Published:Updated:

என் ஊர்!

பட்டுக்கோட்டை

என் ஊர்!
##~##
''20

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வருடங்களாயிற்று, நான் சென்னைவாசியாகி. என்னதான் நகர வாழ்க்கையில் தொழில் சார்ந்த சௌகர்யங்களும், நவீன வாழ்க்கைமுறைக்கான சாத்தியங்களும் இருந் தாலும், சுற்றி உள்ள முகங்களிலும் மனங்களிலும் பெரிய ஒட்டுதல் இல்லை என்பதே அரிக்கும் நிஜம்!

பெயரில் மட்டும் நிரந்தரமாகிவிட்ட என் பட்டுக்கோட்டையில், தொடர்ந்து வாழ முடியாமல் போய்விட்ட சூழல் ஓர் ஏக்கத்தை இலவச இணைப்பாக என்றுமே மனதில் விதைத்து வைத்திருக்கிறது. வளமான தாலுகா தலைநகரமான பட்டுக்கோட்டையில், எல்லா மதத்தினரும் வாழ்ந்தாலும், வந்து போகிற ஜனத்தொகையில் இஸ்லாமியர்கள் அதிகம். காரணம், சுற்றிலும் அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை போன்றவை இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் ஊர்கள். பங்குனியில் காப்புக் கட்டித்

என் ஊர்!

திருவிழா. இசை உலகின் அத்தனை ஜாம்பவான்களும் வந்து கச்சேரி செய்வார்கள். இரவு முழுக்க நிகழ்ச்சிகள் இருக்கும். பூ போடுவது, பல்லக்கு, தேரோட்டம் என்று தினமும் நிகழும் திருவிழாக் கொண்டாட்டங்களில், சினிமாபோல போன வருடப் பகைக்குப் பழி தீர்க்கும் ரத்த சம்பவங் களும் தப்பாமல் நிகழும். எல்லா ஊர்களையும் போல பாசக்காரப் பசங்களுக்கு நடுவில் ரோசக்காரப் பசங்களும் அதிகம்.

என் ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி எல்லாமே பட்டுக்கோட்டையில்தான். வீட்டுக்கு நேர் பின்னால் ஆரம்பப் பள்ளி. நடுவில் ஒரு மதில் சுவர் மட்டுமே. பள்ளியில் முதல் மணி அடித்த உடனேயே, மதில் சுவருக்கு ஓடுவேன். அந்தப் பக்கம் அம்மா தயாராக ஹார்லிக்ஸ் வைத்துக்கொண்டு நிற்பார்கள். வாங்கிப் பருகி விட்டு ஓடி வருவேன். இன்று வரை ஆழமாக நட்பு தொடரும் பார்த்திபன், ரவி, ராஜசூரியன் போன்ற நல்ல நண்பர்கள் எனக்கு அமைந்தது அந்த ஆரம்பப் பள்ளியில்தான். பிறகு, அரசினர் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி. சைக்கிளில் பள்ளிக்கு வந்த சிலரில், பளபள அலுமினிய டப்பாவில் புத்தகம் வைத்து எடுத்து வந்த வெகு சிலரில் என் பெயரும் உண்டு. வீட்டில் அநியாயத்துக்குச் செல்லம். கோலிக் குண்டு, பம்பரம், பட்டம் என அந்தந்த சீஸனுக்கு எல்லாம் விளையாடி இருக்கிறேன். இந்த மாதிரி விளையாட்டுக்களில் என்றுமே நான் மக்கு. தோற்பதற்கு என இருந்தவர்களில் ஒருவன்.

பள்ளி வாழ்க்கையின்போது மறக்க முடியாத ஒருநாள்... இந்தி எதிர்ப்புப் போராட்டம்! கொள்கைரீதியாக எதுவும் தெரியாது. ஆனால், மாணவர்கள் ஊர்வலம் என்றதும் உற்சாகமாகக் கலந்துகொண்டேன். வாட்டசாட்டமான பையன்கள் கையில் தார் டப்பாவுடன். என்னைப் போன்ற ஒல்லிப்பிச்சான்கள் எல்லோருக்கும் 'இந்தி ஒழிக!’ என்று அச்சடித்த நோட்டீஸ் விநியோகப் பொறுப்பு. ஊர்வலம் செல்லும் வழியில் என் வீடும் எங்கள் கடையும். அப்பா வின் பார்வையில் பட்டுவிடாமல் பம்மிப் பதுங்கிச் சென்றேன். இரவு தாமதமாக வீட்டுக்கு வந்து, அப்பாவிடம் சரமாரியாகத் திட்டு வாங்கியது இன்றும் நினைவில் பசுமை.

