Election bannerElection banner
Published:Updated:

'நீங்க நல்லவரா... கெட்டவரா?'

பாம்புக்குத் தெரியும்!

##~##
வருடைய பெயர் மெல்வின் செல்வன். ஆனால், ஊரில் 'ஸ்நேக்’ செல்வன் என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். தஞ்சாவூர் பகுதியில் யார் வீட்டுக்குள் பாம்பு புகுந்தாலும், அடுத்த அழைப்பு மெல்வினுக்குத்தான் செல்லும். ஆனால், மெல்வின் பாம்பு பிடிப்பவர் அல்ல; அவர் ஓர் ஆராய்ச்சியாளர். பாம்புகளை லாகவமாகப் பிடிக்கத் தெரிந்துவைத்து இருக்கிறார்.

'என் அப்பா ஞானச்செல்வனை எல்லாரும் 'பாம்பு’ செல்வன்னுதான் கூப்பிடுவாங்க. ('பாம்பு ஃபேமிலியா நீங்க?’) அவரும் பாம்பு ஆராய்ச்சியாளர் தான். தன் வேலை விஷயமா வெளிநாடுகளுக்குப் போகும் போதுகூட, அங்கே உள்ள பாம்புகளைப் பிடிச்சு ஆராய்ச்சி பண்ணிட்டு இருப்பார். இதெல்லாம் பார்த்து வளர்ந்த எனக்கு பாம்புகள் மேல உள்ள பிரியம் ரத்தத்துலேயே ஊறிடுச்சு!'' என்றவரிடம் பாம்புகளைப் பற்றிய நமது  சந்தேகங் களைக் கேட்டோம்.

'நீங்க நல்லவரா... கெட்டவரா?'

''பாம்பு பழி வாங்குமா?''

'நீங்க நல்லவரா... கெட்டவரா?'

''அதெல்லாம் சினிமாவில் மட்டும்தான்.  சொல்லப்போனா, பாம்புகளின் நினைவுத் திறன் மிக மிகக் குறைவு. 10 நிமிஷங்களுக்கு மேல் பாம்புகளால் எந்த விஷயத்தையும் ஞாபகம் வெச்சுக்க முடியாது. ஆனா, ரொம்ப சென்சிட்டிவ். ஒருத்தரைப் பார்த்த மாத்திரத்தில்... இவன் நம்மை துன்புறுத்துவானா, மாட்டானான்னு பாம்புகள் கணிச்சுடும். அவனால் ஆபத்துன்னு தெரிஞ்சாதான், படம் எடுத்துச் சீறுவது, விஷப் பல்லால் தீண்டுவதுன்னு ஆக்ரோஷம் அடையும்!

கோபமா சீறிட்டு இருக்கும்  பாம்புகள்கூட நான் போய் பிடிக்கும்போது பெட்டிப் பாம்பா அடங்கிடும். அதே சமயம் தொழில்முறையாப் பாம்பு பிடிக்கிறவங்களைக் கண்டால்... சீறும். ஏன்? தன்னைக் கொல்லும் நோக்கத்தோடு நெருங்குபவர்களை இனம் காணும் அளவுக்கு பாம்புகளின்  உள் உணர்வு செம ஷார்ப்!''

''நீங்க பாம்பைப் பிடிச்சு என்ன பண்ணுவீங்க?''

''பாதுகாப்பான இடங்களில் நாங்களே கொண்டுபோய் விட்டுடுவோம்!''

''ஆனா, பாம்புன்னாலே விஷம்தானே நம்ம ஞாபகத்துக்கு வந்து மிரட்டுது?''

'நீங்க நல்லவரா... கெட்டவரா?'

''எல்லாப் பாம்புகளும் விஷத்தன்மை கொண்டது அல்ல; இந்தியாவில் மொத்தமே 14 வகையான பாம்புகள்தான் விஷத்தன்மை உடையவை. அதுவும் நம்ம தஞ்சாவூர், திருச்சிப் பகுதியில் காணப்படும் பாம்புகளில் நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டைப் பாம்பு ஆகியவை மட்டும்தான் விஷத்தன்மை உடையவை!''

''உங்க ஆராய்ச்சியின் நோக்கம் என்ன?''

''மக்களிடம் சுற்றுச்சூழல் விழிப்பு உணர்வை உருவாக்கணும். பாம்புகள் மீதான அச்சத்தைப் போக்கணும். ஓரளவுக்கு நினைச்சதை சாதிச்சிருக்கேன். ஆனா, இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு!''  என்கிறார் தன்மையாக!

-  க.ராஜீவ் காந்தி

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு