Published:Updated:

பாரதி மண்ணில் இளைய பாரதிகள்!

பாரதி மண்ணில் இளைய பாரதிகள்!

பாரதி மண்ணில் இளைய பாரதிகள்!

பாரதி மண்ணில் இளைய பாரதிகள்!

Published:Updated:
##~##
1918
-ம் ஆண்டு. ஆங்கிலேய அரசாங்கம் வாரன்ட் பிறப்பித்து, தமிழகம் முழுவதும் பாரதியைத் தேடிக் கொண்டு இருந்த நேரம். புதுவையில் அப்போது  தலைமறைவாக இருந்தார் பாரதி.

அந்தக் காலகட்டத்தில், தஞ்சாவூர் ஜில்லாவிலேயே செல்வாக்கு மிக்க குடும்பங்களில் ஒன்றாக இருந்தது, கொடியாலம் வா.ரெங்கசுவாமி அய்யங்கார் குடும்பம். சென்னை கவர்னர்கள் அந்த நாளில் திருச்சிக்கோ, தஞ்சாவூருக்கோ வந்தால் முதலில் சந்திப்பது  ரெங்கசுவாமி குடும்பத்தாரைத்தான். அரவிந்தரின் மேல் அளவு கடந்த பக்தியும் பாரதியாரிடம் வாஞ்சையும் வைத்திருந்தவர் ரெங்கசுவாமி. மன்னார்குடிக்கு அருகில் உள்ள மேல நாகை கிராமத்தில் ரெங்கசுவாமிக்கு  ஓரு பங்களா இருந்தது. மாலை வேளைகளில் அவர் அங்கு செல்வார்.

பாரதி மண்ணில் இளைய பாரதிகள்!

அன்றைய தினம் அப்படி அவர் அங்கு சென்று இருந்த போது, வழுக்கைத் தலையுடன், மீசை இல்லாமல், பித்தான் இல்லாத சட்டையின் மேல் கோட் அணிந்து, இடுப்பில் பஞ்சகச்சம் கட்டி இருந்த ஒருவர் குதிரை வண்டியில் வந்து பங்களா முன் இறங்கினார். ரெங்கசுவாமிக்கு சட்டென அவரை அடையாளம் தெரியவில்லை. உற்றுக் கவனித்தால்... பாரதி!

பாரதி மண்ணில் இளைய பாரதிகள்!

ஆனந்த அதிர்ச்சியை அடக்கிக் கொண்ட ரெங்கசுவாமி தன் நண்பர் களிடம், ''இவர் என் ஸ்நேகிதர் சுந்தரம் அய்யர். இங்குதான் கொஞ்ச நாள் தங்கி இருப்பார்!'' என்று சொன்னார்.

பாரதி அங்கு ஒரு வாரம் தங்கி இருந்தார். அப்போது அவர் எழுதிய மறக்க முடியாத பாடல்களில் ஒன்று 'பாருக்குள்ளே நல்ல நாடு’.

அந்த நாட்களை நினைவுகூர்ந்த ரெங்கசுவாமி அய்யங்காரின் மகள் வழிப் பேரனும் காவேரி டெல்டா விவசாய ஆராய்ச்சி மன்றத் தலை வருமான மன்னார்குடி எஸ்.ரெங்க நாதன் கூறுகிறார்:

''மன்னார்குடி நகரம் நிறைய வரலாற்றுச் சுவடுகளைக்கொண்டது. ஆனால், அவற்றில் பல இன்னும் வெளிச்சத்துக்கு வரவில்லை. விடுதலைப் போராட்ட வீரரும் பாரதியின் சீடருமான  வ.ரா. என்கிற வ.ராமசாமி எழுதிய பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் 'சித்திர பாரதி’. வ.ரா.வின் இந்தப் புத்தகத்தால்தான் பாரதி இங்கு தங்கியதே நமக்குத் தெரியும்.  இன்னும் நிறைய செய்திகள் இருக்கின்றன. ஆனால், அவை எல்லாம் எவராலும் ஆவணப்படுத்தப் படவில்லை!''

