Published:Updated:

கருவாடு வாங்கினால் போட்டோ ஃப்ரீ!

கருவாடு வாங்கினால் போட்டோ ஃப்ரீ!

கருவாடு வாங்கினால் போட்டோ ஃப்ரீ!

கருவாடு வாங்கினால் போட்டோ ஃப்ரீ!

Published:Updated:
 ##~##
ரு காலத்தில் நம் மக்களுக்கு எது வாங்க வேண்டும் என்றாலும் சந்தைதான்!  வாங்கவும் சரி, விற்கவும் சரி, தொட்டது தொண்ணூறுக்கும் சந்தையைத்தான் நாடுவார்கள். தெருவுக்குத் தெரு சூப்பர் மார்க்கெட்களும் மால்களும்பெருத்துவிட்ட இந்தக் காலத்தில் அந்தச் சந்தைகள் எல்லாம் எப்படி இருக்கின்றன? சந்தை 'ரவுண்ட்- அப்’புக்கு  ஓவர் டு வல்லம் படுகை!

நாகப்பட்டினம் மாவட்டமும் கடலூர் மாவட்டமும் சந்திக்கும் புள்ளியில் அமைந்து இருக்கிறது  வல்லம்படுகை. இங்கு கொள்ளிடம் ஆற்றங்கரையில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் கூடும் சந்தை ரொம்பவே பிரசித்தம்.

கருவாடு வாங்கினால் போட்டோ ஃப்ரீ!

சந்தைக்கு வெகு தொலைவு முன்னரே வாகன அணிவரிசை நம்மை வரவேற்கிறது. கைகளில் காலி கட்டைப் பையும் துள்ளல் நடையுமாக சந்தைத் திடல் நோக்கிப் பரபரக்கிறார்கள் ஆண்களும் பெண்களும். ''அல்லோ... அல்லோ அந்த டூவீலரை அப்படி நிறுத்தாதீங்க, இன்னும் தள்ளி ஓரமா நிறுத்துங்க!’,’ ''அம்மா, சிதம்பரம் பஸ்ஸுக்கு நிக்குறவங்க ரோட்டை விட்டு ஓரமா நின்னுங்க... அதோ சீர்காழி பஸ் வருது பாருங்க. ஊராட்சி ஆளுங்க பஸ்ஸை நிறுத்தி, ஆளுங்களைப் பாதுகாப்பா ஏத்தி விடுங்கப்பா!'' என்று அதட்டிக்கொண்டே இருக்கிறது ஒரு ஸ்பீக்கர் குரல்.

சந்தைக்குள் நுழைந்ததும் முதலில் வரவேற்பது... வளையல், தோடு என்றுபெண்களின் ஃபேன்சி அயிட்டங்கள் விற்கும் கடைகள்தான்.

கருவாடு வாங்கினால் போட்டோ ஃப்ரீ!

1 ஹேர் பேண்ட் முதல்

கருவாடு வாங்கினால் போட்டோ ஃப்ரீ!

50 செயின் வரை

கருவாடு வாங்கினால் போட்டோ ஃப்ரீ!

100-க்குள் அழகிகள் பேரழகிகள் ஆவதற்கு உத்தரவாதம்!

''கிலோ எழுவது ரூபா... கிலோ எழுவது ரூபா...'' எனக் கூவுகிறார்கள் இனிப்புக் கடைக்காரர்கள். ஜிலேபியும் லட்டும் மிக்சரும் குழந்தைகளுக்காக பொட்டலம் கட்டப்படுகின்றன. அருகில் குருவி ரொட்டி, குச்சி மிட்டாய் வகைகள் உயரமான பாலிதீன் கவர்களில் அடுக்கப்பட்டு இருக்கின்றன.

''ஒன்றக் கிலோ பத்து ரூபா... ஒன்றக் கிலோ பத்து ரூபா!'' என்று தக்காளி விற்பவருக்குப் போட்டியாக, ''ரெண்டு கிலோ 10 ரூபா'' என்று அருகிலேயே ஒரு குரல் உரத்து ஒலிக்கிறது.

அதிகமான கடைகள், காய்கறிக் கடைகள்தான். சனிக்கிழமை வடலூரிலும் திங்கட்கிழமை ஆண்டிமடத்திலும் நடக்கும் சந்தை விற்பனை போக, வாகனங்களில் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு,  இங்கு வந்து கடை போடுகிறார்கள் வியாபாரிகள்.

கருவாடு வாங்கினால் போட்டோ ஃப்ரீ!

