதன் நீர் ஆதாரம். மற்ற நாட்களில் அணைக்கரை யில் கசியும் நீரும், கடலுர், நாகை மாவட்டங் களின் நிலங்களில் வடியவைக்கப்படும் நீரும்தான் ஆற்றில் ஒடும். கிட்டத்தட்ட 1 கி.மீ. அகலத்துக்குப் பரந்து விரிந்திருக்கும் ஆற்றில் இந்த நீர், ஓர் ஓரத்தில் சிறிய வாய்க்கால் அளவுக்குத்தான் ஓடும். மீதம் உள்ள இடம் பொட்டல் மேடாகக் கிடக்கும். அந்த இடங்களில் ஒன்றிரண்டு பேர் குடியேற, அது படிப் படியாக வளர்ந்து கொள்ளிடத்துக்குள் சில கிராமங்களே உருவாகிவிட்டன. வீடுகள் மட்டுமில்லை, ஆற்றின் வளமான வண்டல் மண்ணில் விவசாயமும் நடக்கிறது. கொள்ளிடத் தின் வலது பக்கத்தில் நாதல் படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளமணல், கோரைத்திட்டு என நான்கு கிராமங்களும், இடது பக்கத்தில் கீழ குண்டலபாடி, ஜெயம்கொண்டபட்டினம் நடுத் திட்டு, காரைமேடு, வீரன்கோவில்திட்டு என்று ஐந்து கிராமங்களும் உள்ளன. இடது கரை கடலூர் மாவட்டம், வலது கரை நாகை மாவட்டம்.

கொள்ளிடம் நடுவே வசிப்பிடம்!

வெள்ளமணல் கிராமத்துக்குச் சென்றோம். ''இங்க 80 குடும்பங்கள் இருக்கோம். எல்லாரும் மீனவர் சமுதாயம்தான். பக்கத்துல இருக்கிற மீனவர் கிராமங்களில் இருந்து பிழைப்புக்காக இங்கே குடியேறினோம். நல்லா பாடு கிடைச்ச தால, இங்கேயே நிரந்தரமாத் தங்கிட்டோம். இருபது வருஷத்துக்கு முன்னாடி போராடி கரன்ட்டும் வாங்கிட்டோம். அப்புறம் வந்த ஒரே நல்ல விஷயம்... பள்ளிக்கூடம்தான். ஒரு ரோடு போட்டுத் தாங்கன்னு நாங்க அலையாத இடம் இல்லை, பார்க்காத அதிகாரி இல்லை. ஒரு ரோடு மட்டும் வந்திருச்சுன்னா, அப்புறம் சரசரன்னு நல்லது நடக்க ஆரம்பிச்சிரும்ல?'' என ஆசையைக் கண்களில் தேக்கிக் கேட்கிறார், பெரியவர் செண்பகமூர்த்தி.

ஆண்கள் மீன் பிடித்து வர, அவற்றைத் தலையில் சுமந்து அருகில் உள்ள கிராமங்களில் விற்று வருகிறார்கள் பெண்கள்.

'எல்லாம் சரி, ஆற்றில் வெள்ளம் வந்தால் என்ன செய்வீர்கள்?’

''மூணு லட்சம் கன அடி தண்ணி வந்தால்தான் நாங்க இருக்கும் இந்தப் பகுதி தண்ணிக்குள் மூழ்கும். அவ்வளவு தண்ணீர் வர வாய்ப்பே இல்லை. எப்ப வாச்சும் வெள்ளம் வரலாம். இங்கே வந்த நாப்பது வருஷத்தில் ரெண்டே ரெண்டு தடவைதான் வெள்ளம் வந்து, எங்க ஊர் மூழ்கியிருக்கு. மத்தபடி ஒரு பாதிப்பும் இல்லை. அப்புறம், மனுஷங்களை மாதிரி ஆறு மனம்போன போக்கில் நடக்காது. ஆற்றின் போக்கு எப்பவும் ஒழுங்கா, நேராதான் இருக்கும். நாங்கள் மனுஷங்களை நம்புவதைவிட ஆத்தை அதிகமா நம்புறோம்'' என்கிற இவர்கள் மீனவர்கள் என்பதால், கடலைப்போலவே இந்த ஆற்றையும் தெய்வமாக மதிக்கின்றனர்.

அம்மா... நதியம்மா!

-கரு.முத்து, படங்கள்: கே.குணசீலன்

கொள்ளிடம் நடுவே வசிப்பிடம்!