பாரதி தடம் பதித்த மண்ணுக்கு இன்றைய எழுத்தாளர்களை அழைத்துச் சென்றால்? மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த இளம் கவி ஞர்கள் - எழுத்தாளர்கள் தங்கபாபு, செழியன், பரிதி பாண்டியன், நடேச மகரந்தன், மணி கணேசன், ரவிமுத்து, கலைபாரதி ஆகியோரை அழைத்துச் சென்றோம்.

மன்னார்குடியில் இருந்து சுமார் நான்கு கி.மீ தொலைவில் உள்ள அந்த இடம் உரிய பராமரிப்பு இன்றி, மண் மேடுபோல காட்சி அளித்தது. ஒரே ஓர் எச்சமாக தியான மண்ட பம் மட்டும் மேற்கூரை இன்றி வெறுமையாகக் காட்சியளித்தது.

பாரதி மண்ணில் இளைய பாரதிகள்!

''ஒரு தனி மனிதனின் அனல் வரிகளுக்கு ஓர் அரசாங்கமே பயந்தது என்றால் அவனுடைய வார்த்தைகளில் எவ்வளவு வீரியம் இருந்திருக்கும்? ஆனால், இன்று இந்த வரலாற்றுக் கட்டடம் மண் மேடாகக் காட்சி அளிக்கிறது. வரலாற்றைப் பாதுகாப்பதில் நாம்தான் எத்தனைப் பின்தங்கி இருக்கிறோம்?'' என்று ஆதங்கப்பட்டார்கள் நடேச மகரந்தனும் தங்கபாபுவும்.

''ரெங்கசுவாமி அய்யங்காரின் மேலநாகை பங்களாவில் அப்போதே கம்பி இல்லாத தொலைபேசி வசதி இருந்திருக்கிறது. மேலும், நான்கு அடுக்குகள்கொண்ட மாளிகையாக அதைக் கட்டி இருக்கிறார். நாகை முனிவர் என ஒருவர் இங்கு வசித்ததாகவும் சொல்வது உண்டு. ஆனால், முறையான ஆவணங்கள் இல்லாததால் நிரூபிக்க இயலவில்லை. திருவாரூர் மாவட்டத்தில் வாழ்ந்த தலைவர்களைப் பற்றி தகவல் சேகரித்து, விரைவில் புத்தகமாக வெளியிட வேண்டும்!'' என்றனர் கலைபாரதியும் ரவிமுத்துவும்.

'எழுச்சி’, 'பசி’ சிறு பத்திரிகைகளின் ஆசிரியர் பரிதி பாண்டியன், ''மன்னார்குடி அருகே உள்ள சேரன் குளத்தில் பிறந்தவர் ஆர்யா என்றழைக்கப்படும் பாஷ்யம் அய்யங்கார். இவர்தான் 'பாரத மாதா’ மாடலை உருவாக்கி யவர். மேலும் வீரம் சொறிந்த மீசையுடன் இருக்கும் பாரதியின் ஒவியத்தையும் வரைந்தவர் ஆர்யா. செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் மீது ஏறி ஆங்கிலேயக் கொடியை இறக்கிவிட்டு நமது தேசியக் கொடியைப் பறக்கவிட்ட தீர வரலாறு அவருடையது. இவர்களுடைய வரலாறும் முழு மையாகப் பதிப்பிக்கப்படவில்லை!'' என்றார்.

செழியனும் மணிகணேசனும் ''நூற்றாண்டு கண்ட நூலகம், காந்தி வருகை தந்த வீடு என மன்னார்குடியின் வரலாற்றைப் பறைசாற்ற எவ்வளவோ இருக்கின்றன. அவற்றை எல்லாம் ஆவணப்படுத்தும் பணியில் நாம் ஈடுபட வேண்டும்!'' என்றார்கள் உறுதியான குரலில்.  

- சி.சுரேஷ், படங்கள்: கே.குணசீலன்