''வியாபாரம் நல்லா நடந்தா, நல்ல லாபம் கிடைக்கும். இல்லீன்னா சாயந்தரமா அசல் விலைக்கே வித்துட்டுக் கிளம்பிடுவோம். எப்படிப் பார்த்தாலும் நானூறு, ஐநூறு கைல நிக்கும்!''  என்கிறார் வடக்குத்தில் இருந்து வந்து இருந்த கனகாம்பரம்.

கருவாடு வாங்கினால் போட்டோ ஃப்ரீ!

சிறுவன் மணிகண்டன் கடையில் கூட்டம் அலைமோதுகிறது. காரணம்

கருவாடு வாங்கினால் போட்டோ ஃப்ரீ!

2,

கருவாடு வாங்கினால் போட்டோ ஃப்ரீ!

5,

கருவாடு வாங்கினால் போட்டோ ஃப்ரீ!

15 விலையில் அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் பொட்டலங்கள். கடுகு, வெந்தயம், சீரகம், சோம்பு, வெந்தயம், கசகசா ஆகிய மசாலா பொருட்கள் எல்லாம் இரண்டே ரூபாய். ஆளாளுக்கு இரண்டு பொட்டலங்களை எடுத்து போட்டுக்கொள்கிறார்கள். பொட்டுக் கடலை, கடலைப் பருப்பு, மிளகாய்த் தூள் போன்றவை

கருவாடு வாங்கினால் போட்டோ ஃப்ரீ!

5,

கருவாடு வாங்கினால் போட்டோ ஃப்ரீ!

15 மட்டுமே!

அடுத்த வரிசையில் கருவாட்டுக் கடைகள். பொருவா கருவாட்டைக் கூறுகட்டி, 'கூறு

கருவாடு வாங்கினால் போட்டோ ஃப்ரீ!

20-க்கு’ விற்கிறார் சின்னப் பொண்ணு. சுறா, பாறை கருவாடு எல்லாம் கிலோ

கருவாடு வாங்கினால் போட்டோ ஃப்ரீ!

150, சென்னக்குன்னி படி

கருவாடு வாங்கினால் போட்டோ ஃப்ரீ!

30. ''இந்த வெயில் நாள்ல பழையதுல மோரை ஊத்தி, சென்னக்குன்னி பொடி தொட்டு சாப்பிட்டா அதுக்கு ஈடு ஏது?'' என்று ஒரு 'சீனியர் சிட்டிசன்’ சப்புக் கொட்ட, சென்னக்குன்னிக்கு 'ஆஃபர்’ அதிகமாகிறது.

கருவாடு வாங்கினால் போட்டோ ஃப்ரீ!

அப்போது, 'கூறு கருவாடு இருபது ரூபா’ என்று கூவிக்கொண்டு இருந்த பெரியம்மா, நாம் புகைப்படம் எடுப்பதைக் கவனித்ததும், ''கருவாடு வாங்கினா, போட்டா ஃப்ரீரீரீரீ!'' என்று கூவ, ''குசும்பைப் பார்த்தியா இதுக்கு!'' என்று அந்தப் பாட்டியின் மோவாய்க்கட்டையில் இடிக்கிறார், அருகில் இருக்கும் ஒரு பெண்.

காய்கறிக் கடையில் முட்டைக்கோஸைத் தூக்கிப்பார்த்து விலை கேட்டுக்கொண்டு இருந்தார்கள் கணேசனும் அவர் மனைவியும். ''நல்ல வெயிட்டா இருந்தா ஃப்ரெஷ்ஷா இருக் குன்னு அர்த்தம்!''  நமது பார்வையின் அர்த்தம் புரிந்து கணேசன் கொடுத்த விளக்கம் இது.

சந்தையை ஒரு சுற்று சுற்றி வந்து, தேவையானதை வாங்கிக் கொண்டு,  திருப்திப் பெருமூச்சுவிட்டார்கள் சுமதியும் லீலாவும். ''சூப்பர் மார்க்கெட்ல அவசரத்துக்கு வாங்கலாம். ஆனா, சந்தையில வாங்குற சந்தோஷம் எங்கேயும் வராது. வாரம் தவறாம இங்க வந்துடுவோம் நாங்க!'' என்று முகம்கொள்ளாத மகிழ்ச்சி யுடன் விடைபெறுகிறார்கள்.

சந்தையைவிட்டு வெளியேறி வந்த பிறகும்,  வெகுநேரம் வரை காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது  ''கிலோ பத்து ரூபா, கூறு இருபது ரூபா... வாண்ணே... வாக்கா... வா, வா, வா...'' குரல்கள்!

- கரு.முத்து படங்கள்: எம்.ராமசாமி