என் ஊர்!

பள்ளியில் தங்க. அன்புவள்ளி என்கிற தமிழ் ஆசிரியையும், வீட்டுக்கு எதிரில் நான் டியூஷன் படித்த சகுந்தலா என்கிற ஆசிரியையும்தான் எனக்குள் உள்ள படிப்பு தாண்டிய திறமைகளைத் தூண்டியவர்கள். சகுந்தலா டீச்சர் அட்டையில் கீரிடம் செய்து தலையில்வைத்து, கையில் அட்டைக் கத்தி தந்து, என்னை கட்டபொம்மனாக்கி வசனம் சொல்லித் தருவார். கல்லூரிப் படிப்பு முடித்ததும் பட்டுக்கோட்டை யில் அப்பாவின் எசன்ஸ் வியாபாரத்தில் சங்கமித்தேன். விதவிதமான மனிதர்கள்,  எண்ணங்கள், பின்னணிகள். வீட்டுக்கு சைக்கிள் மிதித்து கேனில் பால் எடுத்து வரும் பாலன் துவங்கி, கடை ஊழியர்கள், கடைக்கு வரும் கஸ்டமர்கள் அனைவரிடமும் மனம்விட்டுப் பேசுவேன், பேசவைப்பேன். எழுதிய கதை, எழுத இருக்கும் கதை என்று சகலமும் பேசுவேன்.

பட்டுக்கோட்டை முத்தமிழ்ப் பேரவையில் ஈடுபாட்டுடன் செயல்பட்டபோது ஓர் சம்பவம். மூன்று நாட்கள் இயல், இசை, நாடக விழா என்று திட்டம். விழா அன்று டணால் தங்கவேலு குழுவினர் தஞ்சையில் இருந்து 5 மணிக்கு வந்து 6 மணிக்கு நாடகம் துவங்க வேண்டும். அரங்கம் நிறைந்துகொண்டு இருக்கிறது. தஞ்¬சயில் இருந்து போன். 'பாக்கி பணத்தை செட்டில் செய்தால் தான் பட்டுக்கோட்டை வருவோம்’ என்றார்கள். ஏற்பாடு என்னவோ அப்படித்தான். ஆனால், எதிர் பார்த்த வசூல் இல்லை. எதிர்பாராத செலவுகள். ஆபத்பாந்தவர்களாக என் அப்பாவும், பெரியப்பா ரங்கநாதனும் பணத்தைத் தர... ஒருவழியாக மூன்று மணி நேர தாமதத்துடன் நாடகம் நடந்தது.

பட்டுக்கோட்டையில் நசுவினி ஆற்றில் சின்ன வயதில் அப்பாவுடன் சென்று ஓரமாக இறங்கி சொம்பில் நீர் மொண்டு குளிப்பேன். நீச்சல் தெரியாததால் பயம். அந்த ஆறு அப்புறம் எல்லா ஆறுகளையும்போல மணல்வெளி மட்டும்கொண்டு சிறுவர்களின் மைதானம்ஆயிற்று. அங்கே ஓர் ஓரமாக எனது நண்பர்கள் குழுவுடன் சென்று அமர்ந்து நேரம் போவது தெரியா மல் சகலமும் பேசுவோம். 89-ல் சென்னை வந்த நான், அதன் பிறகு அவ்வப்போதுதான் சென்று வருகிறேன். ஒவ்வொரு முறை செல்லும்போதும், ஊரின் அடையாளம் மாறிக்கொண்டே இருக்கிறது. ஊருக்கே அடையாளமாக இருந்த மணிக்கூண்டு இப்போது இல்லை. ஒன் வே, நோ என்ட்ரி எனக் கட்டுப்பாடுகள். நகரத்தின் முக்கியத் தெருக்கள் தி.நகர் ரங்கநாதன் தெருவை நினைவுபடுத்துகின்றன. ரியல் எஸ்டேட் வர்த்தகம் சக்கைப்போடு போடுகிறது. சென்னையில் பார்க்கும் புதிய வகை கார்களை பட்டுக்கோட்டையிலும் பார்க்கிறேன். என் தந்தையும், சகோதரனும், நெருக்கமான நண்பர்கள் பலரும் பட்டுக்கோட்டையில் இருக்கிறார்கள். இந்தக் கட்டுரைக்காக அல்லாமல்... பட்டுக்கோட்டை நினைவுகளை அவ்வப்போது அசை போட்டபடியேதான் இருக்கிறேன்!''

படங்கள்: கே.கார்த்திகேயன், கே.குணசீலன்