Published:Updated:

ஒலியும் ஒளியும்

ஒலியும் ஒளியும்

தஞ்சாவூரைக் கதிகலங்கடிக்கும் லோக்கல் சேனல் காம்பியர்கள் மூன்று பேர்களை மடக்கியதில்....  

ஒலியும் ஒளியும்

'இந்த மாவட்டத்திலேயே காம்பியரிங்கில் அடக்கமான பொண்ணுன்னா அது நான்தான்’ என்ற முன்னுரையோடு ஆரம்பித்தார் தஞ்சாவூர் 'கேபிள் விஷன்’ சேனலில் 'மங்கையர் சாய்ஸ்’ நடத்தும் புவனா. 'நம்மளோட டார்கெட் வீட்டுல இருக்கிற பெண்கள்தான். அதனால் என் நிகழ்ச்சியில் எப்பவும் டிப்ஸுக்குத்தான் முதல் இடம். கத்தரிக்காய் கூட்டு, அவரைக்காய் பொரியல் என சமையல் டிப்ஸ் மட்டுமில்ல; வீட்டில் நாம செய்யுற சின்னச் சின்ன வேலைகளையும் எப்படி இன்னும் சரியா செய்யுறதுன்னு டிப்ஸ் கொடுப்போம்.'' என்கிற புவனா, பி.எஸ்ஸி கணிதம் இரண்டாம் ஆண்டு மாணவி. ''காலேஜுலயும் நான் பாப்புலர் ஸ்டார் தெரியும்ல... வந்து புவனான்னு கேட்டா காலேஜ் கேட் கூட என்னைக் காட்டும். (ஓப்பனிங் வரியை மறுபடியும் படிச்சுக்குங்க மக்களே!).

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஒலியும் ஒளியும்

ல பேருக்கு காம்பியரிங் என்பது ஒரு தொழில். ஆனால் பிரபு தன்னுடைய பிசினஸ் வளர்ச்சிக்காக காம்பியரிங் செய்கிறார். 'நாலு வருஷமா காம்பியரிங் பண்ணுறேன். 'தங்கமான நேரம்’ ஆரம்பிச்சு காமெடி டைம் வரை வெரைட்டியான பல புரொகிராம் பண்ணிருக்கேன். ஆரம்பத்தில் விளம்பரக் கம்பெனி நடத்தினேன். அதனால் 'கேபிள்விஷன்’ லோக்கல் சேனல் தொடர்பு ஏற்பட்டுச்சு. நான் பேசுற பேச்சைப் பார்த்துட்டு, 'நீயே காம்பியரிங் பண்ணலாமே’ன்னாங்க. நானே டி.வி-யில் வந்து பேசும்போது விளம்பரதாரர்கள்கிட்ட இன்னும் கூடுதலா நெருங்க முடியும். அதனால் நானே பண்ண ஆரம்பிச்சேன். இப்ப தஞ்சாவூர் முழுக்க என்னைத் தெரியும். என்னுடைய 'பிராசர்டெக்’ கம்பெனிக்கு என் முகம்தான் விளம்பரம். தேங்ஸ் டு லோக்கல் சேனல்ஸ்' என்கிறார் தெளிவாக!

ஒலியும் ஒளியும்

'வணக்கம். நான் உங்கள் காயத்த்த்திரி (காம்பியரராமாம்!)’ எனப் புன்னகைக்கும் இந்தச் சின்னப் பெண் திருத்துறைப்பூண்டி தமிழ் டி.வி-யின் தொகுப்பாளினி. ''நான் பண்ற 'மனம் விரும்புதே’ நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ஆடியன்ஸ் இருக்காங்க. எந்த இடத்துக்குப் போனாலும் என்னை ஆச்சர்யமா மத்தவங்க பாக்குறப்ப சந்தோஷமா இருக்கும். தினமும் புதுசு புதுசா 'தீம்’ எடுத்துப் பேசுறது என் ஸ்டைல். காம்பியர் ஆகணும்னா ஒரு டிகிரி முடிச்சு இருக்கணும். அது 'சமாளிப்பிகேஷன் கோர்ஸ்’. அதில் நான் கோல்டு மெடல். உங்களுக்கு ஏதும் அட்வைஸ் வேணும்னா... எனி டைம் என்னை கான்டாக்ட் பண்ணுங்க’ என்கிறார் ஸ்டைலாக!

- சி.சுரேஷ், படங்கள்: கே.குணசீலன்